சினிமா


ஆனி மாதத்தில் வந்த திரைப்படங்கள்..
2012-07-13   பில்லா-2
நடிகர்கள்: - அஜீத்,பார்வதி ஓமனக்குட்டன்.
கதை: - இந்தப் படத்தில் கதையை தேடுவது கடலில் ஊசியை தேடுவதுக்கு சமம்.
கருத்து: - பழைய மாவில் புதிய கொழுக்கட்டை.
மொத்தத்தில் பில்லா-2 மிரட்டல்.
புள்ளிகள்:- பில்லாவுக்கு கீழே அசலுக்கு மேலே.
2012-07-06   நான் ஈ
நடிகர்கள்: - நானி,சமந்தா, சுதீப், சந்தானம்.
கதை: - வில்லனால் கொல்லப்படும் நாயகன் ஈயாக மீண்டும் பிறக்கிறான். வில்லனை சித்ர வதை செய்து எப்படி அவன் பழி தீர்க்கிறான் என்பது கதை.
கருத்து: - நீண்ட தூரம் பறக்கும்.
புள்ளிகள்:-55
2012-06-23   சகுனி
நடிகர்கள்: - கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண்,நாசர்.
கதை: - சொந்த வீட்டை காக்க போராடும் ஒரு நாயகனின் சகுனி வேலைகளே திரைக்கதை.
கருத்து: - கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு, சந்தானத்தின் காமெடி போன்ற அம்சங்களுக்காக 'சகுனி' யை ஒரு முறைப் பார்க்கலாம். ஆபாசம், வன்முறைகள் இல்லாதது
புள்ளிகள்:-50
2012-06-17          முரட்டுக்காளை
நடிகர்கள்: - சுந்தர் சி, சினேகா, சுமன்,விவேக்.
கதை: - ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
கருத்து: - சுமார்   
புள்ளிகள்:-38
2012-06-17          மறுபடியும் ஒரு காதல்
நடிகர்கள்: -அனிருத், ஜோஷ்னா ,வடிவேலு, ஒய்.ஜி.மகேந்திரன்.
கதை: - பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி, சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
கருத்து: - 'மறுபடியும் ஒரு காதல் கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.
புள்ளிகள்:-39
திரையுள்..
தமிழகமெங்கும் ‘தல மேனியா:பில்லா 2 ரிலீஸ்
தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.
படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.
.என்.. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.
சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏற்கனவே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ராசி இல்லாத நாள் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஜூலை 13 ம் தேதி வெள்ளிக்கிழமை பில்லா 2 ரிலீஸ் தேதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வெற்றிவாகை சூடுவாரா பில்லா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.
ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், பார்க்க கியூட்டாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான் கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயதுக் குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவ ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.
தனது ஹாலிவுட் படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சொன்ன கதை பேரிக்கு உடனே பிடித்துப் போய் விட்டது. உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் ஒரு குழந்தையும் என்னுடன் படம் நெடுகிலும் வரப் போகிறது என்பதும் அவருக்குப் பிடித்து விட்டது என்றார் கமல்.
கமல்ஹாசன் சமீப காலத்தில் ஏகப்பட்ட புதுமுக நடிகைகளுடன் நடித்து விட்டார். 22 முதல் 35 வயது வரையிலான நாயகிகளுடன் இணைந்து நடித்து விட்டார். விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா குமாருக்கு 35 வயதாம்.
விஸ்வரூபம் ஹீரோயின் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், இப்படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு வயது முக்கியம் இல்லை. அந்தப் பெண் மெச்சூர்டாக இருக்கிறாரா என்பதே முக்கியமாக இருந்தது. இதனால்தான் நான் சோனாக்ஷி சின்ஹா, சித்ராங்கதா சிங் ஆகியோரைப் பரிசீலித்தேன். எனவே வயதை விட பொறுப்பான முகமும், மெச்சூர்டான முகமும்தான் தேவையாக இருந்தது என்றார்.
நான்கவுண்டமணிவாழைப்பழம்! –
சிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்!


இவராஇந்த காமெடியெல்லாம் பண்ணினாரு என ஆச்சரியப்பட வைக்கும் உருவம். யாராக இருந்தாலும், “அண்ணேஎன பாசம் காட்டும் அன்பு. சிறுசு முதல் பெரிசு வரை விரும்பும்சிரிப்பு முகம். எல்லோரும் இவருக்கு ரசிகர்கள். “வாழைப்பழம் இருக்கும் வரை, இவர் காமெடி வாழும். அடிவாங்கியே, அனைவரையும் சிரிக்க வைத்த வெள்ளந்தி மனிதர் நடிகர் செந்தில்.

