விஜயகாந்த் தன்னுடைய இளைய மகன் சண்முக பாண்டியனை தமிழ திரையுலகிற்கு அறிமுகப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்திருந்தார். இதற்காக மகனை தயார்படுத்திய அவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்நிலையில் விஜயகாந்த், ஹரியை அழைத்து தன்னுடைய மகனுக்கு கதை ஒன்றை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார். அதன்படி தற்போது நடந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்து விஜயகாந்திடம் சொல்லிருக்கிறார். இந்த கதை பிடித்துவிடவே உடனே ஓகே சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.
ஹரி தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் வேலைகளில் தீவிரமாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ‘கடல்’ படத்தில் அறிமுகமான பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருவரையும் இணைத்து போட்டோ ஷூட்டையும் ரகசியமாக முடித்துவிட்டார்கள்.
மே மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. சுமார் ரூ.15 கோடி பட்ஜெட் படம் தயாராகிறது.

No comments:
Post a Comment