Chrome மற்றும் Firefox உலாவிகளினிடையே வீடியோ அழைப்பு ஏற்படுத்தலாம்
இணைய உலாவிகளின் வரிசையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கும் கூகுளின் Chrome மற்றும் Mozilla நிறுவனத்தின் Firefox ஆகிய உலாவிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ஒரு உலாவியிலிருந்து மற்றைய உலாவிக்கு வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நிறுவனங்களிடையேயும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட WebRTC எனும் இத்தொழில்நுட்பமானது துல்லியமான ஒலி பரிமாற்றம் மற்றும் உயர் ரக வீடியோ காட்சிகளின் பரிமாற்றம் என்பனவற்றினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்நவீன தொடர்பாடலினை தமது பயனர்களுக்கு விளக்கும் நோக்கில் இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து டெமோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளன.
Notepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது

ஒரு லட்சம் கோடி லைக்குகளை வேண்டி சாதித்துள்ள பேஸ்புக்
விளையாட்டாக தொடங்கப்பட்ட முகப்புத்தகம் எனப்படும் பேஸ்புக் தனது போட்டியாளர்களை திணறடித்து கொண்டிருப்பது பலத்த உண்மை அந்த வகையில் பேஸ்புக் தனது படிக்கற்களை தாண்டி பலத்த வளர்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில் தனது 9 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளது.
லைக் என்ற மந்திரப் பொத்தான் மூலம் நூறு கோடி மக்களை கட்டிப்போட்டிருக்கும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது 9-வது பிறந்தநாளை திங்கள்கிழமை(04.02.2013) கொண்டாடியது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு மாணவராக இருந்த மார்க் ஸக்கர்பர்க், 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி விளையாட்டாக தொடங்கிய இந்த இணையதளத்தின் இப்போதைய மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பேசுவதற்கு நண்பர்கள், நினைத்ததை எழுதுவதற்கு (வால்)”Wall”, பிடித்ததை பகிர்வதற்கு (ஷேர்)”Share” போன்ற வசதிகளுடன் பலரின் நிஜ வாழ்வுடன் ஒன்றிப்போன பேஸ்புக், கடந்த சில ஆண்டுகளில் இணையதள ஊடகம் என்பதன் பொருளையே மாற்றியமைத்துள்ளது. இதன் லைக் பொத்தான் மட்டும் ஒரு லட்சம் கோடி முறை அழுத்தப்பட்டுள்ளது.
தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட நிறைவடையாத இந்த இணையதளத்துடன் போட்டியிடமுடியாமல் கூகுள் போன்ற ஜாம்பவான்கள் கூட திணறி வருகின்றனர். பலர் போட்டிக்கே வரவில்லை. தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், அரபு எழுச்சி முதல் அண்ணா ஹசாரேயின் புரட்சிவரை சர்வதேச அரசியலுக்கான களமாகவும் பேஸ்புக் இருந்துள்ளது.
அறிமுகமாகின்றன Google Chromebook Pixel மடிக்கணினிகள்

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்
கணனியில் வேலைகளை மிக சுலபமாகவும், துரிதமாகவும் செய்வதற்கு ஷார்ட் கட் கீகள் பயன்படுகின்றன.
விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீழ்க்கண்ட கீகளை அழுத்தினால் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டொப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும், My Computer Folder காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டொப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
TAB: முப்பரிமாணக் காட்சி.
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.
விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீழ்க்கண்ட கீகளை அழுத்தினால் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டொப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும், My Computer Folder காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டொப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
TAB: முப்பரிமாணக் காட்சி.
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.
Notepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது
மைக்ரோ சொப்டின் Notepad டெக்ஸ் எடிட்டர் மென்பொருளிற்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறிதொரு மென்பொருளே Notepad++ ஆகும்.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் உலகிலுள்ள பல்வேறு மொழிகளை அடிப்படையாகக்கொண்ட டெக்ஸ்களை எடிட் செய்யும் வசதி காணப்படுவதுடன் மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளன.
இதுவரையில் ஏறத்தாழ 27 மில்லியன் தரவிறக்கங்கள் செய்யப்பட்ட இம்மென்பொருள் சில புதிய அம்சங்கள் உள்ளடங்கலாகவும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டும் தற்போது Notepad++ 6.3 எனும் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment