முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
முதுகுத் தண்டின் நெகிழ்ச்சித் தன்மையை அப்படியே சுருதி பிசகாமல் பிரதிபலிக்கும் ஒரு சிறு செயற்கை வட்டை
(Disc) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முதுகுவலிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்காவின் பிரிகாம் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழுவினர் உருவாக்கிய இந்த
"ரோலர்" என்ற வட்டு முத்குத் தண்டில் பழுதடைந்த டிஸ்க்குகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தண்டுவடத்தில் இயற்கையாக உள்ள டிஸ்க் எப்படி வேலை செய்கிறதோ, அப்படியே சுருதி பிசகாமல் இந்த செயற்கை வட்டும் வேலை செய்யும்.
இந்த புதிய செயற்கை வட்டு ரோலிங் செயல்பாட்டுடன் தண்டுவடம் பல திசைகளில் இயங்க வழிவகை செய்கிறது.
தண்டுவட டிஸ்க்குகளில் ஒரு ஜெல் போன்ற ஒரு திரவம் உள்ளது உடல் அசையும் போது இது தண்டுவடத்திற்கு இயக்கத்தை குஷன் போன்று பராமரிக்கிறது. இயக்கத்திற்கு இந்த டிஸ்குகள் பெரிதும் பயன்படுகிறது என்றாலும் இவை பழுதடையும்போது முதுகு வலி தோன்றுகிறது. உடனே வலிநிவாரணி மாத்திரைகள், பிசியோதெரபி, முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
இதில் மிகவும் பிரபலமான மருத்துவம்
"ஃபியூஷன்" என்று அழைக்கப்படுகிறது. பழுதடைந்த டிஸ்கின் இருபுறத்திலிருக்கும் தண்டெலும்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு வலி குறைக்கப்படுகிறது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்தால் இயக்கம் மட்டுப்படுத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையினால் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படும்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவே இப்போது
"ரோலர்" என்ற செயற்கை டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்னும் பின்னும், பக்கவாட்டுகளிலும் இயங்கக்கூடியதாகும். தண்டெலும்பு மற்றும் டிஸ்கிற்கு இடையே இந்த செயற்கை சிறிய டிஸ்க் பொருத்தப்படும். இதன் மூலம் முதுகுவலிக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக இந்த விஞ்ஞானிகள் கோருகின்றனர்.
இப்போது பெஇர்ய அளவில் கிளினிக்கல் டிரையல்களில் இதனை பரிசோதித்து வருகின்றனர். வெற்றி அடைந்துவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளி இது பொதுமக்கள் பயனுக்கு வந்தூ விடும்.
உணவு நேரத்துடன் பசியை தொடர்புபடுத்தும் மரபணு
ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு தானாகவே பசிக்கிறது. இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு சுருங்கும். கடமுடா என்று சத்தமிடும். கண்கள் கிறுகிறுக்கும். சோர்வாக இருக்கும். இதையடுத்து எதையேனும் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். இத்தகைய உணர்வுகளுக்கு காரணமான மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு “பெர்-2′ என்று பெயரிட்டுள்ளனர். மூளை மற்றும் உடலின் இதரபகுதிகளில் செயல்படும் இந்த மரபணுவை ஆய்வு செய்தால் கொழுப்புச்சத்து நோய்க்கும், தூக்கமின்மை, மதுவுக்கு அடிமையாதல் ஆகியவற்றுக்கு சிகிச்சை முறைகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புற்றுநோயை தடுக்க உதவும்
திராட்சை
திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திராட்சை ரசத்தில்
87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்
தண்ணீர் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் தினமும் 8
டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம் போலத் தான்.
நிறைய தண்ணீர் குடிக்கிற போது, உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப் போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம்.
தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.
100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3
மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.