கனடாவில்....


தமிழ்க் கல்வி
கனடாவில் தமிழ்க் கல்வி 1980 களில் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாக கனடாவிலேயே அதிக தமிழ் மக்கள் (~250 000) வசிக்கிறார்கள். இங்கு பல தனியார்,அரச தமிழ் வகுப்புகள், வசதிகள் பல இருந்தும் இங்கு பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கல்வியைப் பெறுவதில்லை. ஒரு கணிப்பின் படி 33 000 தமிழ்ச் சிறார்களில் ஏறக்குறைய 20 000 பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை.
அடிப்படை பள்ளியில் இருந்து பல்கலைக்கழக கல்வி வரை தமிழை ஒரு பாடமாக எடுக்க கனடாவில் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் ரொறன்ரோ பெரும் நகரப் பகுதியில் இந்த வாய்ப்புக்கள் உண்டு.
உயர் பள்ளி மாணவர்களுக்கு (High School Students) தமது பல்கலைக் கழகத் தேர்வுக்கு தேவையான 30 கிறடிக்களில், தமிழ் மொழிக்காக 4 கிறடிக்கள் பெற முடியும்.
ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலும், யோர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வகுப்புகள் உண்டு. தமிழ்நாட்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் ஊடாக கனடாவில் தமிழ்ப் பட்டப்படிப்படையும் மேற்கொள்ளலாம்.
 தமிழ் மொழிக் கல்வி பெறும் தமிழ் மாணவர்களின் விழுக்காடு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான இரண்டாம் தலைமுறை மாணவர்கள் தமிழ்க் கல்வி அற்றும், தமிழில் பேசத் தெரியாதவர்களாகவும் உள்ளார்கள். தமிழ் மொழிக் கல்வி கற்றாலும், தொடர்ச்சியான தமிழ் வாசிப்பு, எழுத்து மிக அரிது. மிகச் சிறிய விழுக்காட்டினரே தமது பிள்ளைகளுக்கு தமிழைத் திறம்பட கற்றுத் தருகிறார்கள்.
முதலில் முற்றிலும் தமிழாக இருந்த ஊடகங்கள், பின்னர் இரு மொழி ஊடகங்களாகவும், பின்னர் ஆங்கிலம் தனிய ஊடகங்களாகவும் மாறும் தோரணம் இருக்கிறது. வரும் இருபது முப்பது ஆண்டுகளில், தலைமுறை மாற்றம் வந்த பின்னர் தமிழ் மொழிக் கல்வி மேலும் தேக்க நிலையை அடையலாம். அதே வேளை மூன்றாம் தலைமுறையினர் தமது வேர்களையும் மொழியையும் ஆர்வத்துடன் தேடும் நிலைமையும் உருவாகலாம்.

0 comments:

Post a Comment