இராவணன் நல்லவனா?..கேள்வி(10.....17)



கேள்வி(10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார்? ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்ட தேவர்களை ஏன் அசுரர்கள் எதிர்த்துப் போரிட்டனர்?

 

இராவணன் நல்லவன் என்று தீர்மானிக்க வேண்டியது அசல் காவியம் எழுதிய வால்மீகிதானே தவிர நகலெடுத்த கம்பரும் பாரதிதாசனும் அல்லவே!

 

கேள்வி(11):-ஒரு கதாசிரியன் எப்படி ஒரு பாத்திரத்தை இவன் நல்லவனா இல்லைக் கெட்டவனா என்று சொல்ல முடியும் அதை தரம் பிரிப்பது ரசிகன் அல்லவா? ஆமாம் வால்மீகியும் முனிவர்தானே அவருக்கு ராவணன் இழைத்த தொல்லை என்ன?

 

நல்லவன் என்று நீங்கள் சொல்லவேண்டுமானால் ஏன் இராவணனை அரக்கனாக சித்தரிக்கவேண்டும்?

 

ராவணனும் குபேரனும் அண்ணன் தம்பிகள் என்பதை அறிவீரா?(சக்களத்தி மக்கள்) ராவணன் பிராம்மணன். அசுரன் என்பது குணத்தாலேயன்றி பிறப்பினால் வருவதல்ல. மற்றபடி அரக்கர் என கோரைப்பற்களுடன் சிலரைக் காட்டுவது நாடக இலக்கணப்படியே தவிர வேறொன்றுமில்லை..

 

கேள்வி(12):-விருப்பமின்றி தொடும் பெண்களினால் இராவணனுக்கு ஏற்பட்ட சாபம் அறிவீர்களா? அதனால்தான் சீதையைத் தொடவில்லை என்பது அறிவீர்களே! சாபத்தின் காரணம் யோசியுங்கள், இராவணன் நல்லவனா கெட்டவனா என்று??????

 

விருப்பமின்றித் தொடும் பெண்கள் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அது வேறு கிளைக்கதை, பாரதிதாசனையும் கம்பனையும் ஒத்துக்கொள்ளாத இடத்தில் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..

 

கேள்வி(13):-ராவணன் மகள் சீதை என்ற கதை நானும் கேள்விப் பட்டதுண்டு.. முதலில் ராவணன் சீதையை ஏன் கவர வேண்டும்? மோகம் காரணமா? அல்லது பாசம் காரணமா? மகள் என்றால் இராமனிடமே வந்து இலங்கைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கலாமே? மோகம் என்றால்...........

சூர்ப்பனகையின் மூக்கறுந்த கோபம்.. கோபமாகவும் இருக்கலாமல்லவா? ஏன் மோகம் என்று கொள்ளவேண்டும்?.. தேவர்களை வென்று மூவுலகை ஆண்ட ராவணன் மிதிலையிலிருந்து சீதையை தூக்கி வரவில்லையே.. அவள் அழகைக் கேள்விப்பட்டு..

 

கேள்வி(14):-இராமாயணத்தில் இராவணன் மோகத்தினால்தான் சீதையைக் கவர்ந்ததாக நான் படித்தேன்.. ஒரு வேளை நான் படித்ததில் தவறு இருக்குமோ?

இராவண இராம காலங்கள் யாருக்கும் தெரியாது.. இன்னும் சொல்லப்போனால் அப்படி இருந்ததாக சரித்திர குறிப்புகள் இல்லை. இருப்பினும் ஓர் அரசனுக்குரிய தகுதியை விட்டு நீங்கள் குறிப்பிட்ட காட்டுவாசியாகிய சீதையை இராவனன் கவர்வது என்ன நியாயம்? ராமன் பிடித்தது தங்க மான் தானே தவிர ஒரு பெண்ணல்லவே! (அதற்க்காக இராமனை தவறு செய்யாதவன் என்றும் சொல்லவில்லை.)

பெண்களைக் கவர்வது, பசுக்களை கவர்வது போன்றவை அரசர்கள் அன்று செய்துள்ளனர். ஏன் மகாபாரதத்தில் பீஷ்மர் அம்பா அம்பிகா அம்பாலிகா என் மூவரை தன் தம்பியருக்கு மணமுடிக்க கடத்தி வரவில்லையா? இது போல எத்தனையோ அரசர்கள் செய்துள்ளனர்.

 

கேள்வி(15):-ஒரு கெளரவம் என்று இந்த இடத்தில் எப்படி பொருள் கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.. ஒரு கெளரவத்திற்க்காக நடந்த கடத்தலா இது?

