பெண்களின் மூளை ஆண்களின் மூளை-அறிவியல்

பெண்களின் மூளை ஆண்களின் மூளையிடமிருந்து வேறுபடுவதனை பல்வேறு ஆய்வாளர்கள் கூறியிருந்தாலும், அவை நூற்றுக்கு நூறு இப்படித்தான் இன்று உறுதியாக ஒரு முடிவுக்கு வந்திடல் முடியாது. இருந்தாலும் பெரும்பான்மையானோரிடம் இவ் இயல்புகளைக் காணக்கூடியதாகவே உள்ளது.


பல் பணி (MULTI-TASKING)::-- பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!

 

மொழி::--பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

 

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)::--ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்க மான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது....

 

வாகன‌ம் ஓட்டுதல்::--வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

 

 பொய்ப்பேச்சு!.::--ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!.

 

பிரச்சனைக்கான தீர்வுகள்::--தேவைகள். மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். மகிழ்ச்சியின்மை. ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது....

 

உரையாடல்::--பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

நன்றி:--மூலம் : .tamilclone.com

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Wednesday, January 06, 2021

    ஒரு சில அடிப்படையான வேறுபாடுகளை கொஞ்சம் விபரமாக கீழே தருகிறேன்

    1] சராசரியாக ஆண்களின் மூளையானது, பெண்களின் மூளையைவிட 10 சதவீதம் பெரியதாக இருக்கிறதாம். இதனால் கணக்குப்பாடத்தில் ஆண்கள் கில்லாடிகளாகவும், தர்க்கரீதியாக சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மொழியில் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

    2] ஆண்கள் ஒரு பணியில் அல்லது வேலையில் ஆழமாக ஈடுபடும்போது, மற்றவர்களின் பேச்சையோ அல்லது சுற்றுப்புறத்தையோ கவனிப்பதில்லை. ஒருநேரத்தில், ஒரு செயலில் மட்டும்தான் அவர்களால் கவனம் செலுத்த முடியும். இதனால்தான் வில்வித்தை, Puzzle solving போன்ற கவனக்குவிப்புத்திறன் தேவைப்படும் விளையாட்டுகள், கணிதம் மற்றும் கடினமான வேலைகளை விரைவில் முடிப்பதில் ஆண்கள் திறமையாக இருக்கிறார்கள். ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் சட்டென்று கிரகித்துக் கொண்டுவிடுவார்கள். ஆனால், பெண்களால் ஒரு விஷயத்தை 360 டிகிரி கோணங்களில் சிந்திக்கவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தவும் முடிகிறது. ஒரே நேரத்தில் 2, 3 வேலையை முடிக்கச் சொல்லி ஆண்களிடம் கொடுத்தால், எரிச்சலாகி விடுவார்கள்.

    3] பெண்கள் மற்றவர்களின் துயரத்தை அனுபவிப்பவர்களாகவும், கோபமான நேரத்தில், அந்த கோபத்தை அழுகையாக வெளிப்படுத்து பவர்களாகவும் இருக்கிறார்கள். அத்துடன் பிறர் நினைப்பதை நிமிடத்தில் கணித்து, அதற்கேற்ப விரைவான முடிவுகளை எடுக்க பெண்களால் முடியும்.

    4] ஆண்களால் பொருட்களை முப்பரிணாம சுழற்சியில் கற்பனை செய்து பார்ப்பது சுலபமாக இருக்கிறது. ஆண்களிடம் உள்ள இந்த தனித்துவமான அமைப்பு, ஒரு இடத்திற்கு செல்லும் வழியை ஆண்கள் எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது. ஆனால், பெண்கள் வழியை சுலபமாக மறந்துவிடுவார்கள். வழியை மறந்துவிட்டால், ஆண் திசைகள் மற்றும் பயணத்தின் தூர அளவுகளை நினைவில் கொண்டு வந்து கண்டுபிடித்துவிடுவான். பெண் அந்த சாலையில் இருக்கும் கடைகள், மற்றும் பிற அடையாளங்களை நினைவில் வைத்துக் கொள்வாள்.

    5] பெண்கள் எளிதில் மன அழுத்தம் அடைபவர்களாகவும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னரான Post traumatic Disorder பிரச்னைக்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். உணர்ச்சிகளுக்கு காரணமான மூளையின் பகுதி, ஆண்களைவிட பெண்களுக்கு பெரிதாக இருக்கிறது. இதன் காரணமாக , உணர்ச்சிகரமானவர்களாகவும், உடல்மொழி, அடுத்தவர் பேச்சின் தொனி போன்றவற்றை எளிதில் அவர்கள் கிரகித்துக் கொள்வர்களாக இருக்கிறார்கள். மேலும் கோபம், ஆக்ரோஷம் நிறைந்தவர்களாகவும் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. பெண்கள் மிக ஆக்ரோஷமாக இருக்கும்போது வாய்மொழி தாக்குதல் நடத்துபவர்களாகவும், ஆண்கள் உடல்ரீதியான தாக்குதல் நடத்துபவர்களாகவும் இருப்பதை இருபாலரின் மூளை ஸ்கேன் ரிப்போர்ட் உறுதிப்படுத்துகிறது!

    6] வன்முறை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய மூளைப்பகுதி பெண்களுக்கு பெரிதாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் நன்மை செய்வதாய் இருக்கிறது. அதுவே, ஆண் சிறு விஷயத்திற்கும் ஆக்ரோஷமடைந்து, எதிரில் இருப்பவர்களை தாக்கிவிடுகிறான். தனக்கு பிடிக்காத விஷயத்தை கேட்டாலோ, பார்த்தாலோ உடனே ஆணுக்கு கோபம் வந்துவிடும். ஆனால், தொடர்ந்து எரிச்சல் உண்டு பண்ணுகிற விதத்தில் பேசினால் மட்டுமே பெண் கோபமடைகிறாள். பெண்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படையாக காட்டுவார்கள். ஆண்களுக்கு பாசத்தை வெளியே காட்டத் தெரியாது. தனியாக இருக்கும் பெண்ணை பார்ப்பது அரிது. எப்போதும் தன்னுடன் யாராவது இருக்க வேண்டும். ஆண்களுக்கு கூட்டாளியெல்லாம் தேவையில்லை.

    ReplyDelete