சிந்தனைஒளி


* மலையை சாய்க்கும் வல்லமை மௌனத்திற்கே உண்டு!
* சிறியது பெரியது எனும் அளவுகோல் உதவிக்கு இல்லை!
* தெரியாததை தெரியாது என்று உணர ஆரம்பியுங்கள்!
* பணிவு என்பதுநீங்கள் நினைப்பது போல் பலவீனம் அல்ல –    பலம்!
* வாழ்வில் நன்றி உணர்வு நிறைந்தவன் மகிழ்ச்சி உடையவன்!

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, September 22, 2013

    காலத்திற்கும் நேரத்திற்கும் ஒத்த உங்கள் சிந்தனை ஒளிக்கு முதல் நன்றிகள்! சென்ற முறை சிந்தனை ஒளியில் கேட்ட கேள்விக்கு ,அதாவது "-புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா?
    நீ முடிவு செய்!-"என்பதற்கும் "-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே-"என்பதற்கும்"-மலையை சாய்க்கும் வல்லமை மௌனத்திற்கே உண்டு!-"என்ற சிந்தனை ஒளியின் படி "பணிவு என்பதுநீங்கள் நினைப்பது போல் பலவீனம் அல்ல–பலம்!" என்று இன்று நிருபிக்கப்பட்டுள்ளது.அதனால் "வாழ்வில் நன்றி உணர்வு நிறைந்தவன் மகிழ்ச்சி உடையவன்!"ஆகிறான்!!சென்ற முறை கனடாவிலிருந்து ஒரு கடிதம்......17-08-2013 இற்கு நான் கருத்து தெரிவிக்கும் போது:
    "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்"

    இங்கு கூத்தாடிகள் யார்? பண்பாட்டை சிதைப்பவர்களா?ஒற்றுமையை குறைத்து அதனால் தாம் இலாபம் அடைபவர்களா?தமது சமுகத்தின் திறனை/பலத்தை/ஒற்றுமையை/வளத்தை வளர்க்க பாடுபடாவிட்டால் அதன் பின் இந்த எலி தலைகளால் யாருக்கு பிரயோசனம்? என்று கூறி இருந்தேன்.

    மேலும் "சிறியது பெரியது எனும் அளவுகோல் உதவிக்கு இல்லை!" ஆகவே உங்கள் சமுகத்திற்கு நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களால் இயன்ற வழியில் உதவுங்கள்.அது மட்டும் அல்ல "தெரியாததை தெரியாது என்று உணர ஆரம்பியுங்கள்!".அப்படி உணரும் போது நீங்கள் அறியும் வாய்ப்பு கூடுகிறது.அதனால் பொய்யையும் குளறுபடிகளையும் உண்மை அறிந்து மௌனமாக தவிர்த்து கொள்ளலாம்.அப்படி தவிர்த்ததினால் தான் "-மலையை சாய்க்கும் வல்லமை மௌனத்திற்கே உண்டு!-என்று நிருபித்தார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.நன்றிகள்.

    ReplyDelete