உணவின்புதினம்


முட்டை உண்டால்…..
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!
அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்தஅதிக முட்டை உண்ணும் பழக்கம்இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.
இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
முட்டை மீதான இந்த ஆராய்ச்சிஅளவோடு உண்டு வளமோடு வாழநம்மை எச்சரிக்கிறது.
கருஞ்சீரகம்
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
காபியா? டீயா?’
காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

முதலில் `டீக்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.
ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினேஇருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.

சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி கதைக்கு வருவோம். `டீயை விடவும் காபியில் `காபின்அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.

வடி கட்டப்பட்ட `பிளாக் காபிக்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

0 comments:

Post a Comment