உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம்,
மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
உங்கள் உடலின் உண்மைகள்
- குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
- நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
- நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
- நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
- human_body_370பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
- நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 60,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
- நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
- நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
- நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
- முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
- மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
- ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
- இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
- மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
- ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
- நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
- நமது மூளை 80% நீரால் ஆனது.
- நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
- நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
- மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
- பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
- மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
- மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்:
-கண்கள் 31 நிமிடங்கள்
-மூளை 10 நிமிடங்கள்
-கால்கள் 4 மணி நேரம்
-தசைகள் 5 நாட்கள்
-இதயம் சில நிமிடங்கள்
இன்றைய நகைச்சுவைகள்
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
சோமு : என்னாச்சு?
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே
ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.
ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.
சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
சோமு : எப்படி?
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்
ராமு : எப்படிச் சொல்றே?
சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு
வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : "முடியவே முடியாது".
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
பாக்கி : என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..
கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா...
பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..
டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
மனைவி:“ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
கணவன்:“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”
பெண்: என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"
டாக்டர்:"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"

வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடலாமே.....!
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.