மதுரையில் அவரை, “மண்ணும் மனசும் பகுதிக்காக சந்தித்தோம். இதோ, அவரே பேசுகிறார்… “”சொந்த ஊரு பரமக்குடி பக்கம் இளஞ்செம்பூரு. அப்பா ராமமூர்த்தி, மளிகை கடை வச்சிருந்தாரு. எனக்கு படிப்பு வரலை. ஊருல இருந்தா கெட்டு போயிருவேனு, 13 வயசுல, அப்பா, நண்பர் சுல்தானுடன் சென்னைக்கு அனுப்பினாரு. அங்கே பர்மா பஜாரில் கொஞ்ச நாள் வேலை. சின்ன வயசிலிருந்தே நாடகம்னா ரொம்ப இஷ்டம். அப்பவே நரிக்குறவர் வேடம் போட்டேன். சென்னை வந்த பிறகு, ஆர்வம் அதிகமாச்சு. சி.எஸ்., நாடக கம்பெனியில சேர்ந்தேன். முதல் அரிதாரம், தாத்தா வேடம். வைரம் நாடக கம்பெனியில், சின்ன வேடங்கள் கெடச்சது.

காமெடி வசனகர்த்தா .வீரப்பனை சந்தித்த பின், ஏறுமுகம் தொடங்குச்சு. அவர் தான் சில படங்களில் என்னை சிபாரிசு பண்ணாரு. நானும் முயற்சி செஞ்சேன். மலையாளத்தில்இத்திகரபக்கி தான் என் முதல் படம். தமிழில், “பசி படத்தில் வில்லன் வேடம். டைரக்டர்கள் பாக்யராஜ், சுந்தரராஜன் தொடர் வாய்ப்பு தந்து, என்னை தூக்கிவிட்டாங்க. “மலையூர் மம்பட்டியானில் வில்லன் வேடத்திற்கு, டைரக்டர் ராஜசேகர் கூப்பிட்டாரு. “வளர்ந்து வர்ற நேரத்துல, வில்லன் வேடம் கொடுத்து உட்கார வச்சிருவாங்களேன்னு பயந்து, 10 நாள் அவர் கண்ணுல படலை. மேலாளர் துரை என்பவரு, இந்த படத்தில நடிச்சா நல்ல பேரு கிடைக்கும்னாரு. அதை நம்பி நடிச்சேன். அவரு சொன்னது நடந்துச்சு.

என்னையும், கவுண்டமணியையும் சேர்ந்து .வீரப்பன் நடிக்க வச்சாரு. எங்கள் கூட்டணி, 500 படங்களில் தொடர்ந்துச்சு. நான் நாடகத்துல நடிக்கும்போதே, கவுண்டமணி அண்ணனும் நடிச்சாரு. அப்பவே நாங்க சேர்ந்து நடிச்சிருக்கோம். “சூட்டிங் சமயத்தில் கவுண்டமணி சிரிக்கமாட்டார். கரகாட்டக்காரன்வாழைப்பழ காமெடியை பார்த்து, விழுந்துவிழுந்துசிரிச்சாரு! இப்பெல்லாம், காமெடி நடிகர்கள் சிலரு, ஒருடீமை உருவாக்கி நடிக்கிறாங்க. நாங்க எல்லாம், டைரக்டரு சொல்றதை நடிச்சு பேரு வாங்கினோம். இப்போ, “டபுள் மீனிங்கில காமெடி வருது. அப்போ, பட்டும், படாமல் இருக்கும். அதை குடும்பத்தோட ரசிச்சாங்க

இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு படங்களில்கூட நடிச்சிட்டேன். நடிக்காத வேடமில்லை. ஆனா நான் வாழ்க்கையில் நடிக்கலண்ணே.. அதனாலபீஸ் புல்லா போயிட்டு இருக்கு, அதுபோதும்! நான் சாகிற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் அதுதான்ணேஎன், ஆசை! என்கிறார் இந்த 59 வயது இளைஞர்.

சிரிக்க வச்சாரு நம்பியாரு!

தூறல் நின்னு போச்சு படத்துல தான் முதன்முதலில், பாக்யராஜ் என்னை அரை டவுசருல நடிக்க வெச்சாரு. சூட்டிங் இடைவெளில, ஆத்துல குளிச்ச போது, ஜட்டிமிஸ் ஆயிருச்சு. பிறகு, ஒரு வேட்டியை கிழிச்சு, கோவணம் கட்டிக்கிட்டு, அதுக்கு மேல அரை டவுசர் போட்டு நடிச்சேன். இதை எப்படியோ நம்பியாரு தெரிஞ்சுகிட்டு, எல்லாருகிட்டேயும் சொல்லிப்புட்டாரு. பிறகென்ன அவுங்களோட சேர்ந்து நானும் அந்தகாமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சேன்.

பார்வைக்கு காத்திருக்கேன்!

எம்.ஜி.ஆர்., மீது ஈர்ப்பு இருந்ததுனால .தி.மு..,வில் சேர்ந்தேன். அவருக்கு பின், ஜெயலலிதா மீது பற்று ஏற்பட்டுச்சு. முதன்முதலாக, 1989ல் திருச்சியில் மேடையில் பேச அவர் அனுமதி கொடுத்தாங்க. அரசியலில் இருந்ததால, படவாய்ப்புகளை தி.மு.., வினர் தடுத்தாங்க. நெருக்கடியும் வந்துச்சு. அதையும் சமாளிச்சேன். இதுவரை அரசியலில் எந்த பதவியும் தரலை. அதனால் வருத்தமில்லை. பழம் நழுவி விழுந்தால் வேணாம்னு சொல்வாங்களா? “அம்மா பார்வை படும்னு நம்புறேன்



0 comments:

Post a Comment