சினிமா ப்ரொஜக்டர் இயங்கும் விதம் - Cinema
Projector
தமிழர்களுக்கும் சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று உண்டு. என்னதான் 'விசிடி', 'கேபிள்' என்று சினிமா வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டாலும், 'பெரிய திரை'க்கு தனி மதிப்பு உண்டு. அமெரிக்காவிலேயே (யு.எஸ்.ஏ.) சுமார் 37,000 பெரிய திரையரங்குகள் இப்போதும் இருக்கின்றன. Simple
Projector
இந்தப் பெரிய திரையரங்குகளில் படம் எப்படி திரையிடப்படுகிறது, செல்லுலாயிட் கனவுகள் எவ்வாறு விரிகிறது என்பதைப் பார்ப்போம். திரைப்படத் தொழில்நுட்பத்திற்கு முக்கிய வசதி நமது கண்களின் காட்சியை நிலைநிறுத்தும் தன்மை தான். பார்க்கின்ற ஒரு காட்சி, பார்த்த பின்னும் சில கணங்கள் (ஒரு வினாடியில் 20ல் 1 பங்கு நேரம் 1/20th of
a second) நம் விழியில் நிற்கிறது என்ற அறிவியல் உண்மையே திரைப்படத்திற்கு அடிப்படை ஆதாரம்.
ஒரு வரைபடத்தை காட்டிக் கொண்டிருக்கும் போது, வினாடியில் 1/20 பகுதி நேரத்திற்குள் அதே போன்ற மற்றொரு படத்தை அதே இடத்தில் காட்டினால் படம் மாறியது கண்களுக்குத் தெரியாது என்ற அடிப்படையில் 1834ம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில் உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கிடையில் நீள் வடிவில் துளையிட்டு, டிரம்மை சுழல விட்டு வெளியிலிருந்து அந்த துளைகள் வழியாகப் பார்த்தால் அந்த படங்கள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருவது போல் ஒரு கருவி செய்தார். இதுவே முதல் ப்ரொஜக்டர் என்று சொல்லலாம். இதற்கு ஜோட்ரோஃப் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1891ல் தாமஸ் ஆல்வா எடிசன் கைனடோஸ்கோப் என்ற கருவியை உருவாக்கிய பின் எல்லாமே மாறிவிட்டது. அதில் படச்சுருளை சிறிய மோட்டார் மூலமாக ஒரு விளக்கின் முன் ஓட வைத்தார். இன்றைய ப்ரொஜக்டர்கள் இதே நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. Old Projector
ப்ரொஜக்டரில் படங்கள் வினாடியில் ஒரு பகுதி நேரத்திற்கு விளக்கு வெளிச்சத்தின் முன் நிறுத்தப்படுகிறது. மிக பிரகாசமான வெளிச்சம் அந்த படத்தை லென்ஸ் வழியாக திரையில் பெரிதாகக் காட்டுகிறது.
ஒரு அடி நீள பிலிமில் 16 படங்கள் வரும். ஒரு வினாடி நேரத்திற்குள் 24 படங்கள் ப்ரொஜக்டரில் ஓடுகிறது. ஆக திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றரை அடி படச்சுருள் தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 90 அடி, ஒரு மணி நேரத்திற்கு 5,400 அடி (கிட்டதட்ட 1.8 கிலோமீட்டர்! )
இரு படங்களுக்கு இடையிலான கருப்பு பட்டை ஓடும் போது ப்ரொஜக்டரில் விளக்கிற்கு முன் ஒரு இறக்கை (ஷட்டர்) வெளிச்சத்தை மூடி திறக்கிறது. இதுவும் ஒரு வினாடிக்கு 24 முறை இயங்கும். இது இல்லாவிட்டால் படம் குதிப்பது போல இருக்கும்.
No comments:
Post a Comment