உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
பூமிக்கு இரண்டு சந்திரனா??
தற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகை பழக்கத்தை விட வேண்டுமா??
தினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது,
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.
ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?
இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே . உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.
வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130 முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310 முறையும் அதிர்கிறது.
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.
பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.
நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.
குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.

vedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இது ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படமாகும். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12–ந் தேதியன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சடையான் படத்திற்காக இதுவரை ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் கோச்சடையான், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையாக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ரா ஒன்னுக்குப் பிறகு ‘கோச்சடையான்’ தொடங்கப்பட்டது. கோச்சடையான் என்றால் நீண்ட தலைமுடி கொண்ட அரசன் என்று பொருள். தமிழக வரலாற்றுப் பின்னணி கொண்ட கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். எல்லா ரஜினி படங்களையும் போல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிசினஸ். இந்நிலையில் கோச்சடையான் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் வாயிலாகவும் அவர்கள் வருமானத்தை அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளூக்கு மத்தியில் நேற்று வெளியானது.நேற்று இரவு மட்டும் 6 லட்சம் ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து உள்ளனர்.காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடபட்டது. 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர்.
விஜய்-அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர். ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள் ளார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் யு டியூப் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப், ஆதி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யு டியூபில் வெளியிடப்பட்டது . இது குறித்து ரசிகர்கள் கூறியது:
video:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே....
கர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.
கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை நமக்கு பலர் பலவிதத்தில் சொல்வார்கள். அதில் வயிற்றை வைத்து குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது, விமானத்தில் செல்ல கூடாது என்பது, ஆவி குளியல் கூடவே கூடாது என்றெல்லாம் கூறுவர். அதில் எது உண்மை எது பொய் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. அதைப் பற்றி இங்கு தீர்த்து கொள்வோமா...
கட்டுக்கதை: கர்ப்பிணியின் வயிற்றின் வடிவம். வயிறு பெரியதாக இருந்தால் பெண் என்றும், சிறியதாக இருந்தால் ஆண் என்றும் கூறுவர்.
உண்மை: இந்த ஊகத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் தசை அளவு, அமைப்பு, கரு நிலை, தோரணை மற்றும் வயிற்றின் அடிப்படை அளவு இதை பொறுத்தே இந்த வடிவம் வருமே தவிர, குழந்தையைப் பொறுத்து இல்லை என்று கூறுகின்றனர்.
கட்டுக்கதை: உப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பையன் என்றும், இனிப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பெண் குழந்தையை குறிக்கின்றது என்பது.
உண்மை: ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், பசியையும், ருசியையும் வைத்து குழந்தையின் பாலியலை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.
கட்டுக்கதை: கர்ப்பிணியின் தொப்பை மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அது ஆடும் திசையை வைத்து குழந்தையின் பாலியலை கணிப்பது. அது ஒரு வட்டத்தில் நகருமெனில் பையன் என்றும், முன்னும் பின்னுமாக நகருமெனில் பெண் என்றும் கூறுவர்.
உண்மை: இது உண்மை இல்லை என்றாலும், விளையாட்டாக இதை செய்யலாம்.
கட்டுக்கதை:கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அவதியால் பாதிக்கப்படுகின்றீர் என்றால் குழந்தைக்கு அதிக முடி என்று அர்த்தம். நெஞ்செரிச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உங்கள் குழந்தையின் முடியை வைத்து இது வருவது இல்லை.
உண்மை: நெஞ்செரிச்சலால் மிகவும் கஷ்டப்பட்டும் கூட, பெண்கள் வழுக்கை குழந்தைகளை பெற்றனர்.
கட்டுக்கதை: உங்கள் அம்மாவிற்கு எளிதாக கர்ப்பம் மற்றும் பிரசவம் நடந்தது என்றால், உங்களுக்கும் அதுபோல் நடக்கும்.
உண்மை: உங்கள் பிரசவத்திற்கும், கர்ப்பத்திற்கும் உங்கள் பரம்பரை அம்சத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம்.
கட்டுக்கதை: மல்லாந்து படுப்பதால் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு என்பது என்று சொல்வது.
உண்மை: இந்த நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையை பாதிக்காது என்பதால் ஒரு நிலையில் படுக்கலாம். அதிலும் இடது புறம் படுத்தால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் சீராக இருப்பதாக அறியப்படுகின்றது. ஆகையால் இடதுபுறம் படுப்பது நல்லது.
கட்டுக்கதை: உடலுறவு குழந்தையை பாதிக்கும் என்று கூறுவதுண்டு.
உண்மை: அடிவயிற்றை சுற்றி பனிக்குடப்பையின் தோல் ஏழு அடுக்குகள் கொண்டது. அவை உங்கள் குழந்தையை பாதுகாப்பதற்காக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இவை ஒருவித சளி போன்ற படிமத்தை உற்பத்தி செய்து, கருப்பையினை கிருமிகள் தாக்காமல் சுத்தமும் செய்கின்றன. ஆகவே உங்கள் மருத்துவர் கூறினால் மட்டுமே பாலியல் தொடர்பை தவிர்க்கவும், இல்லையென்றால் தேவையில்லை.
கட்டுக்கதை: முதல் குழந்தை எப்போதும் தாமதமாகவே வரும்.
உண்மை: 60 சதவீத பிரசவம் கணிக்கப்பட்ட தேதிக்கு பின் வரும், ஐந்து சதவீதம் கணிக்கப்பட்ட நாளில் வரும், முப்பத்தி ஐந்து கணிக்கப்பட்ட நாளுக்கு முன்பேயே வரும். எனவே குழந்தையின் பிரசவ நேரத்தை, உங்கள் மாதவிடாய் சுழற்சியே திட்டமிடுகிறது. அது குறைவாக இருந்தால், சீக்கிரம் பிரசவம் வரும், அது நீட்டிப்பாய் இருந்தால், பிரசவம் தாமதமாக இருக்கும். சரியாக 28 நாட்கள் இருப்பின் குறித்த நேரத்தில் நடைபெறும்.
கட்டுக்கதை: முதல் அல்லது கடைசி மூன்று மாதங்களில் விமானத்தில் பயணிக்க முடியாது.
உண்மை: மீண்டும் தவறு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சில விமான நிறுவனங்கள், உங்களது இறுதி மூன்று மாதங்களில் விமானத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவர். ஏனெனில் விமானத்திலேயே உங்களுக்கு பிரசவம் ஏற்படும் என்பதால் மட்டுமே.
கட்டுக்கதை: கர்ப்பமாக இருக்கும் போது, சூடான குளியல் எடுத்து கொள்ளக்கூடாது.
உண்மை: இது உண்மை தான். பிரசவ காலத்தில் நீராவிக்குளியல், சுடுநீர் தொட்டி குளியல் போன்ற குளியல்களை கூடாது. மேலும் கர்ப்பக்காலத்தில் 102 டிகிரிக்கு மேல் உங்களின் உடலின் வெப்பநிலை இருக்கக்கூடாது.

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!
google car
ஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.
இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.
இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
பென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா?
pendrive[usp]:
Floppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Floppy ல் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து ப்ளாஷ் ட்ரைவிற்கு வயதாகி விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதனை எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கணனியின் CPU வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள் பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப ப்ளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
பென்டிரைவ் இனை கணனியில் பொருத்தி உபயோகித்த பின் பென்டிரைவ் இன் இயக்கத்தை நிறுத்தாமல் அதாவது Eject பண்ணாமல் பென் டிரைவ் ஐ நீக்காதீர்கள்.

மோப்ப நாய்களை கொண்டு குற்றவாளிகளை மட்டுமல்ல, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்
தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய குழு சாக்கோ லேட், லாம் பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
கர்பபை புற்றுநோயை உருவாக்கும் செல் கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின் னர் கர்பபை புற்று நோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளி யேறும் சிறுநீரில் கர்பபை புற்று நோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்த னர்.
அவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய் த பெண்களின் ரத்தத்தை பரி சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப பை புற்றுநோய் இருந்தது தெரியவந்த து. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்து ள்ளனர்.

