இரட்டை வேடத்தில் சந்தானம்!


இரட்டை வேடத்தில் சந்தானம்!ப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஒரு காமெடி ட்ராக்கை ரெடி பண்ணி கொடுத்தாராம் இயக்குனர் பூபதி பாண்டியன். அவர் அந்த ட்ராக்கை நகர்த்தியிருந்த விதம் சந்தானத்தை கவர்ந்து விட்டதாம். 

அதனால், டபுள் ரோல் பண்ண இதுதான் சரியான நேரம் என்று அவதாரமெடுத்திருக்கிறார் சந்தானம். மேலும், ரெண்டு வேடம் என்கிறபோது ஒன்றுக்கொன்று நடிப்பில் வேற்றுமை தெரிய வேண்டுமே என்பதற்காக, தனது கெட்டப், டயலாக் பேசும் விதம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறாராம். அதோடு, சநதானத்துக்கு ஜோடியெல்லாம் உள்ளதாம். அதனால் ரொமான்ஸ் காட்சிகளிலும் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாடி வருகிறாராம்.

0 comments:

Post a Comment