மனிதனின் தோன்றியது எப்போது?{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}



உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி


உலகமெங்கும் காணப்படும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர் டார்வின் என்பவர் ஆகும். இவர் 150 வருடங்களின் முன் வாழ்ந்தாலும் , இன்றைய அகழாய்வுகளில் கிடைக்க்ப்பெற்றுள்ள தொல்பொருட்களின் மரபணுச் (genetic code ) சோதனைகளின்  முடிவுகள் எல்லாம், அவர் கூற்றினை முற்றிலும் நிறுவுவதாகவே அமைகின்றன.

மனித குலமோ அல்லது எந்த ஒரு உயிரினமோ தற்போது காணப்படும் இந்த உயரிய நாகரிக மட்டத்திலேயே, தோன்றிய காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறவே முடியாது என்பது வெள்ளிடை மலை. உயினங்கள்பால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் நம் சமீப கால அவதானிப்புகளிலிருந்து. இந்த உண்மையை சந்தேகமற உய்த்தறிவது இயலக்கூடியதாக இருக்கிறது. பல உயிர்கள், பலதடவைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ, அவ்வப்போது அழிந்தும் மாறுபட்டும் வந்துள்ளன. 

ஒருசில லட்சம்/கோடி வருடங்களின் முன் நாம், நாமில்லை; நாய், நாயில்லை; புலி, புலியில்லை; எலி, எலியில்லை! 

இதை விளக்குவதற்கு, இந்தப் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு காலவரிசைதனை சுருக்கமாக நோக்குவோம்:

400 கோடி வருஷம்:
பூமியின் வளிமைண்டலத்தில் பிராண வாயு இருக்கவில்லை.

360 கோடி வருஷம்:
எரிகற்களின் தீப்பிழம்புகளால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தினால் சுருள் வடிவான ஒற்றைக்கல (single cell ) பக்டீரியாக்கள் தோன்றின. 

350 கோடி வருஷம்:
சூரிய ஒளியின் உதவியுடன் ஒளித்தொகுப்பு நடந்து இவை பல மடங்காய்ப் பெருகின. இத்தாக்கத்தில் வெளியான கழிவுப்பொருள்தான் பிராண வாயு.

250 கோடி வருஷம்:
இத்தாக்கத்தில், நுண்ணங்கிகள் (micro-organism)  கடல் பூஞ்சைகளுடன் (algae) ஒட்டி, வீழ்படிவுகளுடன் கலந்து ஓர் உயிரணுவுக்கான அமைப்பு உண்டானது. இதனால் வெளிவிடப்பட்ட பிராண வாயு வளிமண்டபத்து ஏனைய வாயுக்களோடு கலந்தது.

160 கோடி வருஷம்:
தனிக்கலத்தைப் பாதுகாக்க வெளிச்சுற்றுச் சவ்வு உண்டானது.

150 கோடி வருஷம்:
சிக்கலான கலம் கொண்ட உட்கருவுடன் கூடிய நுண்ணுயிர்கள் உருவானது.

120 கோடி வருஷம்:
இருபால், இனச்சேர்க்கை உறுப்புகளுடன் கூடிய நுண்ணுயிர்கள் உருவாகின.

100 கோடி வருஷம்:
பல கலம் கொண்ட உயிரணுக்கள் உருவாகின.

60 கோடி வருஷம்:
நீரை உணரும், உணவு உண்ணும் தலை, நரம்புகளுடன் கூடிய நுண்ணுயிர்கள் தோன்றின.
மிகையான பிராணவாயு ஒசோன் படலத்தை வானில் உண்டாக்கி, கொடிய UV கதிர்வீச்சைத் தடுத்து, உயிர்வாழும் சூழ்நிலையை உருவாக்கியது.  

50 கோடி வருஷம்:
முதல் மீன் வகைகள் தோன்றின.

40 கோடி வருஷம்:
பூமியில் உள்ள தாவரங்கள், நீர் நிலைகளை நோக்கி கடல்வாழ் ஜந்துக்கள் இடம்பெயரத் தொடங்கின.

30 கோடி வருஷம்:
வண்டுகள், ஊர்வன தோன்றின.

22 கோடி வருஷம்:
டைனசோர் (dinosaurs)  தோன்றியன.

6-20 கோடி வருஷம்:
பாலூட்டிவகை உயிர்கள், பறவைகள் எறும்புகள் போன்றவை தோன்றின.

6 கோடி வருஷம்:
டைனசோர் அழிந்தன 

3 கோடி வருஷம்:
தற்காலத்தை ஒருவாறு ஒட்டிய மிருகங்கள் உருவாகின.             

1.4 கோடி வருஷம்:
முதல் குரங்கினம் தோற்றம்.

1 கோடி வருஷம்:
எறும்பு வகைகள் தோற்றம்.

44 லட்சம் வருஷம்:
முதல் மனிதக் குரங்கு தோற்றம்.

