சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இது ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படமாகும். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12–ந் தேதியன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சடையான் படத்திற்காக இதுவரை ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் கோச்சடையான், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையாக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ரா ஒன்னுக்குப் பிறகு ‘கோச்சடையான்’ தொடங்கப்பட்டது. கோச்சடையான் என்றால் நீண்ட தலைமுடி கொண்ட அரசன் என்று பொருள். தமிழக வரலாற்றுப் பின்னணி கொண்ட கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். எல்லா ரஜினி படங்களையும் போல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிசினஸ். இந்நிலையில் கோச்சடையான் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் வாயிலாகவும் அவர்கள் வருமானத்தை அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளூக்கு மத்தியில் நேற்று வெளியானது.நேற்று இரவு மட்டும் 6 லட்சம் ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து உள்ளனர்.காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடபட்டது. 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர்.
விஜய்-அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர். ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள் ளார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் யு டியூப் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப், ஆதி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யு டியூபில் வெளியிடப்பட்டது . இது குறித்து ரசிகர்கள் கூறியது:
No comments:
Post a Comment