குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.
இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி ஆர்த்தி பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் எழுதிய லைக் எ விர்ஜின் என்ற அறிவியல் ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது.
அதில் தற்போது பல துறைகளில் அதிவேகமாக அறிவியல் முன்னேறியுள்ளது. அதுபோன்று இனபெருக்க உற்பத்தியிலும் அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளோம்.
எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மூலம் செயற்கை கருப்பை தயாரிக்க முடியும். அதில் இயற்கை கருப்பையில் இருக்கும் பேக்டீரியாக்கல் மற்றும் திரவத்தை உருவாக்கலாம்.
எனவே, குழந்தையை
10 மாதம் சுமக்க பெண் தேவை இல்லை. அதேபோன்று, உயிரணு (விந்தணு) பெற ஆண் தேவையில்லை. ஏனெனில் செயற்கை முறையில் தற்போது அது தயாரிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை...: உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http://www.melma.se/ என்றோ அல்லது வேறு Message Link Address வந்தால் அதனை நீங்கள்
Open பண்ண வேண்டாம்.
அதில் ஆபாச புகைப்படத்தை இணைத்து விட்டிருக்கின்றனர்.
எனவே இந்த
"VIRUS" link Click செய்தால் தங்களது FACEBOOK ல் இருந்து தங்களை அறியாமல் உங்களுடைய நண்பர்கள். மற்றும் உறவினர்கள் என நீங்கள்
Message அனுப்புவது போன்று எல்லோருக்கும் போய்ச்சேரும்.
இதனால் நமது நட்பையும் மறியாதையையும் இழக்க நேரிடும். எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு. இயலுமானவரை ஏனைய நண்பர்களுக்கும்
SHARE பண்ணுங்க..
குறிப்பு:-எமக்கும் இவ்வாறான மெயில் வந்தது. அதை நாங்கள் திறக்க நேரிடவில்லை என்றாலும் எமது பெயரிலிருந்து இதேபோல் Link Address Message வந்திருந்தால் அது நாமாக அனுப்பவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
காது கேளாதவர்களுக்கு சத்தத்தை உணர்த்தும் புதிய கண்ணாடி:
காது
கேளாத மனிதர்கள் பார்ப்பதற்கு ஜம்மென்று இருப்பார்கள். அவர்களிடம் அந்த குறைபாடு இருப்பது போல் தெரியாது. ஆனால் அவர்களால் இந்த உலகத்தின் இனிமையான சத்தத்தை மற்றும் இசையைக் கேட்ட முடியாது.
ஆனால்
தொழில் நுட்பத்தின் மூலம் இனி் அவர்களால் சத்தத்தை உணர முடியும். அதற்காக ஒரு கண்ணாடி வந்திருக்கிறது. அதாவது கொரியாவில் இருக்கும் கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜியைச் சேர்ந்த அறிஞர்கள் ஒரு புதிய மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
காது
கேளாதவர்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், அவர்கள் சத்தத்தை பார்க்க முடியும். அதாவது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று இந்த கண்ணாடி அவர்களுக்கு உணர்த்தும் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த
கண்ணாடியின் பிரேமில் 7 மைக்ரோபோன்கள் உள்ளதால் அவை சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை காது கேளாதவர்களுக்கு மிக எளிதில் உணர்த்திவிடும்.
காது
கேளாதவர்களுக்கு இந்த புதிய கண்ணாடி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பலாம். மேலும் இந்த கண்ணாடி மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லலாம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்”
என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த
விமானம் மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹைப்பர் சோனிக் என அழைக்கின்றனர். இந்த விமானத்தில் பி-52 குண்டு வீசும் விமானத்தின் இறக்கை பொருத்தப்பட்டுள்ளது.
இந்த
விமானம் இன்று தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. இது 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.
இச்சோதனை
வெற்றி பெற்றால் விமான வரலாற்றில் இது புதிய மைல் கல் ஆக கருதப்படும்.
ஜப்பான்
விஞ்ஞானிகளின் புதிய கண்டு பிடிப்பு.நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்து.
விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக
இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம்.
இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.ஜப்பானில் உள்ள
தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள்.
இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர்.
அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில்
செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த
கசிவு உடனடியாக தடுக்கப்படும்.தற்போது விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதித்து உள்ளனர்.
அதில் மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது. இந்த புதிய மருந்து மூலம் உலகில் பெரிய அளவில்
விபத்து மரணங்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஆபரேசன் செய்யும்
போதும் இந்த மருந்தை பயன்படுத்தினால் அதிக ரத்தபோக்கை தடுக்கலாம் என்றும் அவர்கள்
0 comments:
Post a Comment