மண்ணின் நண்பன் கரப்பான் பூச்சி-:
பார்த்தாலே அருவறுக்க வைக்கும் கரப்பான் பூச்சிகள் மண்ணின் நண்பனாக உள்ளன என அமெரிக்க பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். பார்ப்பவர்களை அருவறுப்படைய செய்யும் கரப்பான்பூச்சிகள் குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பூமியின் மண்வளத்துக்கு கரப்பான் பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்றும் நிலம் வளமாக இருக்க கரப்பான் பூச்சிகள் அவசியம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீனி கம்மம்பட்டி தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆய்வு குறித்து ஸ்ரீனி கம்மம்பட்டி கூறியதாவது: பொதுவாக வீடுகளில் வெளிச்சம் இல்லாத இடுக்குகளிலும், சாக்கடைகளிலும் கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன.
இவற்றில் ஏராளமான வகைகள் உண்டு. 10,000
வகையான கரப்பான் பூச்சிகளின் இனம் முற்றிலும் அழிந்து விட்டன. பொதுவாக கரப்பான் பூச்சிகள் இறந்த சிறுபூச்சிகள் அல்லது அழுகிய பொருட்களை உணவாகக் கொண்டு உயிர்வாழும் தன்மை கொண்டவை. இவை வெளியிடும் கழிவுகளில் அதிக அளவு நைட்ரஜன் உள்ளது. இவை மண்ணில் கலக்கும்போது மண் வளம் பெறுகிறது. இதனால் தாவரங்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. எனவே கரப்பான்கள் ஒரு விதத்தில் மண்ணின் நண்பனாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புகைப்பிடிக்கும் பொண்ணுகளே-:பிரிட்டனில் மில்லியனுக்கும் அதிகமான பெண்களிடம் நடத்திய ஆய்வில் வாழ்நாள் முழுக்க புகைபிடித்த பெண்கள், புகைப்பழக்கம் இல்லாத பெண்களை விட பத்தாண்டுகள் முன்னதாக உயிரிழந்துவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
லேன்செட்(Lancet) பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வில் தனது முப்பது வயதில் புகை பிடிப்பதை நிறுத்திவிட்ட பெண்கள் கூட புகை தொடர்பான பல நோய்களால் துன்பம் அடைந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தம் வாழ்நாளில் ஒரு மாதத்தை இழந்துவிட்டனர். 40 வயதில் புகைப்பதை நிறுத்தியவர்கள் தமது வாழ்நாளில் ஒரு வருடத்தை இழந்துவிட்டனர் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1950, 60களில் பெண்கள் புகைபிடிக்கத் தொடங்கினர். இவர்களின் வாழ்நாள் மற்றும் நோய்த்தாக்குதல் குறித்து ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ரிச்சர்டு பீட்டோ தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டோ, அளித்த பேட்டியில் புகைபிடிக்கும் பெண்களில் பாதிப்பேர் புகையினால் வரும் நோயால் உயிரிழப்பதுஉறுதியாகியுள்ளது. எனவே இவர்கள் இப்புகைப்பழக்கத்தை நிறுத்தினால், உடல்நலமாக இருப்பதுடன் வாழ்நாளும் அதிகரிக்கும் என்றார்.
பசும்பால் கிரீம் எய்ட்சுக்கு
மருந்து-:பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஹெச்ஐவி புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலஸ்ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள கிரீமில் எய்ட்ஸ் வைரசை தாக்கி அழிக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும் இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. எய்ட்ஸ் நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பால் கிரீம் கட்டுப்படுத்துகிறது, எவ்வளவு கிரீம் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
புற்றுநோய்க்கு உதவும் திருமணம்-:புற்றுநோய் சர்வதேச நோயாக உருமாறியுள்ள நிலையில், அந்நோய்க்கு தீர்வாக திருமணம் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதனின் மூதாதையர் குரங்கல்ல -:நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது. மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமைக்காமலேயே சாதமாகும் அரிசி -:சமைக்காமலேயே சாதமாக சாப்பிடும் புதிய ரச அரிசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இது குறித்து ஒரிசாவின் காட்டாக் நகரில் அமைந்துள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தபன் குமார் ஆதியா கூறியாதவது:
சமைக்காமலேயே சாதமாக சாப்பிடும் புதிய ரச அரிசியை எங்கல் ஆய்வகத்தில் கண்டுபிடித்துள்ளொம். 'அகனிபோரோ' என்று பெயரிபட்டுள்ள இந்த அரிசியை சாப்பிடுவதற்கு நீரில் 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.சுடுதண்ணிர் என்றால் 15 நிமிடங்கள் போதும்.
மறபணு மாற்றத்தின் முலம் இதை நாங்கள் கண்டுப்பிடிக்க வில்லை.இந்தியாவில் பயிரிடப்படும் மற்ற அரிசி போன்றது தான் இந்த புதிய ரக அரிசி.
3 ஆண்டுகளாக நடைப்பெற்ற ஆராய்ச்சிக்கு பின் இந்த அரிசியை எங்கள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்லனர்.பிற அரிசிகளில் இருக்கும் அனைத்து சத்துகளும் இதில் உண்டு என்றார் தபன் குமார்.
ரத்த அழுத்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த-:
உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலையில் மெல்போர்னில் உள்ள போகர் ஐடிஐ இதயம் மற்றும் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இது தொடர்பாக மேற்கொண்டனர். அதாவது, சிறுநீரக ரத்தக் குழாய் சுவரில் உள்ள நரம்புகளில் ரேடியோ அதிர்வலைகளைச் செலுத்தி அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப் பெரும் நிவாரணமாக அமையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவில் உப்பு அளவைக் குறைத்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், மது அருந்துவதைத் தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியன மூலம்தான் ரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
இது தவிர, தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும். தியானப் பயிற்சி மூலமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் இவையெல்லாம் கடினமானவையாகக் கருதப்படுகின்றன. நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு முறையில், ரேடியோ அதிர்வலையை சிறுநீரகச் சுவர் ரத்தக் குழாய் நரம்பினுள் செலுத்துவதன் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மியூனிச்சில் நடைபெற்ற ஐரோப்பிய இதய மருத்துவர்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்தால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், இனி மாத்திரைகளை நம்பி வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
உணவு நேரத்துடன் பசியை தொடர்புபடுத்தும் மரபணு :-ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு தானாகவே பசிக்கிறது. இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு சுருங்கும். கடமுடா என்று சத்தமிடும். கண்கள் கிறுகிறுக்கும். சோர்வாக இருக்கும். இதையடுத்து எதையேனும் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். இத்தகைய உணர்வுகளுக்கு காரணமான மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு “பெர்-2′ என்று பெயரிட்டுள்ளனர். மூளை மற்றும் உடலின் இதரபகுதிகளில் செயல்படும் இந்த மரபணுவை ஆய்வு செய்தால் கொழுப்புச்சத்து நோய்க்கும், தூக்கமின்மை, மதுவுக்கு அடிமையாதல் ஆகியவற்றுக்கு சிகிச்சை முறைகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?: சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
No comments:
Post a Comment