பவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்?


நாமக்கல் நீதிமன்றத்தினால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி
வருகிறது. இதற்கிடையில் பவர் ஸ்டார் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாக
 வழக்கு தொடுத்தவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து,
கொஞ்சம் கொஞ்சமாக உயரத்துக்கு சென்று கொண்டு இருந்த நடிகர்
பவர்ஸ்டார் சீனிவாசன், இவர் மீது  2 லட்ச ரூபாய் காசோலை மோசடி
 குற்றசாட்டு எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இதே வழக்கில் கைதாகி பின்னர், ஜாமீனில்
வெளியே வந்தார் சீனிவாசன். ஆனால் அதே வழக்கில் மீண்டும் கைது செய்ய, பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மறுபடியும் போலீசார்
அவரை  வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் என்பவரின் வழக்கறிஞர
 கூறும்போது, "நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுடன்
சென்னைக்கு சென்று, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் குறித்து
 விசாரித்த போது, அவர் அந்தமானுக்கு தப்பி விட்டதாகவும் அவரைத்
 தொடர்ந்து தேடி வருவதாகவும் நாமக்கல் போலீசார் எங்களிடம்
தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் இன்னும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. அதோடு சீனிவாசன் அந்தமான் தப்பி
ஓடிவிட்டதாகவும் தெரிய வருகிறது. இது குறித்தும் நீதிமன்றத்தில்
இன்னமும் தெரிவிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment