பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று பாரிஸ் நகரில் இது வெளியிடப்பட்டது. வீட்டுவசதி, வருமானம், வேலை, வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட 11 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 34 வளர்ந்த நாடுகள் மற்றும் சில வளரும் நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் பல பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்று அவுஸ்ரேலியா முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களில் 84 சதவீதம் பேர் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சுவீடன், கனடா, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் வந்துள்ளன. அமெரிக்கா 6 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து 10 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, இலங்கையில் வாழ்பவர்களின் நிலை பற்றி ஆய்வு நடத்தப்படவில்லை.

0 comments:
Post a Comment