சிந்தனைஒளி

யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?  இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம், தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம், சொந்தத்தை நம்பி நீ இருக்காதே, பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே. விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்...

ஒளிர்வு-(35),- புரட்டாதி 2013:-

உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம். ...

மனநல மருத்துவர் சந்தானம்

'கண்ணா லட்டு திண்ண ஆசையா' என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே கூட்டணி தற்போது மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விஷாகா, விடிவி கணேஷ் என இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'வாலிப ராஜா'. கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சாய்கோகுல் ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடிக்கிறார். விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாக நடிக்கிறார்....

"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு": ஒரு விளக்கம்

  April 13 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள்  சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக  நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை  கிழே தருகிறேன். போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர்,...

ஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...

இன்று ஜி.பி.எஸின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம். ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை...

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது

மேட்ரிட், ஸ்பெயின் : மாற்று கல்லீரல், மாற்று இருதயம்  என்று மாற்று உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இனி பழையதாகி விடும். எந்த உறுப்பை இழந்தாலும் சம்பந்தப்பட்டவர் உடலிலேயே ‘ஸ்டெம் செல்’ எடுத்து, சம்பந்தப்பட்ட உறுப்பை உருவாக்கி பொருத்தும் நவீன எளிய சிகிச்சைகள் வரும் காலம் நெருங்கி விட்டது.    ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய தலைவர் மேனுவல் செர்ரானோ தலைமையிலான மருத்துவ நிபுணர்  குழு...

நல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி?

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது. ஆசை நேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையான எண்ணம். நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். புதிய...

எவருக்கு?எது? அநாகரிகம்.

சம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால், ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. சீனாவில் கடிகாரத்தை...

கடவுள் தண்டிப்பாரா?

க இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர,...

நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.  வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த...

வியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா!!!

இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம். கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும்....

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை

நவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது. Bacon, sausage, and ham  போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள். ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிலும் பறவையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள்...

சிந்தனைஒளி

* மலையை சாய்க்கும் வல்லமை மௌனத்திற்கே உண்டு! * சிறியது பெரியது எனும் அளவுகோல் உதவிக்கு இல்லை! * தெரியாததை தெரியாது என்று உணர ஆரம்பியுங்கள்! * பணிவு என்பதுநீங்கள் நினைப்பது போல் பலவீனம் அல்ல –    பலம்! * வாழ்வில் நன்றி உணர்வு நிறைந்தவன் மகிழ்ச்சி உடையவன்! ...