அரசியல் வசனங்களை தனது படத்தில் இருந்து நீக்கும் வடிவேலு

News Serviceதேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும். முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான், விஜயகாந்துடனான பிரச்னை, அரசியல் பிரவேசம் என்று ட்ராக் மாறிப்போய் ஒன்வேயில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படி படமாகும் காட்சிகளுக்கு முன்பு டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் வடிவேலு, ஏதாவது இடத்தில் அரசியலையோ அல்லது வேறு யாரையோ குத்திக்காட்டுவது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்குமாறு டைரக்டர் யுவராஜை கேட்டுக்கொள்கிறாராம். இது கதை சம்பந்தப்பட்டது.

இதனால் ஒரு பிரச்னையும் வராது என்று அவர் சொன்னாலும். நாம் கதைக்காக வைத்தாலும், எனக்கு வேண்டாதவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்களைத்தான நான் மறைமுகமாக திட்டுவதாக தவறாக எடுத்துக்கொள்வார்கள். அதனால் எதற்கு வீண்வம்பு என்று சொல்லி, ஆட்சேபத்திற்குரிய அனைத்து டயலாக்குகளையும் நீக்கிவிட்டு, ஜனரஞ்சகமான, ஜாலியான வார்த்தைகளை உள்ளே திணித்து வருகிறாராம் வடிவேலு.

மகிழ்ச்சியான நாடு அவுஸ்ரேலியா - ஆய்வில் தகவல்!

News Serviceபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று பாரிஸ் நகரில் இது வெளியிடப்பட்டது. வீட்டுவசதி, வருமானம், வேலை, வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட 11 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 34 வளர்ந்த நாடுகள் மற்றும் சில வளரும் நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் பல பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்று அவுஸ்ரேலியா முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களில் 84 சதவீதம் பேர் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சுவீடன், கனடா, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் வந்துள்ளன. அமெரிக்கா 6 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து 10 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, இலங்கையில்  வாழ்பவர்களின் நிலை பற்றி ஆய்வு நடத்தப்படவில்லை.

உங்கள் திருமணத்திற்கு இரத்தப்பொருத்தம் பார்த்தீர்களா?

கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும்.

பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் கூறியிருக்கிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது – உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. – குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. 

இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும்.

இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது.

முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது.

முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும்.

இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh + தாய்Rh – என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும்.

இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது.

இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.” என்கிறார்கள் மருத்துவர்கள்!

புற்றுநோய்(Cancer).... அறிந்துகொள்ளுங்கள்



1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும்.

கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.


5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

 ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள் :

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்

வை திஸ் காதல்வெறி -யாழ் ஒலி


இது இனப் படு கொலை!!!




கவி ஒளி
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மனதில்   உறுதி கொண்ட மக்களை
சினந்து    குருதி கொள்ள நினைப்பதும்
ஈனமாய்   எள்ளி நகை ஆடுவதும்
மானமாய் வாழ விடாது தடுப்பதும்
தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும்
வனமாய்  பசும் நிலத்தை மாற்றுவதும்
ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும்
இனப்     படுகொலை! இனப்  படுகொலை!!

விடுதலை   வேண்டி வீறுகொண்ட இனத்தை
படுகொலை  செய்து குழியில் புதைப்பதும்
நடுநிலை    அற்று அடிமை ஆக்குவதும்
ஏடுகளை    எரித்து சரித்திரத்தை சிதைப்பதும்
வீடுகளை   இடித்து அகதி ஆக்குவதும்
மேடுகளை  போட்டு தடுத்து வைப்பதும்
கூடுகளை   உடைத்து குஞ்சுகளை பறிப்பதும்
படுகொலை!அது  இனப்  படுகொலை!!

கலை    வளர்க்க தடை போட்டு
அலை   அலையாய் ஆமி போட்டு
விலை   பேசி சிலரை வாங்கி
உலை   வைக்கும் மந்தரை கெடுத்து
சிலை   சிலையாய் மக்களை மாற்றி
இலை   துளிராது  வேரையே வெட்டி
தலை   நிமிரா நெருக்களை கொடுத்து
கொலை செய்வது  இனப்  படுகொலை!!

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து


ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.
அதில் இடம்பெற்ற விபரங்கள்:
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான்.
ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில், இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.
ஆய்வில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:
45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரை விட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.

ஒளிர்வு-(30) -சித்திரை ,-2013




.உண்மைகள்உரைக்கப்படும்தளம்தீபம்,மூடநம்பிக்கைகளின்முடிவிடம்  .................

வேப்பெண்ணெய் அதன் மறுபக்கம்



வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.
வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென நினைந்து ஏங்கவே முடிகிறது.
வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.
‘குடித்துப் பார்க்கவில்லையா?’ என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் ‘குடிக்கிறது கஷ்டம்’ என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.

இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.
ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)
“இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில்  இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்”என்றும் சொல்கிறது.தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.

ஆனால் இது பழம் கதையல்ல.இன்றும் தொடர்கிறது.

பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு வேப்பெண்ணெயைக் கொடுத்த போது மூளை மண்டலம் பாதிப்புற்று வாந்தி,மயக்கம்,முழுமையான வலிப்பு  (Generalized Seizures) ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ஈரல் வீக்கம், ஈரல் பாதிப்பு, Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.

வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.

வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol)  மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.

மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும் பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.

ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும் எண்ணெயானது எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி எங்கும் கட்டுப்பாடின்றி விற்பனையாகிறது.

‘வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது’என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.
அது அவசியமும் கூட.
ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.

வேப்பெண்ணெய் கசத்தாலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

யாழ்ப்பாணத்திலிருந்து.....ஒரு வீடியோ


யாழ்தேவியில் பிறந்த பாடல்...வீடியோ


இப்படியும் ஒரு...கடவுள்


ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. 
சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது. 
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். 
நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். 
சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. 
"இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும்" என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை. 
"விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். " 
"கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.

நன்றி: தினமலர் 04.02.2011

கோயிலும் கடவுளும்


அந்நாட்களில்
ஏழைகளின் 
கூடாரமாயிருந்தது
கோயில்
 கடவுள்
காவலாயிருந்தார்.
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்
Nikolsky Womens Monastery Churchஅப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்
நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்
கடவுள் அங்கேயே 
காவலாயிருந்தார்.
தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்
மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்
தூண்களைக் கட்டியும்
தூசிகள் தட்டியும்
பாரம்பரியக் கோவிலைப்
பராமரித்தோம்,
மழைக்கு ஒதுங்கிய 
மக்களையும்
மஞ்சள் படிந்த 
கடவுளையும் வெளியேற்றிவிட்டு
— மன்னார் அமுதன்