20 லட்சம் வருஷம்:
மனிதக் குரங்கு கற்கால ஆரம்பம்.

7 லட்சம் வருஷம்:
குரங்கு மனிதன், மனிதக் குரங்கிலிருந்து வேறுபட்டமை.

4 லட்சம் வருஷம்:
குரங்-மனிதன் மர/கல் ஆயுதங்கள் பாவித்தமை.    

3 லட்சம் வருஷம்: 
குர-மனிதன் ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவினுள் நுழைந்தான்.        

2 லட்சம் வருஷம்:
தற்போதைய மனிதனின் உடற்கட்டோடு ஒத்திருக்கும் கு-மனிதன் தோற்றம்.   

1 லட்சம் வருஷம்:     
(கு)மனிதன் தானியம் பயிரிடப் பழகினான்.

40,000 வருஷம்:
தற்போதைய மனிதனின் தோற்றம் கொண்டிருந்தான்.

30,000 வருஷம்:
மிருகங்களை வீட்டுப் பிராணிகள் ஆக்கினான்.

15,000 வருஷம்:
அமரிக்காவினுள் நுழைந்தான்.                      

12,000 வருஷம்:
மண்பாத்திரங்கள் செய்தான்.

9,000 வருஷம்:
உலோகப் பாவனையை கண்டான்.

5,500 வருஷம்:
சில்லுருளிகளின் பாவனைகளைக் கண்டுபிடித்தான்.

5,000 வருஷம்:
எழுத்துகளுக்கு உருவம் கொடுத்தான். 

3,300 வருஷம்:
இரும்பின் பயனைக் கண்டு கொண்டான்.

2,000 வருஷம்:
உயரிய விஞ்ஞான சிந்தனைகள் தொடங்கின.

250 வருஷம்:
பொருளாதாரப் புரட்சி தொடங்கினான் 

50 வருஷம்:
வேறுலகம் நோக்கி விண்வெளிப் பயணம் தொடங்கி
------& தொடர்கிறது.

உலகின் முன்னிலை விஞ்ஞானிகள் எல்லோருமே ஒருமித்து ஆதரிக்கும் இந்தப் பரிணாமக் கொள்கையானது, நியாயமுள்ள நிலைப்பாடுள்ள விவேவிகள் எவரும்   பிழையான ஒன்று என்று எந்தவொரு காரணத்திற்காகவும்  கரம் தூக்கி நிற்க மாட்டார்கள். 

ஆகவே, எந்தவொரு உயிரும், இந்த உலகில் ஒருவராலோ அல்லது பலராலோ, ஒருநாளிலோ அல்லது சில நாட்களிலோ, மந்திரக்கோலைக் காட்டி "ஓ, சே, சோ " என்று படைக்கப் படவில்லை என்று மெய்யறிஞர் எவரும் ஏற்றுக்கொள்வர்.         
                          

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Saturday, July 20, 2013

    2500 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் கூறியதை கேளுங்கள்:
    "நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
    இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
    திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்"
    அதாவது நிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது.
    மேலும் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது இப்படி கூறினார்:
    “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனோடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
    ஆறறி வதுவே அவற்றோடு மனனே”(தொல்-1526)
    என இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,
    ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’(தொல்-1526)
    என வெளிப்படுத்தியுள்ளார்.
    புல்லும் மரனும் ஓர் அறிவினவே பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28
    நந்தும் முரளும் ஈர் அறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29
    சிதலும் எறும்பும் மூ அறிவினவே பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30
    நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31
    மாவும் மாக்களும் ஐ அறிவினவே பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32
    மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33
    மேற்காணும் எட்டு பாடல்களில் சில பொருட்பிழைகள் இருப்பினும் ,பொதுவாக உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளை அப்போதே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    உதாரணமாக தும்பியாகிய தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று 31 ஆம் பாடல் கூறுகிறது. இக் கருத்து அறிவியல் உண்மைக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தேனீக்குக் கண்கள் உண்டு; ஆனால் மூக்கு இல்லை.[Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages] பூவிதழ்களின் ஒளியினால் கவரப்பட்டே இவை பூவில் அமர்ந்து தேன் உண்ணுகின்றனவே அன்றி பூக்களின் நறுமணத்தால் அல்ல[ They can certainly pick up the scent of flowers but it is probably the actual smell of nectar which is the attraction ]அது போல மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக 33 ஆம் பாடல் கூறுகிறது. இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை. இப்படி இப்படி சில சில பிழைகள் உண்டு.எது எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது. அப்போதே தமிழர்கள் எவ்வளவு அறிவுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணும் பொது நாம் பெருமை அடைகிறோம்!
    மாணிக்கவாசகரும் இதே போன்ற கருத்தைத் தெரிந்து பாடியிருக்கிறார்.
    "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்"

    ReplyDelete