# வாழ்வு சுவைக்க வேண்டுமா ?உங்கள் தேடல் தொடர வேண்டும்!
# உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும் தொடாதீர்கள்!
# இது கலியுகம் -நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது
வாய் வல்லவனாயும் இருக்கணும்!
# பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
# சொத்து போனால் – சம்பாதித்து கொள்ளலாம், உடல்கெட்டு
போனால் – சரிசெய்து கொள்ளலாம், நம்பிக்கையற்று போனால் – ஒன்றும் செய்ய முடியாது!
இப்படிதான் கலியுகத்தை கூறுகிறார்கள் :
ReplyDelete"மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்
வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.
எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.
எல்லோரும் பணத்தாசை ஒன்றே குறியாக இருப்பார்கள்.
பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள்.
16 வயதுக்கள்ளேயே பெண்கள் தாயாராவார்கள். பெண்கள் பணத்தை அபகரித்துக் கொண்டு அந்நிய ஆடவருடன் கூடுவார்கள்.
சரீரத்தை விற்கும் பெண்கள் அதிகரிப்பார்கள்.
கலியில் மனிதா்கள் மோக வசப்பட்டு வேசிகளிடமும், பிறா் மனைவியிடமும் பிறர் பொருள்மீதும் ஆசை கொள்வார்கள்.
ஆடவா்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் இருப்பார்கள்.
மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள்.
வேண்டாத சமயத்தில் மழை பொழியும்.
கடும் மழையும் , பெரும் புயலும் கடும் வெயிலும் ஏற்படும்.
கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.
பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும்.
தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது."
இந்த கலியுகத்தில் தான் நாம் இப்ப இருக்கிறோம் என்கிறார்கள்.அப்படி என்றால் நாம் "நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது வாய் வல்லவனாயும் இருக்கணும்!" என்பது சரியே!
ஆனால் எனக்கு ஒரு ஐயம் இப்படியான இந்த கலியுகத்தில் "உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும் தொடாதீர்கள்! " என்பது செல்லுபடி ஆகுமோ என்று? ஏன் என்றால் அறிவு, தியானம், தவம் என்பன சிறப்புப் பெற்றிருந்த கிருத(சத்திய)யுகத்திலே விஷ்ணுவே இதை கடைபிடிக்கவில்லை !!
பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி பிருந்தா[துளசி] மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்பை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார்.
இதையடுத்து பிருந்தா[துளசி] கோபத்துடன் " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி" என்று சபித்தாள்.
அப்ப இந்த கலியுகத்தில் இது செல்லுபடி ஆகுமோ என்று ஒரு ஐயம் ?ஆனால் ஒன்று உண்மை இந்த கலியுக, களவு மணம் செய்து கொள்ளும் ,எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி வாழும் ,தெய்வங்களைப் பூசிக்கும் மூட நம்பிக்கைகளை தவிர்த்து வாழும் சாதாரண மனிதன் ஒருவேளை இதை கடை பிடிக்கலாம் ?