இருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது.
இந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர்.
12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது அமேரிக்கா. விரைவில் இது போன்ற நடவடிக்கைகளை கனடாவிலும் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
No comments:
Post a Comment