கண்களை பாதுகாப்பது எப்படி?
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷ மாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு.
நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
சுருக்கங்கள் மற்றும் கோடுகள்
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம்.
கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம்.
கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஓயில் உபயோகிக்கலாம்.மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.
தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினம் செய்யவும்.
கருவளையம்:
சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல.
இதை ஆரம்பத் திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.
எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை.
பகல் நேரத்தில் உள்ளங் கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.
கண்களை இறுக மூடவும். பிறகு அகல மாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக் கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றி யுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.
கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.
வீங்கிய கண்கள்
சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவு வதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம்.
வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம். சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள் கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண் களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம்.எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண் களுக்குள் போகும். கண்களைக் கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக க்கியம்.
கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண் களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும்.இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய் யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உட் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
சில டிப்ஸ்:
சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண் களைக் கழுவவும்.
சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.
கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
எட்டு மணி நேரத் தூக்கம். 10 தல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம்.
தலைவா விமர்சனம்
‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா?’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா.
மும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்)
இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்...! ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு? அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு கிடைக்கிற பிரசாதம்.
மிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ்? படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப்.
ப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது.
அமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்?
சத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும்.
படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்...
ஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா.
விஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது?
சிந்தனைஒளி
-பிறரை
மகிழ்வித்து -நீ மகிழ்!
-பகை
தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
-புலிக்கு
வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா?
நீ முடிவு செய்!
-சம்பாதிப்பதற்கு
அளவுகோல் தேவையில்லை -
செலவழிப்பதற்கு அளவுகோல் தேவை!
-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய்
சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே
எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்
மாதகல்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர்
ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும்,
கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில்
பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல்
கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல்
மேற்கு என மூன்று கிராம
அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.
பசுமையான
நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள்
என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின்
அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு.
இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும்
கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு
விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன
அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.
மாதகலுக்கு
பெருமை சேர்த்தவர்களில் சிற்றம்பலப்புலவர் முன்னோடி ஆவார். இவர் ஏறக்குறைய
இருநூறு வருடங்களுக்கு முன்னே வேளான் குலத்திலே பிறந்தார்.
வேதாரணீயஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய
சைவக்குருவினிடம் இலக்கண இலக்கியங் கற்று
மீளத் தம்மூரில் வந்திருந்தவர். இவரிடம் கற்றவர்கள் இருபாலை
சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை
முதலியோர் என்பர். இவர் கண்டியரசன்மேல்,
கிள்ளைவிடு தூது என்று ஒரு
பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக்
சென்ற பொழுது வழியில் அவ்வரசன்
ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டுத்
தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.
அடுத்து மாதகலுக்கு பெருமை தேடித் தந்தவர் மயில்வாகனப்புலவர்.அவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் மாதகலில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உதித்தவர்.யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.
இயற்கை
அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல்
விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த
ஊரை தாய் நிலமாகக் கொண்ட
பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல்,
சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில்
மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …
முதுமை
நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ
ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல்
தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன்
நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால்
பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக்
கற்றுக் கொள்வது முன்பு போல்
அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது
பொதுவாக நாம் எல்லோரும் நம்பும்
யதார்த்த நிலை என்றாலும் பல
அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச்
சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும்
மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன்
தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று
ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளும், இது போன்ற வேறு
பல ஆராய்ச்சிகளும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத்
தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத்
தொகுத்து சுருக்கமாகப் பார்ப்போம்.
1) உணவுப்
பழக்கங்கள்:
5) மூளைக்கு
வேலை:
மேலும்
வயதாக வயதாக மனிதன் சில
பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில
செயல்பாடுகள் முன்பு போல் இருக்க
முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும்
மூளையின் ஆற்றல் குறைய முக்கிய
காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை
என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை,
அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை
என்பதை நினைவில் இருத்துவோமாக!