பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை



சிங்கப்பூர் அல்லது [அலுவல்முறையில் ] சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore,   தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும்.

கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகத்து 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.

கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். . மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும்.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

 

பெயர்க்காரணம்

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு.

சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது.  சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் ஏற்பட்ட பெரிய வளர்ச்சி  காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. ஆதலால் சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது.

சிங்கப்பூர் பொருளாதாராம் இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

 மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் சுமார் 20% வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். விழுக்காடு கணக்கில்  உலகில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர்.

சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர்.சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு கொண்டது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.

நாடு சிறிதாயினும் சுற்றுலாப்  பயணிகளை கவரும் சிங்கப்பூரில் பார்வையிடப் பல இடங்களுண்டு.அவற்றுள் சில இங்கே 


காட்சிப்படுத்தியதுடன்  கீழே அவற்றின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

1. மெரினா பே சாண்ட்ஸில் முடிவிலி குளம்

2. ஸ்கைலைன் லுஜ் சென்டோசா

3. iFly சிங்கப்பூரில் உள்ளரங்க ஸ்கைடிவிங்

4. சிங்கப்பூர் ஃப்ளையர்

5. சிங்கப்பூர் கேபிள் கார்

6. மெரினா பே சாண்ட்ஸ்

7. மெர்லியன் பார்க்

8. கிளார்க் குவே

9. எஸ்ப்ளேனேட் தியேட்டர்

10. ரிசார்ட்ஸ் உலக சென்டோசா கேசினோ

11. மவுண்ட் பேபர் பார்க்

12. சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா

13. தேசிய ஆர்க்கிட் தோட்டம்

14. கோட்டை பதப்படுத்தல் பூங்கா

15. வளைகுடா தோட்டங்கள்

16. கிழக்கு கடற்கரை பூங்கா

17. சீன மற்றும் ஜப்பானிய தோட்டங்கள்

18. மேகக் காடு

19. தெற்கு முகடுகள்

20. சுங்கே புலோ ஈரநில ரிசர்வ்

21. மரம்-மேல் நடைக்கு மேக்ரிச்சி நீர்த்தேக்கம்

22. சிங்கப்பூர் உயிரியல் பூங்கா

23. சிங்கப்பூர் நைட் சஃபாரி

24. ஜுராங் பறவை பூங்கா

25. சஃபாரி நதி

26. S.E.A மீன்

27. சிங்கப்பூர் சைனாடவுன்

28. புகிஸ் தெரு

29. பழத்தோட்டம் சாலை

30. தேசிய தொகுப்பு சிங்கப்பூர்

31. பெரனகன் அருங்காட்சியகம்

32. மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் சிங்கப்பூர்

33. சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம்

34. யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்

35. சாதனை கோவ் வாட்டர் பார்க்

சிங்கப்பூர் ஒருமுறை சுற்றிவந்தால் அது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்றே கூறலாம்.


தொகுப்பு:செ.மனுவேந்தன் 




No comments:

Post a Comment