தூத்துக்குடியில்
பின்னணி
பாடகர்
டி.எம்.சவுந்தரராஜனுக்கு
நடந்த
பாராட்டு
விழாவில்
அவருக்கு
‘‘தங்கக்குரலோன்‘‘
விருது
வழங்கப்பட்டது.
பாராட்டு
விழா
தூத்துக்குடி
மாவட்ட
டாக்டர்
டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்றம் சார்பில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு
பாராட்டு
விழா
நேற்று
மாலை
தூத்துக்குடி
அபிராமி
மகாலில்
நடந்தது.
விழாவில்
கலந்து
கொள்வதற்காக
டி.எம்.சவுந்தரராஜன் நேற்று காலை தூத்துக்குடிக்கு
வந்தார்.
மாலை
7 மணிக்கு
விழா
அரங்கத்துக்கு
வந்தார்.
அங்கு
நடந்த
விழாவுக்கு
தூத்துக்குடி
மாவட்ட
டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்ற தலைவர் எம்.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி
மாநகராட்சி
ஆணையாளர்
எஸ்.மதுமதி முன்னிலை வகித்தார். டி.எம்.சவுந்தரராஜனின்
மகன்கள்
செல்வக்குமார்,
பால்ராஜ்
ஆகியோர்
பல்வேறு
பாடல்களை
பாடி
ரசிகர்களை
மகிழ்வித்தனர்.
அப்போது
ஏராளமான
மக்கள்
திரளான
சென்று
டி.எம்.சவுந்தரராஜனுக்கு
சால்வை
அணிவித்து
வாழ்த்து
பெற்றனர்.
‘தங்கக்குரலோன்‘ விருது
விழாவில்
டி.எம்.சவுந்தரராஜனுக்கு
தங்கக்குரலோன்
விருதை
தூத்துக்குடி
மாவட்ட
டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்ற தலைவர் எம்.கோவிந்தராஜ், சீலன், ஜோசப் ஆகியோர் வழங்கினர். விழாவில் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது கூறியதாவது:–
மகிழ்ச்சி
இதுவரை நான் இது போன்ற கூட்டத்தை பார்த்தது இல்லை. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விழாவுக்கு நீண்டநாட்களாக அழைத்து கொண்டே இருந்தார்கள். தற்போது தான் இங்கு வர முடிந்தது. மக்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்து இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு டி.எம்.சவுந்தரராஜன் கூறினார்
0 comments:
Post a Comment