நிழற்படக் கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Minox ஆனது Minox DCC 14.0. எனும் அதிநவீன மினி கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கமெராவானது 14 மெகாபிக்சல் திறன்வாய்ந்ததாகக் காணப்படுகிவதுடன் 640 x 480 Pixel அளவில் வீடியோ பதிவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் AVI வீடியோ கோப்பு வகையையும், JPEG நிழற்படக் கோப்பு வகையையும் பதிவு செய்ய முடியும். இவை தவிர 4x Digital Zoom, 2 அங்குல LCD திரை போன்றனவும் காணப்படுகின்றன.
113.5 கிராம் எடையுள்ள இக்கமெராவின் விலையானது 240 அமெரிக்க டொலர்களாகும்.
0 comments:
Post a Comment