2012-11-14 போடா போடி
நடிகர்கள்:-
சிம்பு,வரலட்சுமி
கதை:
- இளவயதுக் காதல் சரியா…? தவறா…? என்ன பட்டிமன்ற தலைப்பு போல் இருக்கிறதா..? இதுதான் போடா போடி படத்தின் ஒருவரிக்கதை!
கருத்து:
யூத் எல்லாம் திரை அரங்குக்குள் கண்டிப்பாக
புள்ளிகள்:-50
2012-10-23 பீட்சா
நடிகர்கள்:- விஜய் சேதுபதி,ரம்யா நம்பீசன், பூஜா
கதை: - மைக்கேலும் (விஜய் சேதுபதி) அனுவும் (ரம்யா நம்பீசன்) ஒன்றாக வாழும் காதலர்கள். மைக்கேல் ஒரு நாள் இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். இதில் உளநலம் பாதிக்கப்பட்ட மைக்கேல் வெகுநேரம் கழித்து கடைக்குத் திரும்பி வருகிறான். அந்த மாளிகையில் என்ன நடந்தது, மைக்கேலுக்கு என்ன ஆனது என்பதே கதை.
கருத்து: தேடிப்போய் அனுபவித்துச் சாப்பிடவேண்டிய பீட்சா.
புள்ளிகள்:-55
2012-10-13 மாற்றான்
நடிகர்கள்:-
சூர்யா, காஜல் அகர்வால்
கதை:
- அரசாங்கம் உதவ மறுத்த விஞ்ஞானிக்கு ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. அதே நேரம் விஞ்ஞானி கண்டுபிடிக்கும் சக்தி தரும் பால் மக்கள் மத்தியில் பிரபலமாகி அவரை பெறும் பணக்காரன் ஆக்கி விடுகிறது. இதனால் அந்தப் பாலின் ரகசியத்தை அறிய பல வெளி சக்திகள் முயற்சிக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் திரைக்கதை
கருத்து:
செக்ஸ், வன்முறை போன்றவை இல்லாததாலும்,நல்ல முயற்சி என்கிற அளவில் ஒரு முறை பார்க்கலாம்.
புள்ளிகள்:-55
திரையின் பின்.......
‘துப்பாக்கி’யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!
துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்
‘சென்னை 28′ படத்தில் நடித்தவர் சிவா. ‘சரோஜா’, ‘தமிழ்படம்’, ‘வா’, ‘கலகலப்பு’ போன்ற படங்களிலும் நடித்தார்.
சிவாவுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரி பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. 5 வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள்.
சிவா – பிரியா திருமணம் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. வேதமந்திரங்கள் ஓத மணப்பெண் கழுத்தில் தாலிகட்டினார். உறவினர்கள், திரையுலகினர் அட்சதை தூவி வாழ்த்தினர்.
நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் பாக்யராஜ், விமல், வைபவ், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டைரக்டர் பத்ரி, ஆர்.எஸ். சிவாஜி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.
விஷ்ணு, சுனைனா நடித்த நீர்ப்பறவைக்கு வரி விலக்கு: கோர்ட்டு உத்தரவு
விஷ்ணு, சுனைனா ஜோடியாக நடித்த படம் ‘நீர்ப்பறவை’ சீனுராமசாமி இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்தை கேளிக்கை வரி விலக்கு குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த அந்த குழுவினர் வரிவிலக்குக்கு உகந்த படம் அல்ல என்று அறிவித்தனர். இதனால் அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.
நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சீனுராமசாமி அறிவித்தார். ரெட்ஜெயின்ட் பட நிறுவனம் சார்பில் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது என்ற முடிவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதாக சீனுராமசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
நீர்ப்பறவை ஆபாசம் வன்முறை இல்லாத படம் தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட குழுவினர் முடிவு எடுத்தது அதிர்ச்சி அளித்தது. இந்த முடிவு என்னை பாதிக்கும்.
நான் அரசியல் சார்பு இல்லாதவன். எனவே தான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தேன். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்.
இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.
ஹன்சிகாவின் முத்த துணிச்சல்
விஷால் நடித்த, “சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர், தற்போது ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இதில், நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். தற்போது, ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மற்றவர்களெல்லாம், முதல்நாளில் ஏதாவது சாமி கும்பிடுவது போன்ற காட்சிகளை படமாக்குவர். ஆனால், இப்பட இயக்குனரோ, ஹன்சிகாவும், சித்தார்த்தும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற, முதல்காட்சியை படமாக்கியிருக்கிறார். “முதல் நாளே முத்தக்காட்சியா என, சித்தார்த் தயக்கம் தெரிவிக்க, ஹன்சிகாவோ, துளியும் தயக்கம் காட்டாமல், காட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நடித்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம்.
பூமிகாவின் புதிய முகம்!!
“பத்ரி, ஜில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களுக்கு பின், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்திய பூமிகா, தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இப்போது, தெலுங்கில் அவர் நடித்து, ஹிட்டான ஒரு படம், “பெண் அடிமை இல்லை என்ற பெயரில், தமிழில் “டப் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரகாஷ் ராஜ், ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்ட கலெக்டராகவும், பூமிகா, அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். கலெக்டராக இருந்தாலும், தன் மனைவியை, வீட்டு சமையல் அறைக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, பெண்ணை அடிமைப்படுத்துவது தவறு என, புரிய வைக்கும், வித்தியாசமான வேடம், பூமிகாவுக்கு. “தமிழில் எப்போதுமே, எனக்கு செல்வாக்கு இருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்துவதால், தமிழில் நடிக்க நேரம் இல்லை. இந்த படம் வெளியானதும், தமிழில் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார், பூமிகா.
படம் எடுக்க போகிறார் சிம்ரன்
பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, திருமணம் செய்து கொண்டவர், குழந்தை பெற்ற கையோடு மீண்டும், “ரீ-என்ட்ரி கொடுத்தார். அவர் வந்த நேரம் நன்றாக இருந்ததால், “வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக்கினார் கவுதம்மேனன். இருப்பினும், தொடர்ந்து சிம்ரன் எதிர்பார்த்தது போன்ற வெயிட்டான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால், “ஜாக்பாட் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரவேசித்த சிம்ரன், அடுத்து சொந்தமாக தமிழில் படம் தயாரிக்க இருப்பதாக சொல்கிறார். “சமீபகாலமாக பிரமாண்ட படம் என்பதை விடுத்து, நல்ல கதை, குறைந்த பட்ஜெட் படங்கள் தான் வெற்றி பெற்று வருகின்றன. அதனால், குறைந்த பட்ஜெட்டில், நல்ல கதை சொல்லும் இயக்குனர்களை வரவேற்கிறேன் என்கிறார் சிம்ரன்.
0 comments:
Post a Comment