இருக்கலாமல்லவா? ராமாயணத்தில் பல இடங்களில் கௌரவம் என்பது இழியோடி இருக்கிறது.. சீதையை ராவணன் கடத்தியதற்காக ராவணனிடம் தனியுத்தம் செய்யாமல் ஆயிரக்கனக்கில் வானரங்களையும் தானவர்களையும் கொன்று, சீதையை அக்கினிப் ப்ரீட்சை செய்து, அதன் பின் அயோத்தி வந்த பின்னும் தனியொருவன் ஏசல் கேட்டு ஒரு பிழையும் செய்யாதவளை கானகம் அனுப்பினான் என்றால் கௌரவம் என்பதை ராமன் எவ்வளவு உயிர்மூச்சாக கொண்டான் என்பதை தெளிவாக அறியலாம்.

 

கேள்வி(16):-இராவணன் தன் குடியை ஒழுங்காக நடத்தியதற்கு தக்க ஆதாரமில்லை. அதாவது அதுவும் இராமாயணத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும்.. அப்படி ஒழுங்காக, குல வழக்கப்படி ஆளும் ஓர் அரசனைக் கொல்ல விஷ்ணு ஏன் இராமனாகப் பிறக்க வேண்டும்... இராமனாக பிறந்து அவன் சாதித்தது இராவணனை அழித்து போக மீதி யாரையாவது (பெரும் அசுரனை) கொன்றிருக்கிறானா?

கும்பகர்ணனைக் கொன்றது ராமனே. ஆயிரக்கணக்கில் அசுரர்கள் அழிந்ததும், வானவர்கள் அழிந்ததும் ராமனாலே.. வாலியும் ராவணன் செய்த அதே தவறை செய்தான்,, அவனை துவந்த யுத்தத்திற்கு சுக்ரீவனை அழைக்கச் சொன்ன ராமன் ராவணனை ஏன் துவந்த யுத்தத்திற்கு அழைக்கவில்லை?

 

கேள்வி(17)ராமன் ராவணன் மேல் போர்தொடுத்தது கெளரவ பிரச்சனையா? அப்படியென்றால் மனைவியைக் காப்பாற்ற இல்லையா?

ராமன் சீதையைக் கைவிட்டு கானகம் அனுப்பியது இதை நிரூபிக்கிறது. பிள்ளைகள் வளர்ந்த பின்னரும் சீதையை ஏற்க மறுத்தமை  நிரூபிக்கிறது. 

 

தொடரும் ....click down to read more

Theebam.com: இராவணன் நல்லவனா?..கேள்வி(18--24)

Theebam.com: இராவணன் நல்லவனா? -கேள்வி(01...03)

4 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, August 11, 2013

    விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண்டுபவனும் தேவையானதை அள்ளுகிறான். ஆழத்தில் அதிசயங்களை ஒளித்துக் கொண்டு இவர்களை எள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கிறது சமுத்திரம்.அமாம் இராவணன் நல்லவனா?. என அறிய அவனைப்பற்றி மற்றவர்கள் பக்தி காலத்திலும் சித்தர்கள் காலத்திலும் கூறியதை ஒருக்கா பார்த்தால் என்ன ?

    கதை கேட்கும் வயதில் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன் இந்த ராவணன் .ஆனால் சமுத்திரத்தின் அடியில் போய் பார்த்த போது நான் எடுத்ததை உங்களுக்கு தருகிறேன்

    போகர், சித்தர்களில் ஒருவர்.‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் "இராவணனார்" என பெருமதிப்புடன் குறிப்பிடுகிறார்

    “ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு
    தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
    வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
    மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”
    [போகர் 7000 சப்த காண்டம்]

    சிறு வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் பல தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.
    ,
    "கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்"
    [கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை ]

    “வானினொடு நீரும் இயங்குவோருக்கு
    இறைவனாய இராவணன்"
    [வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன்]

    “சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
    நாமதேய முடையார்”
    [இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது]

    இதே போல திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில் இப்படி பாடியுள்ளார்:

    "தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு"
    [தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு,]

    "தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை"
    [தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக,]

    சுந்தரமூர்த்தி நாயனார், ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்.

    "எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
    துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
    குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த
    செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்"
    [அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்]


    இப்படி சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? தம் முன்னோனான இராவணன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது என்னத்தை காட்டுகிறது?இன்னும் நல்லவனா கெட்டவனா என்று நாம் ஏன் எமது மண்டையை உடைப்பான்? இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை இந்த நூற்றாண்டு புலவன் எப்படி பெருமை படுத்துகிறான் பாருங்கள் .

    “தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
    சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!
    அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்
    ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
    குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
    குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
    என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
    இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்"

    ReplyDelete
  2. சிறப்பான தகவல். நன்றி.

    ReplyDelete
  3. It's the best time to make a few plans for the
    future and it's time to be happy. I've read this put up and if I may
    I want to suggest you few attention-grabbing things or
    tips. Maybe you can write next articles regarding this article.
    I desire to learn even more things approximately it!

    ReplyDelete