சினிமா



ஆவணி மாதத்தில் வந்த திரைப் படங்கள்
2012-08-31   முகமூடி
 நடிகர்கள்:- ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன்,நாசர்.
 கதை: - அமெரிக்கக் கதாபாத்திரமான 'பேட்மேனை'யும் சீனக் கலையான 'குங்ஃபூ' வையும் கிண்டி மிஷ்கின் கொடுத்திருக்கும் நூடுல்ஸ்தான் 'முகமூடி'.
கருத்து: - பேட்மேன் பார்த்தவர்களுக்கு முகமூடி பிடிக்கலாம்; பார்க்காதவர்களுக்குப் பிடிக்கும்.
புள்ளிகள்:-52
2012-08-25   நான்
 நடிகர்கள்:- விஜய் அன்டனி,அனுயா,சித்தார்த் வேணுகோபால்,மஞ்சரி.
 கதை: - பெற்றோரின் தவறுகளால் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்லும் ஒருவன் வெளியில் வந்து ஒரு விபத்தின் போது இறக்கும் சக பயணியின் அடையாளத்தை வைத்து சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.
கருத்து: -. சின்னப்பையன்: “நான்போராடுவான். வெல்லலாம்!!
புள்ளிகள்:-50
2012-08-18   அட்டகத்தி
நடிகர்கள்:- தினேஷ்,நந்திதா.
 கதை: - 'அண்ணா' என்றழைக்கும் பெண்களை "கண்ணா' என்று அழைக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் கதை
கருத்து: -.-. திரைப்படம் இதுவரையில் சொல்லப்படாத புறநகர் கிராமப்புற வாழ்வை ரொம்பவும் இயல்பாக ஆவணப்படுத்தியிருக்கிறது.
புள்ளிகள்:-50
திரைக்கு முன்னால்..

ஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட்துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு!!

துப்பாக்கி படத்தின் தலைப்பு சண்டை இப்போதைக்கு ஓயவே ஓயாது போலிருக்கிறது. இந்த வழக்கை 7 வது முறையாக ஒத்தி வைத்தார் நீதிபதி திருமகள்.
படத்தின் தலைப்பு மீதான இடைக்காலத்தடை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் சி ரவிதேவன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். விஜய் நடிக்கும் துப்பாக்கி படத் தலைப்பு மற்றும் டிசைன்கள், தன்னுடைய கள்ளத் துப்பாக்கி தலைப்பு – டிசைனை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை இதுவரை 7 முறை நீட்டித்துள்ளார் நீதிபதி. துப்பாக்கி படத் தயாரிப்பாளர் தரப்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பது இந்த முறை ஒத்தி வைப்புக்கான காரணம்.
தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவது தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


இந்த தீபாவளி விஜய் Vs கார்த்தி!!
பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும்.
ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு உறுதியில்லை!!)யோடு மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.
விஜய் – அஜீத், விஜய் – சூர்யா என்பது போய், இப்போது விஜய் – கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.
இந்த தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படங்கள் இந்த இரண்டும்தான். நவம்பர் 13-ம் தேதிக்கு பெருமளவு திரையரங்குகளை இந்தப் படங்களுக்குப் பெறுவதில் கடும்போட்டியே நடந்து வருகிறது.
இதனால் தீபாவளியைக் குறிவைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பிற படங்களின் ரிலீஸ் தேதி மாறக்கூடும் என்கிறார்கள்.
துப்பாக்கியை கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி பிலிம்ஸ் விநியோகிக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வெளியிடுகிறது.

விபத்து இழப்பீடுகளை தடுக்க ரஜினி, கமல், ஆர்யா படங்களுக்கு இன்சூரன்ஸ்
திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. படப்பிடிப்பு அரங்குகளில் எதிர்பாராத தீ விபத்து, வெள்ளம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காயம் ஏற்படுதல் என பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள படங்களை இன்சூரன்ஸ் செய்ய துவங்கியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்த ‘ராவணன்’, ‘ராஜபாட்டை’ சமீபத்தில் ரிலீசான ‘முகமூடி’, ‘நான் ஈ’ படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டன.
‘ராவணன்’, படஅரங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்காக ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் மூலம் நஷ்டஈடு பெறப்பட்டதாம். ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்’, கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம்’, ஆர்யாவின் ‘இரண்டாம் உலகம்’, மணிரத்னம் இயக்கும் ‘கடல்’, பாலா இயக்கும் ‘பரதேசி’ படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும் போது, சமீபத்தில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படத்தை இன்சூரன்ஸ் செய்து இருந்ததால் அவருக்கு மருத்துவ செலவாக ரூ.1 1/2 லட்சம் கிடைத்தது என்றார். இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.3.ல் இருந்து 1 சதவீதமே வசூலிக்கின்றனர்.
ஒரே டிராபிக்ஜாம்...திக்கி திணறும் படங்கள்

sivaji 3Dசட்டி நிறைய அல்வா இருந்தும் பரிமாற தட்டு இல்லையே என்றாகும் போலிருக்கிறது நிலைமை. கமலின் விஸ்வரூபம், சூர்யாவின் மாற்றான், விஜய்யின் துப்பாக்கி, பாலாவின் பரதேசி, விக்ரமின் தாண்டவம், கவுதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் இவ்வளவு படங்களும் ரிலீசுக்கு தயாராகி ஒரே நேரத்தில் மோதும் போல தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் தயாராக இருக்கிறதாம்.

