கூல்டிரிங்க்ஸ்
குடித்தால்: காபி, டீ குடிக்கிறார்களோ இல்லையோ கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகமாகி வருகிறது. போதாக்குறைக்கு பீஸா, பர்கர் வாங்கினால் இலவசமாக கூல்டிரிங்க்ஸ் கொடுக்கின்றனர். இதுபோன்று தினசரி ஒரு பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு புரஸ்டேட் சுரப்பி புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 45 வயது முதல் 73 வயது வரையிலான 8ஆயிரம் ஆண்களை எடுத்துக் கொண்டார்கள். சராசரியாக 15 வருட உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளனர். இதன்படி, நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
நுரையீரல் தொடர்பான நோய்களுக்குப் பிறகு, புரேஸ்டேட் கேன்சர்தான் ஆண்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வு முடிவில், சர்க்கரை அதிகம் கொண்ட காலை நேர உணவுவகைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 38% அதிகம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி, பாஸ்தா ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வருவதற்கு ஓரளவு வாய்ப்பு கூடுதலாம். இதில் பாதிக்கப்படும் 31 சதவீதம் பேருக்கு சிகிச்சை எதுவும் கிடையாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி ஏதாவது ஒரு வகையில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பது இளைஞர்களுக்கு பழக்கமாகிவிட்டது. இதனால் ஆண்களுக்கு பற்களில் மட்டும் கறை படிவதில்லை, மாறாக ஆண் உறுப்பு சுரப்பிகளில் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவு.
உணவில்
தினமும் நெய் : நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும். அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால்,
அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில் மாற்றம் ஏற்படாது.
5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment