தொழில்நுட்பம்


இலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)

நான் எனது நிறுவனத்தில் பயன்படுத்தும் இலவச இரண்டு மென்பொருள்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
௧(1). Asana.com
இணையம் சார்ந்த மென்பொருள் (பதிவிறக்கி , நிறுவுவ வேண்டிய அவசியம் இல்லை)
நீங்கள் மிக எளிதாக உங்களின் Google Account வைத்து உள் நுழையாலாம்.
அதிக பட்சம் 30 சக பணியாளர்களை உங்களின் WorkSpaceஇல் இணைக்கலாம்.
புதிய பணிகளை (Tasks) மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உருவாக்கலாம்.
பல பணிமுனைகளை (Workspaces) நீங்கள் உருவாக்கலாம்.
இது எப்போதும் இலவசமாகவே இருக்கும்… உங்களை கட்டாயமாக பணம் செலுத்த சொல்லமாட்டார்கள்.
Management & Administration பணிகளை ஒருங்கினைக்க ஏற்றது.
௨ (2). Trello.com
இணையம் சார்ந்த மென்பொருள் (பதிவிறக்கி , நிறுவுவ வேண்டிய அவசியம் இல்லை)
மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்த மிகச் சிறந்தது.
நீங்கள் மிக எளிதாக உங்களின் Google Account வைத்து உள் நுழையாலாம்.
எத்தனை சக பணியாளர்களையும் நீங்கள் இணைக்கலாம்.
Task Label போன்ற வசதிகள் உள்ளது.
இதில் உள்ள Activity Bar உங்கள் சக ஊழியர்கள் செய்யும் பணிகளை உடனே தெரியப்படுத்தும்.
Boards & Cards முறையில் இது இயங்கும்.
இதுவும் எப்போதும் இலவசமாகவே இருக்கும்…

Facebook பயணர்கள் இனி இலவசமாக இணையம் பயன்படுத்தலாம்.

Facebook நிறுவனம் சோதனை ஓட்டமாக சில உணவு விடுதிகளிலும், கொட்டை வடி நீர் (காப்பி என்பதன் தூய தமிழாக்கம்.. இலை வடி நீர் என்பது டீ) கடைகளிலும் புதிய WiFi Router வன் பொருள்களை நிறுவி Facebook.com தளம் மற்றும் Facebook Smart Phone application பயன்படுத்தும் பயனாளார்களுக்கு மட்டும் இலவசமாக தமது WiFi இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்கலாமா என சோதித்து வருகிறது.

நீங்கள் அந்த விடுதிகளில் நுழைந்தவுடன் அந்த விடுதியின் Facebook Page உங்களுக்கு தானாகவே திறந்து காட்டப்படும்.
நீங்கள் போகும் இடமெல்லாம் பொக்குக் கடலையும் ஸ்டேடஸ் போட இந்த வாய்ப்பு பல பிரபல விடுதிகளில் விரைவில் வர இருக்கிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 – ஒரு முடிந்த காவியம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது.
எனவே இவர்கள் பாதுகாப்பில்லாமல், பதிப்பு 8 ஐப் பயன்படுத்த வேண்டும். அல்லது புதிய ஹார்ட்வேர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
அக்டோபர் 26ல், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. நவம்பர் 15ல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8க்கான உதவி நிறுத்தப்படுகிறது.
இந்த நாளுக்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம், கூகுள் அப்ளிகேஷன் சர்வீஸ் தளத்திலிருந்து ஏதேனும் பெற விரும்பினால், பிரவுசரை மேம்படுத்த நமக்கு செய்தியும் அறிவுரையும் வழங்கப்படும். ஏனென்றால், கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 (ஜனவரி 2010) மற்றும் 7னை (ஜூலை 2011) ஒதுக்கி வைத்துவிட்டது.
கூகுள் எப்போதும் அப்போதைய நடப்பில் உள்ள பிரவுசரையும், அதற்கு முந்தைய அந்த பிரவுசரின் பதிப்பினையும் மட்டுமே அனுமதிக்கும். இது அந்நிறுவனத்தின் கொள்கை முடிவாகும். இது நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்.
ஐ.இ. 7 க்கான சப்போர்ட் நிறுத்தப் படுகையில் அது உலகில் 7% பேரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஐ.இ. பதிப்பு 8, உலக அளவில் பரவலாக 25% பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரு பதிப்புகளையும் பயன்படுத்தியவர்களில், ஐ.இ. 8, 47% பேரால் பயன்படுத்தப்படுகிறது.
எனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் ஐ.இ. 8 பயன்படுத்துபவர்கள் பாடு இனி கஷ்டம் தான்.
ஐ.இ. 8 மூலம் கூகுள் மெயில், கூகுள் டாக் மற்றும் கூகுள் காலண்டர் வசதிகளும் கிடைக்காமல் போகலாம். ஒரு கட்டத்தில் உள்ளே சென்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசருக்கு மாறலாம். இந்த பிரவுசர்கள் எக்ஸ்பியில் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

ஸ்கைப் 6.0 வெர்சன் மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய வெர்சனை ஸ்கைப் அறிமுகம் செய்திருக்கிறது

skype-windows-download
ஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டட் டெஸ்க்டாப் ப்ரோக்ராம் வெர்சனை விண்டோஸ் மற்றும் மேக்கிற்காக அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்கைப் 6.0 என்று அழைக்கப்படும் இந்த புதிய வெர்சனை இனி மைக்ரோசாப் மற்றும் பேஸ்புக் மூலமும் சைன் இன் செய்யலாம். அதனால் இனி பழைய மாதிரி ஸ்கைப்பில் சைன் இன் செய்யத் தேவை இராது.
இந்த புதிய ஸ்கைப் அப்டேட் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளோடு இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஹாட் மெயில், அவுட்லுக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் போன்றவற்றிலிருந்து இன்ஸ்டன்ட் மெசேஜ் பெற உதவி செய்கிறது. மேலும் இந்த புதிய அப்டேட் ஸ்கைப்பில் விடப்படும் வீடியோ மற்றும் ஆடியோ கால்களின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.
அதோடு இந்த புதிய ஸ்கைப் 6.0  வெர்சன் 6 புதிய மொழிகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக தாய், குரோஷியன், ஸ்லோவேனியன், செர்பியன், காட்டலான், மற்றஉம் ஸ்லோவாக் போன்ற புதிய மொழிகளை சப்பரோட் செய்கிறது. இதன் மூலம் ஸ்கைப் 6.0 மொத்தம் 38 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இந்த புதிய வெர்சனில் எஸ்எம்எஸ் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் பகுதி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் விண்டோஸ் 8 வெளிவந்த பிறகு வந்திருக்கிறது. கடந்த வருடன் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் ஸ்கைப்பை விலைக்கு வாங்கியது.

சிங்கப்பூரில் உலகின் முதல் LCD Credit Cardஐ அறிமுகப்படுத்தும் MasterCard

இதன் மூலம் ஒரு முறை செயல்படும் கடவுச் சொல்லை (OTP) உருவாக்க இரு பெரிதும் பயன்படும். இது மட்டுமல்லாது உங்களின் Credit Score, Loyalty Points போன்ற விவரங்களையும் எளிதாகக் காணலாம்.
மிகவும் முக்கியமான பணப் பரிவர்த்னைகளுக்கு என OTP  உருவாக்க ஒரு சிறிய கணிப்பான் (Calculator) போன்ற பொருளை தூக்கிச் செல்ல வேண்டும்.. இந்த செயல்த்ிறனை அட்டையில் உட் புகுத்தியுள்ளது MasterCard நிறுவனம்.
இந்த வசதி உலகிலேயே முதன் முதலில் Standard Chartered வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். பின்னர் MasterCard Platinum & Bonus$aver credit cards மற்றும் MasterCard Super Salary, XtraSaver, Bonus$aver debit cards issued in Singapore will now be Display cards.

0 comments:

Post a Comment