வினாயகனால் வந்த..
மகாராட்டிர மாநிலம் புனேயில் பிளேக் நோய் கடுமையாக பரவிய காலகட்டம். எலிகள் செத்து விழுந்து அதிலிருந்து கிருமிகள் பரவி பிளேக் நோயைக் கொடுத்துவிடும்.
பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்லும் இயக்கத்தை வெள்ளைக்கார அரசு தீவிரப்படுத்தியது - மனிதாபிமானத்தோடு, மக்களை நோயிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையைத்தான் பிரிட்டீஷ் அரசு செய்தது.
திலகர் பெருமான், திலகர் பெருமான் என்று அழைக்கப்படுபவர் - அந்த லோகமான்ய பால கங்காதரர் என்ற, கொழுத்த மீசைக்காரத் திலகர் பெருமான் என்ன வேலை செய்தார் தெரியுமா?
நமது பகவானாகிய விநாயகனின் வாகனம் எலி. அதன்மீது மிலேச்சர்களான - கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் கை வைத்துவிட்டனர் - வேட்டையாடி ஒழிக்கக் கிளம்பிவிட்டனர்! போச்சு! போச்சு!! நமது மதம் போச்சு - கலாச்சாரம் போச்சு என்று மதவெறியைக் கிளப்பி விட்டார்.
இதன் விளைவு என்ன தெரியுமா?
புனே நகரில் எலி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமாக தூண்டி விட்டவர் என்ற முறையில் திலகருக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கவியரசர் கண்ணதாசன் சொன்ன உண்மை
கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார் அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார் இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.
அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று கண்ணதாசன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.
"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம். கண்ணதாசன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.
அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.
கண்ணதாசன் நேரே அவரிடம் போனான் "என்ன அண்ணா இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.
"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்" என்றார் அண்ணா.
"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?" என்றுகண்ணதாசன் கேட்டான்.
----கண்ணதாசனின் குறிப்பேட்டிலிருந்து.

கலைஞர் கணக்கு விடுவதில் கெட்டிக்காரர்
ReplyDelete