கணினி உலகம்



அப்பள் நிறுவனத்தின் பங்குகள் சரிவு: முன்னணியில் சாம்சங், கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அப்பிள் நிறுவனம்தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது.
 சமீபகாலமாக அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங்கூகுள் நிறுவனங்கள் கைபேசிகள்,டேப்ளட்கள்மடிக்கணனிகள் போன்றவற்றை குறைந்த விலையிலும்அப்பிளின் தரத்திற்கு நிகராகவும் வழங்க ஆரம்பித்துள்ளன.
இதுதவிர சாம்சங்கூகுள் நிறுவனங்கள் விற்கும் கைபேசிகள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் அப்பளில் அவ்வாறு செய்ய முடியாது.
எனவே சாம்சங்கூகுள் நிறுவன தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இது அப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் $ 705ல் இருந்த அப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கிதற்போது $ 547 ஆக உள்ளது. மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் $ 420 ஐ தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது

மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் இன்று முன்னணியில் இருக்கும் கூகுளின் Gmail சேவையானது iPhone மற்றும் iPad போன்றவற்றிற்கானApplication - இன் புதிய பதிப்பினை

அறிமுகப்படுத்தியுள்ளது.
 Gmail 2.0 பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Applicationஆனது முன்னைய பதிப்பினை விடவும் கவர்ச்சிகரம்இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறான பயனர் இடைமுகத்தினை கொண்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் மின்னஞ்சலுடன் அனுப்பியவரின் புகைப்படங்களை தோற்றுவித்தல்புத்தம் புதிய அனிமேஷன் தொழில்நுட்பம்போன்ற அம்சங்களையும் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை கையாளுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடுதல் வசதி ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குரோம் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு உதவும் நீட்சி இணையத்தளப் பாவனையின் போது முக்கிய பங்கு வகிக்கும் உலாவிகளில் முதன்மையானதாக விளங்கும் கூகுள் குரோம் ஆகும்.

 இங்கு சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களின் காரணமாக அதன் உலாவல் வேகம் மந்தமடைந்து செல்லும். இதனால் அக்கோப்புக்களை அகற்றிவிடுவது அவசியமானதாகும்.
இதற்கான வசதி குரோம் உலாவியில் தரப்பட்டுள்ள போதிலும் இச்செயற்பாட்டை மேலும் இலகுவாக்கும் பொருட்டு நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chrome History Eraser App எனும் இந்த நீட்சியின் உதவியுடன் Cache, Cookies, Download History, தட்டச்சு செய்யப்பட்ட URL-கள்மற்றும் Browsing Historyஎன்பவற்றை ஒரே கிளிக் மூலம் அகற்றி விட முடியும்.
இவை தவிர சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களையும் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள்

இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில்பல தேடியந்திரங்கள் உள்ளன.Aga-Kidsஇந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.
இதை தவிர கார்ட்டூன்விளையாட்டுகள்பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.
அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.
இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.
இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.
இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.
குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.
KidsClick.org
கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.
Ask Kids
ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

இனிமேல் Facebook Messanger-ல் SMS அனுப்பலாம்

 இனிமேல் Facebook Messanger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம்.
இந்த புதிய Facebook Messanger Application-னை முதலில் இந்தியா,இந்தோனேசியாவெனிசுலாஅவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்குசிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அதிகமான பயனாளர்கள் இணைவதுடன்இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென செல்போன் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய பதிப்பாக வெளிவரும் Angry Birds

உலகளாவிய ரீதியில் கணனி விளையாட்டு பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் Angry Birds ஆனது மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.

இக்கணனி விளையாட்டானது காலத்திற்கு காலம் மென்மேலும் மெருகூட்டப்பட்டு புதிதாக வெளியிடப்படுவதுண்டு.
இதன் அடிப்படையில் தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு அதன் புதிய Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 25ம் திகதியை இலக்காகக் கொண்டு 25 Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது இந்த Level - கள் நாள் ஒன்றிற்கு ஒன்று வீதம் அதிகரித்து 25ம் திகதி 25 Level - களை அடைந்துவிடும். மேலும் இப்புதிய பதிப்பில் 3 இரகசியமான Level - கள் காணப்படுவதுடன் ஒரு போனஸ் Level -இனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கணனி விளையாட்டினை Android சாதனங்களுக்காக Google Play Store -இலிருந்தும்iOS சாதனங்களுக்காக Apple App Store - இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.
4. சிக்கலான பொது விஷயங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம். அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான வழி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.



/


No comments:

Post a Comment