2012-12-24 நீதானே என் பொன்வசந்தம்
கதை:
காதல் ஜோடியின் மூன்று காலகட்டத்திலான ஊடலும்,
கூடலுமாக கலந்த கதையே நீதானே
என் பொன்வசந்தம்.
நடிகர்கள்:
ஜீவா,சமந்தா,சந்தானம்.
கருத்து:
திரைக்கதை ரசிகர்களை அதிகளவில் வெறுப்பேற்றுகிறது.
புள்ளிகள்:40
2012-12-24 கும்கி
கதை: பாகனின் காதலை, கும்கி யானையை
மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் பிரபு
சாலமன்.
நடிகர்கள்:
விக்ரம் பிரபு, தம்பி ராமையா,லட்சுமி மேனன்
கருத்து: ஜீவனுள்ள கதை...
புள்ளிகள்:50
திரையுள்.....
சென்ற ஆண்டில் கலக்கிய படங்களும் வழுக்கிய படங்களும்
2012-ல் மொத்தம் 168 படங்கள் ரிலீசாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் இவ்வளவு அதிக படங்கள் எப்போதும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தன. பெரிய பட்ஜெட் படங்களும் நிறைய ரிலீசாயின. இவற்றில் 17 படங்கள் மட்டுமே போட்ட முதலை திரும்ப எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சில படங்கள் மெகா ஹிட்டாயின. இன்னும் இப்படங்கள் சராசரிக்கு மேல் லாபம் ஈட்டின. மற்றவை நஷ்டம் இல்லாமல் செலவிட்ட பணத்தை மீட்டு கொடுத்தன.
தியேட்டர் வசூல், டி.வி.க்கு உரிமை வழங்குதல், வெளிநாட்டு உரிமை, பாடல் சி.டி. விற்பனை போன்றவற்றை கணக்கிட்டு பார்க்கையில் நம்பர் ஒன் இடத்தில் 'துப்பாக்கி' இருக்கிறது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகி இன்னும் ஒடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் விநியோகஸ்தர்களுக்கு ரூ.60 கோடிவரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிவாஜி', 'எந்திரன்', படங்களுக்கு பிறகு அதிக வசூல் ஈட்டிய படமாக இது உள்ளது.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சுந்தரபாண்டியன்' படங்கள் செலவு தொகையை காட்டிலும் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளது. 'கும்கி' படமும் இந்த பட்டியலில் இடம்பெறும் என்கின்றனர்.
‘நான் ஈ’,
‘பீட்சா’, ‘கலகலப்பு’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடின. செலவு தொகைக்கு மேல் 50 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளன. ‘மெரீனா’, ‘மனம் கொத்தி பறவை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகியவை ஹிட் படங்கள் பட்டியலில் உள்ளன. இவை செலவுக்கு மேல் 20 முதல் 30 சதவீதம் வரை லாபம் ஈட்டி உள்ளன.
‘அட்டகத்தி’, ‘வழக்கு எண் 18/9’, ‘நான்’, ‘கழுகு’, ‘சாட்டை’ படங்கள் சுமாராக லாபம் பார்த்துள்ளன. செலவுக்கு மேல் 5 முதல் 10 சதவீதம் வரை கிடைத்துள்ளது. ‘நண்பன்’, ‘நீர்பறவை’ சராசரியாக ஓடிய படங்கள் ஆகும். மேலும் சில படங்கள் செலவை சரிகட்டி உள்ளன. மற்றவை நஷ்டத்தில் ஓடின.
சென்ற ஆண்டில் கோலிவுட்டில் கல்லா கட்டாத படங்கள்!
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் வசூல் ரீதியாக அவை பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. 'படம் நல்லாதான் இருக்கு... ஆனா ஓடாது' எனும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்த 2012-லும் அப்படி சில படங்கள் வந்து, சுவடு தெரியாமல் போய்விட்டன. சில படங்களுக்கு ஓஹோ என விமர்சனங்கள் கிடைத்தும் அவை படத்தின் ஓட்டத்துக்கு உதவாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சில படங்கள்...
செங்காத்து பூமியிலே...
பாரதிராஜாவின் கதாசிரியர்களுள் ஒருவரான ரத்னகுமார் இயக்கிய படம் இந்த செங்காத்து பூமியிலே. ரத்த உறவுகளுக்குள் வரும் சண்டை, பூமியை ரத்தத்தால் நனைக்கும் கதை. இளையராஜாவின் உருக்கும் இசை. நல்ல நடிப்பு என அனைத்தும் இருந்தது படத்தில். ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் படம் ஓடவில்லை.
பச்சை என்கிற காத்து
புது இயக்குநர் கீரா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வந்த இந்த படைத்தை மீடியாக்களும் விமர்சகர்களும் பெரிதாக சிலாகித்துதான் எழுதினார்கள். ஆனால் அதெல்லாம் 'அம்மஞ்சல்லிக்குப்' பிரயோசனமில்லாமல் போய்விட்டது. படம் வந்த சுவடே தெரியவில்லை. இப்போது ரெகுலராக சினிமா பார்க்கும் யாரையாவது கேட்டுப் பாருங்கள்... அப்படி ஒரு படம் வந்ததா என திருப்பிக் கேட்பார்கள்!
ராட்டினம்
கிட்டத்தட்ட 'காதல்' படத்தைப் போன்றதொரு படைப்புதான். ஆனால் ரொம்ப ப்ரெஷ்ஷான ஒரு படத்தைப் பார்த்த உணர்வைத் தந்திருந்தார் இயக்குநர் தங்கசாமி. தூத்துக்குடி பின்னணியில் வெகு இயல்பான கதை, இயல்பான க்ளைமாக்ஸ். படத்தை பலரும் பாராட்டினார்கள். இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு நல்ல விஸிட்டிங் கார்டாக அமைந்தது என்பதோடு சரி. வசூல் ரீதியாக பெரிய சாதனை எதுவும் இல்லை.
தடையறத் தாக்க
பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய்யை ஒரு நடிகராக ஒப்புக் கொள்ள வைத்த படம் இது. விறுவிறுப்பாகவும் தரமாகவும் எடுக்கப்பட்ட இந்தப் படம், கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.
மதுபானக்கடை
ஒரு டாஸ்மாக் பார், நான்கைந்து குடிகார பாத்திரங்களை வைத்தே முழுப் படத்தையும் எடுத்திருந்தார் இயக்குநர் கமலக்கண்ணன். ஆனால் அனைவருக்கும் பிடித்த படம் என்று இதனைச் சொல்ல முடியாது.
டிடிஎச்சில் வருமா விஸ்வரூபம்?
டிடிஎச்சில் விஸ்வரூபம் வருமா என்பது குறித்து எந்த உறுதியான பதிலையும் கமல்ஹாஸன் கூறவில்லை.
"விஸ்வரூபம் படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆதரவுடன் வருகிற 25-ந் தேதி, 500 தியேட்டர்களுக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும்'' என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் கூட்டு கூட்டம், பிலிம்சேம்பரில் நேற்று மாலை நடந்தது.
அதில், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.அவருக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் மோதிரம் அணிவித்து, பொன்னாடை போர்த்தினார்கள்.
பின்னர் கமல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலில் இவர்களை அம்பு என்று நினைத்தேன். இப்போது அது அன்பு என்று புரிந்துகொண்டேன். இந்த அன்புக்கு முன்னால் பணிவு ஒன்றுதான் நல்ல ஒழுக்கம். இவர்களின் அன்புக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் (இவர்களுக்குதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கமல் நேற்று முன்தினம் தெரிவித்தார்!).
‘விஸ்வரூபம்' படத்தின் மூலம் நான் பட்ட கடன் தீரும் என்று இங்கே பேசினார்கள். ரே ஒரு கடன் மட்டும் தீராது. அது தமிழ் ரசிகர்களுக்கு நான் பட்ட கடன்.
35 படங்கள் வரை நான் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தபோது, என்னை தூக்கி விட்டவர், கே.பாலசந்தர். இந்திப் பட உலகுக்கும் என்னை தூக்கி விட்டவர், அவர்தான்.
இதுபோன்ற ஆசிகள் தமிழ் திரையுலகில் எனக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, எனக்கு அதிக பலமாக இருக்கிறது.உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். வீணடிக்க மாட்டேன்.
டி.டி.எச். நிறுவனங்களுடன்...
நான் நல்ல தகவலை சொல்வேன் என்று இங்கு கூறினார்கள். ‘விஸ்வரூபம்' படம் டி.டி.எச்.சில் எப்போது ஒளிபரப்பப்படும்? என்பதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.எச்.காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அந்த தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.
ஒட்டுமொத்த தமிழகமெங்கும் திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவுடன் ‘விஸ்வரூபம்' படம் 25-ந் தேதி, 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரைக்கு வரும். திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இருக்கிறீர்கள். அது எனக்கு புத்துணர்வை தரும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment