உங்களுக்குதெரியுமா?


சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.
மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.
தொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.
சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
பஹ்ரைன் நாட்டின் தேசிய கீதம் வார்த்தைகளால் பாடப்படாமல் இசையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் சுமார் 1500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்
'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.
மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.
'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.
கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.
உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.
வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.
 லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, February 16, 2013

    வாசித்து மகிழ சில ஒத்த தகவல்களை இங்கு தருகிறேன்.

    முகலாய மன்னனான ஷாஜகானால் , இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

    நம் கண்ணுக்கு தெரியும் ஒளி, 400 நேமீ[நேனோ மீட்டர்] லிருந்து 700 நேமீ வரைதான். இதைவிட குறைவான அலைநீளம் இருப்பது அல்ட்ரா வயலட் (UV) அல்லது புற ஊதாக் கதிர் ஆகும். அதிக அலை நீளம் இருப்பது இன்ஃப்ரா ரெட் (Infra Red) அல்லது அகச் சிவப்புக் கதிர்க் ஆகும்.சில வண்டுகளுக்கும் கொஞ்சம் புற ஊதாவும், சில பறவைகளுக்கு கொஞ்சம் அகச்சிவப்பும் தெரியும், ஆனால் மொத்தத்தில் ஏறக்குறைய இந்த எல்லைக்குள் தான் எல்லா உயிர் இனங்களுக்கும் கண் தெரியும்.

    இரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தில், அவர் இறுதியில் தொழுநோயால் துன்புற்று, மடிவதுப் போல் காட்டப்பட்டுள்ளது. இந்நோயின் தன்மையையும் அதன் தீவிரத்தையும் அவரின் நடிப்பு அற்புதமாக உணர்த்துகிறது .

    மிகவும் பழமை வாய்ந்த ரிக்வேதம், சூரியனைப் பற்றி,

    ஹம்ஸ சுசிஷத் வஸு அந்தரிக்ஷ ஸத்
    ஹோதா வேதிஷத் அதிதிர் துரோண ஸத்
    ந்ருஸத் வரஸத் ரிதஸத் வ்யோம ஸத்
    அப்ஜா கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம்

    எனப்பாடுகிறது.இதன் கருத்து: ஒளியிடை மிதக்கும் அன்னம், நெடுவான் வீற்ற செல்வன், வேள்விக் குறவன், வீட்டினுள் வதியும் விருந்தினன், மனிதரிடையே வாழ்வோன், சிறப்புடையன், உண்மை வடிவினன், அகலிடை உலவுவோன், புனலன், ஒளியன், முமய்யன், வெற்பன், அறவோன் - என்றெல்லாம் சூரியனைத் துதிக்கிறது.

    சிலப்பதிகாரத்தில், கோவலன் மறைவிற்குப்பின், கண்ணகி சூரிய பகவானைப் பார்த்து, ‘‘எரிக்கின்ற கதிர்களைக் கொண்ட சூரிய தேவனே! அலைவீசும் கடலால் சூழப்பட்ட இந்த உலகில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம், நீ நன்றாக அறிவாய். உனக்குத் தெரியாமல், இந்த உலகில் எதுவும் நடைபெறாது. சூரிய பகவானே! என் கணவன் கள்வனா? நீ சொல்!’’ எனக் கேட்டாள். அதற்கு சூரிய பகவான் வானத்தில் இருந்து, ‘‘கண்ணகியே! உன் கணவன் கள்வன் அல்ல. அவனைக் கள்வன் என்று கூறிக் கொலை செய்த இந்த ஊரை, தீ எரித்து விடும்’’ என அசரீரியாகக் குரல் கொடுத்தார். இத்தகவலை,

    ‘பாய் திரைவேலிப் படுபொருள் நீயறிதி
    காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ
    என் கணவன்?
    கள்வனோ அல்லன் கருங்கயற்கண்
    மாதராய்!
    ஒள் எரி உண்ணும் இவ்வூர் என்றதொரு
    குரல்’

    என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை.தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தி வலை 82 அடி அகலத்துடன் காணப்படுகிறது. அதாவது நம்மூரைச் சேர்ந்த 2 பேரூந்துகள் அளவிற்கு இது உள்ளது.

    1568க்கும் 1572க்கும் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின்[Dutch people] ஹெட் வில்லெமுஸ் (Het Wilhemus) என்னும் நாட்டு வணக்கப் பாடல்தான்[தேசிய கீதம் ] உலகிலேயே பழையது என்று கருதப்படுகின்றது.

    நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது.மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.


    அமெரிக்காவின் தேசிய இலச்சினையில் இறக்கைகளை அகல விரித்து மார்பில் கவசம் தரித்த கழுகு, ஒரு காலில் ஒலிவ் கிளையையும் மறுகாலில் அம்புகளையும் பற்றியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அமெரிக்காவைப் பிரதிபலிக்கக் கூடிய மிகப் பொருத்தமான பறவை இதைத்தவிர இன்னொன்று இருக்க முடியாது?

    சங்க காலத்தில் ஒட்டகம் :
    சிறுபாணாற்றுப்படை – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்
    "ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
    வீங்குதிரை கொணர்ந்த விரை மரவிறகின்
    கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
    ..................................................................."

    [உயர்ந்த ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல் கிடக்கின்ற கடல் கொண்டு வந்து ஒதுக்கிய மணம் வீசும் அகில் மரக்கட்டைகளை விறகாக்கி, கரும்புகை எழச் செந்தீயினை மூட்டி, நீண்ட தோள்களையும், .......................]

    ReplyDelete