காலை
கந்தப்பு
வண்டியில் பால் விற்கிறான்
முந்தைய
கடனை பேசி வாங்கிறான்
சந்தானம்
கிணற்றில் முகம் கழுவுறான்
சிந்திய
தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல்
சூரியன் மேலே எழுகிறான்
பந்தி
பந்தியாய் பறவை பறக்குது
மந்த
வெயில் மெல்ல சுடகிறது
எந்தன்
கண்ணகி போர்வை விலத்துகிறாள்!
நண்பகல்[மத்தியானம்]
சந்தியில்
சத்தமிட்டு கந்தப்பு வாறான்
கந்தை
துணியுடன் சுந்தரி கூட்டுறாள்
செந்தாமரை
குளிக்க சோப்பு தேடுறாள்
சந்தானம்
நந்திக்கு தீபம் காட்டுறான்
தொந்தி
பிள்ளையார் எலியில் இருக்கிறார்
வெந்திய
குளம்பு அடுப்பில் கொதிக்குது
சிந்திய
முத்துகள் பொறுக்கி எடுத்து
எந்தன்
ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!
மாலை
வந்தனம்
கூறி வசந்தி போறாள்
சந்தனப் பொட்டு நெற்றியில் மின்னுது
பிந்திய
பகலில் சூரியன் மறைகிறான்
சுந்தரி
பிள்ளைக்கு நிலவு காட்டுறாள்
பந்து
பிடித்து செந்தாமரை துள்ளுறாள்
சந்து
பொந்துக்குள் குஞ்சுகள் போகினம்
உந்தி
ஊஞ்சால் விரைவா ஆடி
எந்தன்
சிந்து, பைரவி
பாடுறாள்!!!
இரவு
சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள்
கந்தப்பு விராந்தையில்
பாய் விரிக்கிறார்
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள்
சந்தானம் சாமிக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை யன்னலில் கனவு காண்கிறாள்
அந்தபுரத்தில் இப்ப
ராசாவின் மடியில்
தந்தன தந்தன தாளம்
போட்டு
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!
{கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்}
No comments:
Post a Comment