நகுல், சந்தானம் இணையும் நாரதன்

கொலிவுட்டில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நகுல் தற்போது வல்லினம், அமளிதுமளி, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் கொமடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கொமடியை மையமாகக் கொண்ட இப்படத்தை நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். கே.வி.ஜெயராம், எம்.செல்வகுமார் தயாரிக்கின்றனர்.
நாரதன் படத்தின் பூஜை வடபழனியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடந்துள்ளது.
இதில் கவர்னர் ரோசைய்யா பங்கேற்று 'கிளாப்' அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்து, படபூஜையில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment