தொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி?

தொலைதூர உறவுகள் என்றுமே வெற்றிகரமாக நிலைப்பதில்லை என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது.

ஆனால் உறவுச்சிக்கல் நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். அதிலும் தொடர்பில் இருக்கும் இருவரும் தங்களை எது இணைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்வதிலும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் முறைகளிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்.

தெளிவாக முடிவு எடுங்கள்

உறவு ஆரம்பிக்கும் போதே உங்கள் உறவு குறித்த சில விஷயங்களை இருவரும் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் உறவு காதலா, ஈர்ப்பா, திருமணம் நிச்சயிக்கப்பட்ட உறவா என்பதையும், உங்களின் இந்த உறவு ஒருவருடன் மட்டுமே இருக்கிறதா என்பதில் எல்லாம் தெளிவாக இருங்கள். இவை முடிவு செய்வதற்கு கடினமான விஷயங்கள் தான் என்றாலும், எதிர்காலத்தில் பல பிரச்சனைகளையும், மன வலிகளையும் தவிர்க்க உதவும்.

தொடர்பில் இருங்கள்

ஸ்கைப் வீடியோ சாட்டில் தினமும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் என முடிந்த அளவிற்கு அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். ஒருவரின் தினசரி வாழ்க்கையில் மற்றொருவர் கண்டிப்பாக பங்கு பெறுவதென்பது அவசியம்.

உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்

தினமும் பார்க்க முடியாததால், எதாவதொரு வழியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்பு கொண்டு உணர்வுபூர்வ தொடர்பை தக்க வைத்தல் அவசியம். நீண்ட நெடிய அழைப்புகள் கூட தேவையில்லை. சிறிய சிறிய மகிழ்ச்சிகளை, துக்கங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டாலே போதுமானது. அறிவுரை கேளுங்கள். அடிக்கடி தொலைபேசியில் அழைக்க முடியாதவர்கள், மெசேஜ் அனுப்புதல், வாய்ஸ் மெயில் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

பிடித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்

பொதுவாக உங்கள் இருவரையுமே ஈர்க்கும் விஷயங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்கள் இருவருக்குமே பிடிக்கிறதென்றால், அதை தனித்தனியாகப் பார்த்து, கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.

ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதை தவிர்த்திடுங்கள்

எல்லோருக்கும் தனிமனித ஆசைகள் உண்டென்பதால் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவரின் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கும் வரையில் தான் எந்த உறவுமே நிலைக்கும். 3000 மைல்கள் தள்ளியிருந்தாலும், அடுத்தடுத்த தெருக்களில் இருந்தாலும், ஒரே படுக்கையை பகிரும் திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், நம்பிக்கை இல்லாத எந்த உறவும் தோல்வியில் முடியும். எனவே ஒருவரை ஒருவர் முழுதாக நம்புவது தான் எந்த உறவையும் நீடிக்கச் செய்ய ஒரே வழி.

எதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுங்கள்

எதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுவது அவசியம். எவ்வளவு காலத்திற்கு இருவரும் தொலைதூரத்தில் இருக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவின்றி இருந்தீர்கள் என்றால், நீங்களாகவே அதற்கு ஒரு காலவரையறையை நிறுவிக் கொண்டு, அதை நோக்கி உழையுங்கள்.

நம்பிக்கையோடு இருங்கள்

கால ஓட்டத்தில் உறவுகள் உட்பட எல்லா விஷயங்களுமே நலம் பெறும் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.

நேரில் சந்தித்துக் கொள்ளுங்கள்

தொலைபேசியில் மட்டுமே ஒரு உறவு நீடித்திருக்க முடியாது. முடிந்தபோதெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவுதல் அவசியம்.

பொறாமையை தவிர்த்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

அனைவருமே, துரோகம் நிரூபிக்கும் வரையில் நம்பிக்கைக்கு உரியவர்களே என்ற முன் முடிவோடு ஒரு உறவில் இருப்பது எப்போதும் நன்மை அளிக்கும். முக்கியமாக உங்கள் துணையை அளவுக்கதிகமாக கேள்விகள் கேட்காதீர்கள். அவரது நண்பர்களுடன் வெளியே செல்லும் போதோ, உங்கள் அழைப்பை ஏற்காத போதோ சந்தேகப்படாதீர்கள். குறிப்பாக தொலைதூரத்தில் இருப்பதாலேயே உங்கள் வாழ்க்கை மற்றொருவரின் வசமாகிவிடும் என நினைக்காதீர்கள்.

 பரிசளியுங்கள்

உங்களுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பொருளை உங்கள் துணைக்கு பரிசளியுங்கள். இதனால் மகிழ்ச்சியுடன் உங்களுடன் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அப்பொருட்கள் அவர்களுக்குத் தரும்.

 

உறவு நிபுணர்களிடமிருந்து தொலைதூர உறவுகளை எப்படி வெற்றிகரமாக நிலைக்க வைப்பது என்பது குறித்து சில ஆலோசனைகள் இவை . இவற்றினைப்  படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தொலைதூர உறவுகளை வலுப்படுத்தி, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.

தொகுப்பு:வளவன்




No comments:

Post a Comment