ஆனி மாதத்தில் வெளிவந்த திரைப்படங்கள்
2012-06-08:
…………….கிருஷ்ணவேணி பஞ்சாலை
நடிகர்கள்: - ஹேமச்சந்திரன்,சண்முக ராஜா,நந்தனா, ரேனுகா.
கதை: - சாதி வேறுபாடுகளுக்கிடையில் மலர்ந்த காதல் கதை.
கருத்து: - தற்கொலைகள் மலிந்த படம்.
புள்ளிகள்:-40
2012-06-08:
……………………………………………………தடையற தாக்க
நடிகர்கள்: -அருண் விஜய்,மம்தா மோகன்தாஸ்.
கதை: - வீழ்ந்த பழி துடைக்கப்பட்டுக் காதலியை கைப்பிடிப்பதுவே.
கருத்து: - படம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
புள்ளிகள்:-45
2012-06-01: ……………….மனம் கொத்தி பறவை
நடிகர்கள்: - சிவகார்த்திகேயன், சூரி, இளவரசு,ஆத்மியா.
கதை: - கிராமம் சார்ந்த காதல் கதை
கருத்து: - பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள்..
புள்ளிகள்:-40
2012-06-01:……………………..………………………………………………..இஷ்டம்
நடிகர்கள்: - விமல், அனிப் குமார், சந்தானம், சார்லி.
கதை: - பார்த்தவுடன் காதல்! புரிதல் வரும் முன்னே கல்யாணம்! கல்யாணத்திற்குள் நுழையும் தவறான கலாச்சாரம்! அவசியம் ஏற்பட்டால் தவிர்க்க முடியாத விவகாரத்தை வழக்கமான ஒன்றாக்கிவிட்ட திருமணங்களுக்கு அறிவுரை சொல்ல இஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
கருத்து: - கொஞ்சம் "கஷ்டம்
புள்ளிகள்:-40
2012-05-28:………………………………………………………………………..உருமி
நடிகர்கள்: - பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா,ஜெனிலியா.
கதை: - இந்திய வரலாற்றின் திரைக்கதை.
கருத்து: -பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாளான உருமி... ரசிகர்களை உறைய வைத்து அசரவைக்கும் என்பதில் ஐயமில்லை.
புள்ளிகள்:-60
2012-05-19:………………………………………………………………ராட்டினம்
நடிகர்கள்: - லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்.
கதை: - கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன.
கருத்து: - எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு.
புள்ளிகள்:-50
2012-05-21:………………………..கண்டதும் காணாததும்
நடிகர்கள்: - விகாஷ், சுவாஷிகா, பரோட்டா சூரி, ஆர் சுந்தரராஜன்.
கதை: - காதலை வில்லன் பிரிக்கிறார்! வில்லன் வேறுயாருமல்ல... விகாஷின் அவசரபுத்திதான்! அவரது அவசர புத்திக்கு அவர்களது காதல் எவ்வாறு பலிகடாவாகிறது...?! என்பது தான் "கண்டதும் காணாததும்" படத்தின் கரு.
கருத்து: - தனித்து நிற்கிறது! தவித்தும் நிற்கிறது!!
புள்ளிகள்:-40
திரையுள்……….:
கின்னஸ் ஆச்சி மனோரமாமீண்டும்...!!
கலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிரி ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சி!பெருமையாக இருக்கிறது !ஆச்சி மனோரமாவை நினைக்கிறபோது!
26 மே 1943 இல் பிறந்தவர் மனோரமா அவர்கள்,1500 க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும்,1000
திற்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும்,சில சின்னத்திரை நாடகங்களிலும் இதுவரையில் நடித்துக்கொண்டு இருந்தவர்.
'மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மனோரமா.
காமெடியா ஓகே.. குணசித்திர நடிப்பா ஓகே.. பாட்டு பாடணுமா.. வில்லன்களோட சண்டை போடணுமா.. பக்கம் பக்கமா வசனம் பேசணுமா.. ஒரு வார்த்தை கூட பேசாம நடிக்கணுமா.. எதுவாயிருந்தாலும் ஆச்சி 'ஆல்வேஸ் ரெடி!'
நடிகன், சின்னக் கவுண்டர், சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி எவர்கிரீன் ஹிட்.
. எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் ஆச்சிக்கு 'கின்னஸ்' பட்டியலில் பெயர் என்பது, மேலும் ஒரு மகுடம்.