அதுவும் வருகிற தீபாவளிக்கு மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம், பரதேசி ஆகிய நான்கும் ஒரே நேரத்தில் மோத ரெடி. இந்த இடத்தில்தான் ஜர்க் அடிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களை சுமார் ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட்டு ஒரே வாரத்தில் துட்டு பார்த்துவிடுவதுதான் இப்போதைய வழக்கம். இருக்கிற தியேட்டர்களை பிரித்து நான்கு படங்களையும் திரையிட்டால் குரங்கு பங்கு பிரித்த கதையாகிவிடுமே என்பதுதான் அவர்களின் அச்சம்.

இந்த கலாட்டாக்கள் எதிலும் நாம் சேர்த்தியில்லை. அவ்வளவு படங்களும் தீபாவளி தினமான நவம்பர் 13 ந் தேதிக்குள் வந்து போய்விடும். நிதானமாக டிசம்பரில் சிவாஜி 3டி யை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது பிறந்த நாளான 12-12-12 என்ற ஸ்பெஷல் நாளில் வெளிவரப்போகிறது சிவாஜி 3டி.
எல்லாத்துக்கும் ரேட்,இனியா கொடுக்கும் கசப்பு
Iniyaஅறிக்கை கொடுக்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் சில கௌரவமான அழைப்புகளை. வேறொன்றுமில்லை... கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதற்காக எந்த நடிகர் நடிகையை அழைத்தாலும் 'எவ்வளவு துட்டு கொடுப்பீங்க?' என்கிறார்களாம். இதைக் கண்டு பொங்கி வெடித்த ஒரு லெட்டர் பேட் அரசியல்வாதி அறிக்கையே கொடுத்துவிட்டார் பத்திரிகைகளுக்கு. 'கல்லூரிகளுக்கு பேச அழைத்தால் பணம் கேட்காதீங்க. அவங்க கொடுக்கிற டிக்கெட் காசுல வளர்ந்த ஆளுங்கதானே நீங்க' என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம் மற்றும் ஓராம்சம்.

நடிகர் நடிகைகள் சிலரிடம் இது பற்றி விசாரித்தால், ஏதாவது கல்லு£ரிகளில் ஷுட்டிங் நடத்தணும்னு பர்மிஷன் கேட்டுப் பாருங்களேன். ஒரு நாளைக்கு ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு பில் போடுவாங்க. அவங்களுக்கு இருக்கிற அதே இருட்டு மனசுதானே இன்னொருத்தருக்கும் இருக்கும்? நாங்க பணம் கேட்பதுல என்ன தப்பு என்றார்கள். (இந்த பிரச்சனையை அலசி ஆராயும் பொருட்டு பாப்பையாவை கூப்பிட்டு பட்டிமன்றமே வைக்கலாம் போலிருக்கே)

இதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அண்மையில் நடிகை இனியாவை தொடர்பு கொண்ட ஒரு நிருபருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. சென்னையில இருக்கீங்களா, இருந்தா ஒரு பேட்டி வேணும். -இது நிருபர். அப்படியா? பேட்டிக்கு எவ்ளோ பணம் தருவீங்க? - இது இனியா. இதை தொடர்ந்த காரசாரமான விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது போனை டொங் என்று வைத்த நிருபர் 'நாசமா போவ...' என்று இனியாவை சபித்ததுதான் கண்கொள்ளாக் காட்சி.
செய்வது விஜய் படம்,நினைப்பெல்லாம் அஜீத்திடம்...
A.R.Murugadossவிஜய்யை வைத்து 'துப்பாக்கி' படத்தை இயக்கிக் கொண்டிருந்தாலும், மனசெல்லாம் அஜீத்தின் பக்கமே இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசுக்கு. 'அதெப்படி?' என்கிறவர்களுக்கு ஆதாரமாக நாம் சொல்லப் போகும் தகவல் இதுதான்.

தனது தம்பியை வெகு காலமாக ஹீரோவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். ஒருவழியாக அதற்கான நேரமும் வந்துவிட்டது. இப்படத்திற்கு தலைப்பு தேடி தவியாய் தவித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு நள்ளிரவில் வந்தது திடீர் ஞானோதயம்.

தனது முதல் படமான தினாவில் இடம் பெற்ற அஜீத் பாடும் பாடல் ஒன்றின் முதல் வரிதான் நினைவுக்கு வந்ததாம் அப்போது. வத்திக்குச்சி பத்திக்காதுடா... என்பதில் பத்திக்காதுடாவை நீக்கிவிட்டு 'வத்திக்குச்சி' என்று வைத்துவிட்டார். என்னைக்கு முறைப்படி பற்ற வைக்கப் போறாரோ?
அரசியலா... வேணாம்ப்பா,அலறி ஓடுகிறார் அந்தகால ஸ்ரீதேவி
Srideviநீங்க சிரிச்சிகிட்டே இருக்கறதாலதான் உங்களுக்கு 'சிரி'தேவின்னு பேரு வச்சாங்களா? சென்னைக்கு வந்திருந்த மயிலு ஸ்ரீதேவிக்கு மங்கள வாத்தியம் இசைத்தார் ஒரு நிருபர். அவ்வளவுதான்... வெட்கத்தை மிக்ஸ் பண்ணி வெள்ளந்தியாக சிரித்த ஸ்ரீதேவி 'ஐய்ய்யய்யோ இப்படியெல்லாமா கேட்பாங்க' என்கிற மாதிரி பார்த்தார் நிருபரை. அப்புறம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் சாவி கொடுத்த மாதிரி அவர் பதில் சொல்லிக் கொண்டே வர, ஒரு கேள்விக்கு மட்டும் விழுந்ததே பிரேக்!

சரி. உங்களை திரையில பார்த்துட்டோம். அந்த மாதிரி உங்க வாரிகளை எப்போ பார்க்கறது? இந்த இடத்தில் மிக கவனமாக பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்ரீதேவி. இப்பதான் நானே பெரிய 'கேப்'புக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். (தொகுப்பாளர் ரம்யா 26 வருடங்கள் என்கிறார். பிலிம்நியூஸ் புலிகள்தான் இதை சரிபார்க்க வேண்டும்) முதல்ல என்னை ரசிங்க. அப்புறம் ரசிக்கலாம் என்னோட வாரிசுகளை...' என்றார் ஸ்ரீதேவி.

நல்ல கதைகள் அமைஞ்சா கண்டிப்பா தமிழ்ல நடிப்பேன்... ரஜினி, கமல் ரெண்டு பேர் கூடவும் நடிக்கலாம். அவங்க கருத்தையும் கேளுங்க... இப்ப வர்ற ஹீரோயின்களை பற்றி நான் என்ன சொல்றது, ரசிகர்கள்தான் சொல்லணும்... இப்படி பட்டும் படாமலும் நழுவிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியை 'சொரேல்' ஆக்கியது பயில்வானின் கேள்வி.

உங்க தங்கச்சி அரசியலுக்கு வந்தாங்க. உங்களுக்கு அப்படியொரு ஆசை இருக்கா? ஜெயப்ரதா, ஹேமமாலினி, ரேகா மாதிரி எம்.பி. சீட் கொடுத்தா ஏத்துப்பீங்களா? இதுதான் கேள்வி.

எனக்கு அதுமாதிரி ஆசையெல்லாம் இல்லைங்க. குழந்தைகளை நல்லபடியா பார்த்து வளர்த்தா போதும். கிடைக்கிற நேரத்தை அவங்க கூட ஸ்பென்ட் பண்ணணும். மிக தீர்மானமாக சொன்னார் ஸ்ரீதேவி.

பேகன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் ஆயிரம் போர்வைகள் கூட போர்த்தியிருப்பார் இந்த புத்திசாலி மயிலுக்கு!

பின்குறிப்பு- மயிலு சென்னைக்கு வந்ததும் பிரஸ்சை மீட் பண்ணியதும் எதற்கு தெரியுமா? அவர் ஹீரோயினாக நடிக்கும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் பிரமோஷன் மீட்டுக்கு.
எங்கிருந்தோ கேட்ட விவேக் எடுத்துக்கொடுத்த உதவியாளர்
Vivek'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் விவேக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி பிரசாத் லேபில் நடந்தது.

பாக்யராஜ் நடித்த படமான அந்த ஏழு நாட்கள் படத்தின் முக்கியமான கேரக்டர் அல்லவா அது? பாக்யராஜையே விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அவர் பேச பேச அதை தனது செல்போன் மூலம் அமெரிக்காவிலிருக்கும் விவேக்குக்கு லைவ் செய்தார் அவரது உதவியாளர் 'செல்' முருகன்.

இப்படியெல்லாம் செல் மூலம் உதவுவாருன்னு தெரிஞ்சேதான் 'செல்' முருகன்னு அடைமொழி வச்சாங்களோ? அதிருக்கட்டும்... விழாவுக்கு வருகிற வரைக்கும் இந்த தலைப்பு பற்றி தெரியாதாம் பாக்யராஜுக்கு. திடீரென்று இந்த டைட்டிலை அறிவித்தார்கள். அப்படியே நெக்குருகிப் போன பாக்யராஜ், பிளாஷ்பேக்கில் மூழ்க ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மைக்கோடு குடும்பம் நடத்திவிட்டார் அவர்.
நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் “திருவிளையாடல் மறு வெளியீடு 
சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை இயக்கிய .பி. நாகராஜனும் நக்கீ ரனாகவும் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் நடிப்பும நகைச்சுவையும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர் களையும் மிகவும் கவர்ந்தது.

பிரமாண்ட அரங்குகள் அமை த்து மெகா பட்ஜெட்டில் இப்பட த்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்றபழம் நீயப்பா ஞானபழம் நீயப் பா’, ‘இன்றொ ரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாத னை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட் டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானேபோன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

திருவிளையாடல்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது.

0 comments:

Post a Comment