சார்! நாங்க வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்''
"ஆச்சரியமா இருக்கே?''
"இதுக்கே ஆச்சரியப்பட்டா... போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்''
திருமணமாகும் என்பது நம்பிக்கை;
குழந்தைக்கு முயற்சிப்பது தன்னம்பிக்கை;
குழந்தை வளர்ந்து நம்மை பார்த்துக்கொள்ளும் என நினைப்பது மூடநம்பிக்கை
ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"
"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
"இறப்புக்குப் பின்னும் வாழ்க்கையுண்டான்னு ஏன்
கேட்கறீங்க, சார்?''
"சைதாப்பேட்டைச் சித்தப்பா செத்துப் போனாருன்னு
நீ லீவு போட்டுட்டு முந்தாநாள் போனீயே... அன்னைக்கு அவரே உன்னைப் பார்க்க நேர்ல
இங்க வந்தார். அதான் கேட்டேன்''
"உனக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''
"காதலிக்கிறது
ஒரு கலை"ன்னு என் லவ்வர் அடிக்கடி சொல்றதோட அர்த்தம் எனக்கு இப்பதான்
புரியுது!''
என்னாச்சு?
" கலைச்சிட
சொல்றார்!"
நோயாளி : "உடம்பெல்லாம் எனக்கு ஒரே அரிப்பு."
டாக்டர் : "ஊசி போடவா!"
நோயாளி : "வேணாம் டாக்டர்.. கொஞ்சம் சொறிஞ்சு விட்டா போதும்".
ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...
மற்றொருவன் : ஏன்டா?
ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...
கணவன்: `தொப்பு’ன்னு சத்தம் கேட்டுதே… கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா!
மனைவி: முடியாது! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது!
சர்தார்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
இதுக்கே ஆச்சரியப்பட்டா... போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்''
ReplyDelete