பறக்கும் உணவுகள்!

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 
 குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகுபடுத்தியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தைக் குறிப்பிடலாம். லண்டனில் உள்ள யோ!சுசி உணவகமே ஹெலிகொப்டர் போன்ற உபகரணத்தை வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
 இதற்கு ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது குறித்த உணவகம். குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள் இதன் மூலம் மேசைக்கு உணவினை அனுப்புகின்றனர். அவர்கள் உணவைப் பெற்றதும் ஐ டிரே அவ்விடத்திலிருந்து திரும்பி விடுகின்றது. இதனை ஊழியர்கள் பேட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

தற்போது குறித்த உணவகம் தனது இரண்டு கிளைகளில் மட்டுமே இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது. உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய 'கொன்வேயர் பெல்ட்' மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.
 இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment