டிஜிட்டல் கேமரா "வாங்கும் முன் கவனிக்க-:
லென்சுகளை தேவைக்கேற்ப்ப கழற்றி மாட்டி, அவற்றை சுழற்றி சுழற்றி சூம் செய்து மிகக்கறாறாக போட்டோ எடுக்கும் பரம்பரை நீங்கள் என்றால் SLR (Single-Lens Reflex) எனப்படும் கேமரா உங்களுக்குத் தகும். கலியாண வீடுகளில் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுகளோடு கூட வரும் மிகப்பெரிய சைசு கேமராக்கள் தான் இந்த SLR கேமராக்கள். கோபால் போல ஐநூறு, ஆயிரம் டாலர்களென போட்டோ எடுக்கும் ஒரு கேமராவுக்கு நீங்கள் செலவிடத் தயாரெனில் SLR-கள் ஓகே. என் போன்ற எடுத்தான் கவுத்தான்களுக்கு நூறுடாலர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுகள் எவ்வளவோ மேல்.
2.பேட்டரி வகை
டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் AA போன்ற அல்கலைன் பேட்டரிகள் பயன்படுத்தும் கேமாராக்கள் எப்போதுமே எனக்கு பிடித்ததில்லை. லித்தியம் அயான் எனப்படும் ரீசார்ஞ் செய்யக்கூடிய பேட்டரிகள்
கொண்டவை எனது பிடித்தம். இஷ்டத்துக்கும் பேட்டரிகள் பற்றிய பட்ஜெட் பயமின்றி படம் சுட்டுத்தள்ளலாம். மின் இணைப்பே இல்லாத இடங்களுக்கு சாகசப் பயணம் சென்று "நிஜம்" பிடிப்போருக்கு அல்கலைன்கள் உதவலாம்.
3. அந்த MP கணக்கு
5 MPயே டூமச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelபற்றி யெல்லாம் நீங்கள் ரொம்ப கவலைப்படத் தேவையில்லை.உங்கள் பட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது நல்லது.ஆனால் வாழ்வின் அற்புதமான தருணங்களை resolution மிகக் குறைந்த செல்போன் கேமராக்களில் எடுத்து வீணாக்கி விடாதீர்கள். 4x6 பிரிண்ட் போட குறைந்தது 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட குறைந்தது 900x720 pixels வேண்டும். அதுபோல உண்மையிலேயே டெலஸ்கோப்பு போல நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்கல் சூம் அதிகம் இருப்பது நமக்கு கேமராவில் தேவையான விசயம் தான். ஆனால் வெறும் படத்தை மட்டும் சூம் செய்து போகப்போக மோசமான தரம் தரும் டிஜிட்டல் சூம் பற்றி ரொம்ப கவனிக்க தேவையில்லை.
4. கூடவே ஒட்டி வருவன
எடுக்கும் போட்டோக்களை சேமித்து வைக்க குறைந்தது 2GB அல்லது 4GB மெமரி கார்டாவது இருப்பது அவசியம். கேமராவோடு எவ்வளவு மெமெரி வருகிறதுவென விசாரியுங்கள். அப்படியே உங்கள் கேமராவை பாதுகாக்க ஒரு கேசும் இலவசமாக வந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேமராவின் விலையை கூட்டும் சமாசாரங்கள்.
5.கண்டு ரசிக்க
எடுக்கப்பட்ட படங்களை பெரிய திரையில் பார்வையிட உங்களிடமோ அல்லது நீங்கள் பரிசளிக்கவிருக்கும் நண்பரிடமோ ஒரு மேஜைக்கணிணியோ அல்லது மடிக்கணிணியோ இருப்பது அவசியம். அல்லது ஒரு டிஜிட்டல் போட்டோ பிரேமாவது இருப்பது அவசியம். வீடுகளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட தாங்கள் எடுத்த டிஜிட்டல் போட்டோக்களை அச்சிட்டு பெற்றுக்கொள்ளலாம்.
பிரிண்டர்கள் வாங்கும் முன் கவனிக்க-:
அதிகம் பயன்படுத்தாமல் அவ்வப்போது எப்போதாவது கலரும், கறுப்பு
வெள்ளையுமாக பிரிண்ட் செய்பவர்கள் இங்ஜெட் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். விலை மலிவான தெரிவு அது. அதுவே நீங்கள அதிக அளவு பிரிண்ட் செய்பவர்கள் ஆனால் கறுப்பு வெள்ளை மட்டும் போதும் என்றால் மோனோ குரோம் லேசர் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். மோனோகுரோம் லேசர் பிரிண்டர்களின் விலைகள் இப்போது ஒரு இங்ஜெட் பிரிண்டரின் விலைக்கு குறைந்து
விட்டது.அதிகமாக வேகமாக கலர் கலராக ஹெவிடூட்டி பிரிண்ட் செய்யவேண்டுமென விரும்புபவர்கள் கண்டிப்பாக சேரவேண்டிய இடம் கலர் லேசர் பிரிண்டர்கள்.
2.ஆல்-இன்-ஒன்
பெரும்பாலான இங்ஜெட் பிரிண்டர்கள் பேக்ஸ்/ஜெராக்ஸ்காப்பி/ஸ்கேன் போன்ற அம்சங்களோடு தான் வருகின்றன. ஆனாலும் நீங்கள் உங்களுக்கு தேவையான அம்சங்கள் அக்குறிப்பிட்ட பிரிண்டரில் இருக்கின்றதாவென உறுதிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கொஞ்சமாக பேக்ஸ் வசதி பிரிண்டர்களிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஆல்-இன்-ஒன் லேசர் பிரிண்டர்கள் பெரும்பாலும் வண்ணப் பிரிண்டர்களாதலால் விலை கூரையை எட்டும். சாதாரண வீட்டு தேவைகளுக்கு ஆல்-இன்-ஒன் இங்க்ஜெட்
வண்ண பிரிண்டரே ரொம்ப மதி.
3.வைஃபை கண்டிப்பாக வேண்டும்
USB போர்ட்டும் கேபிளும் மட்டும் கொண்டு பிரிண்டர் வந்தால் மிகப்பெரிய தொல்லை. அச்செடுக்க எப்போதும் பிரிண்டர் அண்டையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.வைஃபை எனப்படும் வயர்லெஸ் வசதி இருந்தால் சுதந்திரமாய் உலா வரலாம். எனவே wifi வசதியுள்ள பிரிண்டராய் பார்த்து வாங்குவது
மிகவும் அவசியம்.
4.பராமரிப்பு செலவு
பிரிண்டர்கள் பராமரிப்பு செலவுகளோடு வருகின்றன. குறிப்பாக இங்க் கார்ட்ரிட்ஜ்கள். எனவே பிரிண்டர் வாங்கும் போது முன்பே அதற்கான இங்க் கார்ட்ரிட்ஜ்கள் விலை, ஒரு கார்ட்ரிட்ஜ்ஜால் எத்தனை அச்சுகள் எடுக்கலாம், எதாவது குறிப்பிட்ட தர அல்லது அளவு காகிதம் பயன்படுத்த வேண்டுமா? அப்படியெனில் அதன் விலை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்திலேயே கணக்கிட்டுக் கொள்வது நல்லது.
5.பிற வசதிகள்
மொபைல் பிரிண்டிங் - கைப்பேசியிலிருந்து அல்லது ஐபேட் போன்ற டேப்ளட்களிலிருந்து நேரடியாக அச்செடுத்தல்.
டூப்ளக்சிங் - காகித்தின் இருபுறமும் பிரிண்ட் செய்குதல்.
இண்டர்நெட் பிரிண்டிங் - உலகின் எந்த மூலையிலிருந்தும் பிரிண்ட் செய்யும் வசதி.
பிரிண்டர் ஆப்ஸ்- நேரடியாக பிரிண்டர்
டச் ஸ்கீரீனை தட்டி சுகோடுகள் /கோலங்கள் /குறுக்கெழுத்து போட்டிகள் /வாழ்த்து அட்டைகள் அச்சிடும் வசதி.
இந்த வசதிகளெல்லாம் உங்களுக்கு வேண்டுமெனில் பிரிண்டர் வாங்கும் போதே நினைவில் கொண்டு தீர விசாரித்து வாங்குவது நல்லது.
ஸ்மார்ட் போன்கள் வாங்கும் முன் கவனிக்க-:
1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்கள்,கணிணிகளைப் போலவே ஏதாவது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த OS-களில் எந்த OS உங்களுக்கு மிகவும் பிடித்தமானது சவுகரியமானது என முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் அதற்கென "பயன்பாடு சந்தை"களை கொண்டுள்ளன. ஐமீன் AppStore or Application
Marketplace.எப்படியும் உங்கள் ஸ்மார்ட்போன் மேற்சொன்னவைகளில் எதாவது ஒரு OS-ஐ கொண்டிருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். எனது பரிந்துரை Android. முடியுமெனில் iOS4.
2. இணைய இணைப்பு வசதிகள் : உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி.
உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். சில கணிப்பேசிகள் இரண்டுமே கொண்டு வருகின்றன. டச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen நல்ல தொடு உணர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து
அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுதல் நல்லது.பிற்பாடு விரல்களால் மொத்து மொத்தென திரையை மொத்துவதை தவிர்க்கலாம்.யூடியூப் வீடியோ பார்வைகளுக்கு நல்ல Display Resolution இருப்பது நல்லது.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.
4.நினைவகம் : பயன்பாடுகளை நிறுவ அதிக Internal Memory தேவைப்படும்.GB கணக்கில் இருப்பது நல்லது.
5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.
0 comments:
Post a Comment