இன்றைய சூழலில் சினிமாவில் வில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் அஜீத் வேதனை தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்திற்கு நடிகர் அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.
இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இன்றைய தேதியில் வில்லன்கள் வைத்து சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறது. வில்லன்களை வக்கீல், டாக்டர் என்று காட்ட முடியவில்லை, சம்பந்தபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அதேபோல் சாதாரண வில்லன் போன்று காண்பித்தால் அவர் எந்த ஒரு சாதியையோ, மதத்தையோ சார்ந்தவராக இருப்பது போல் காட்ட முடியாத சூழல். இதற்கு காரணம் நாளுக்கு நாள் உதயமாகும் புதிய கட்சிகள் தான். அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்று எதிர்க்கிறார்கள்.
0 comments:
Post a Comment