அவர் பாடிய ' வா வாத்யாரே ஊட்டாண்டே..' அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி. நாம் வழங்கி மகிழ்ந்தது 'கலைமாமணி'.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக படுக்கையில் இருந்த ஆச்சி மீண்டும் சிங்கம் திரைப்படத்தில் நடிக்க வருகிறார் எனும் செய்தி இனிப்பானது அல்லவா !!
கமல்ஹாசனின்
‘அமர் ஹை’
விஸ்வரூபம் திரைப்படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் ‘அமர் ஹை’ என்ற புதியதொரு படத்தை தயாரிக்க உள்ளார்.ஊழலை மையமாக வைத்து ‘அமர் ஹை’ படத்தை கமல்ஹாசன் உருவாக்க உள்ளார்.
இதை கமல் விஸ்வரூபம் ரிலீஸ் ஆன பிறகு ‘அமர் ஹை’ பற்றி சொல்கிறேன்” என்றார்.
கோச்சடையான்’ படப்பிடிப்பு முடிந்தது..!
ரஜினி, தீபிகா படுகோனே
ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்‘ படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. லண்டனில்
20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர் திருவனந்தபுரத்தில் இரண்டாம்
கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அங்கு உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் பெரும் பகுதி காட்சிகள்
படமானது.இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்துள்ளனர். தற்போது டப்பிங்,
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.லண்டன்,
லாஸ் ஏஞ்சல்ஸ், ஊடங்காங் ஸ்டூடியோக்கில் இப்பணிகள் நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர்
டாக்டர் முரளி மனோகர் தெரிவித்தார்.படத்தை வெளியிடுவதற்கான திகதியை இன்னும் முடிவு
செய்யவில்லை என்ற அவர், இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் கூறினார்.ஜப்பான்,
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. ஜப்பானில் ரஜினிக்கு நிறைய
ரசிகர்கள் உள்ளனர். எனவே ஜப்பான் மொழியிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.இதுபோல்
பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
விஜய்யின் பிறந்த நாளில் பில்லா
2 ரிலீஸ்..!
அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் பில்லா 2. சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பில்லா – 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் அடிகடி வெளி வந்து ரசிகர்களை குழப்பி வந்தது. அதற்கு எல்லாம் இன்றோடு ஒரு முடிவு காலம் வந்தாகிவிட்டது. பில்லா – 2 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் 22-ம் தேதி பில்லா – 2 உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.
இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் தேதியும் ஜூன் 22 தான். அவர்களுக்குள் எப்படி இருந்தாலும் ரசிகர்களை பொறுத்தவரை அக்னிநட்சத்திரம் பிரபு-கார்த்திக் போல தான் செயல்படுவார்கள்.
தல அஜீத்தின் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பார்போம்.
மீண்டும் பாலா படத்தில் விஷால்
)ஆக்ஷான்
ஹீரோ என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த விஷாலுக்கு, சிறந்த நடிகர் என்ற பெயரை
பெற்றுகொடுத்தவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கிய 'அவன் இவன்' படத்தின் மூலம்
விஷாலின் அற்புதமான நடிப்பு திறமை வெளிகாட்டினார்.
இப்போது
மீண்டும் பால இயக்கும் படத்தில் விஷால் நடிக்கப் போகிறாராம். தற்போது 'சமர்'
மற்றும் 'மத கத ராஜா' என்ற இரண்டு படங்களில் நடித்து வரும் விஷால்,
இப்படங்களுக்குப் பிறகு பாலவின் படத்தில் நடிக்கப் போகிறார்.
பாலா,
முரளியின் மகன் அதர்வாவை வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்
படத்திற்குப் பிறகு விஷாலை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என்று தெரிகிறது.
இப்படத்தின் திரைக்கதையை விருதுக்குரியது போல பாலா உருவாக்கி உள்ளாராம். அவன் இவன்
படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் விஷாலை நடிக்க வைத்தது போல, இந்த படத்திலும் ஒரு
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம்.
மணிரத்னத்தின் 'கடல்' பத்திலிருந்து
விலகினார் சமந்தா
ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே ஆச்சரியப்படும் தற்போதைய செய்தி மணிரத்னம் இயக்கிகொண்டிருக்கும் 'கடல்' படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதுதான். மணிரத்னம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் கூட அதற்கு பெரிய பெரிய நடிகர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். அப்படி இருக்க வளர்ந்து வரும் சமந்தாவுக்கு என்ன ஆனது, இப்படி ஒரு முடிவு எடுக்க. என்று கோடம்பாக்கமே ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
கடல் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தாலும், இப்படத்தின் மீது மிகுந்த கவனத்துடன் மணிரத்னம் இருக்கிறார். காரணம், அவருடைய முந்தைய படங்கள் சரியாக போகதாதால் இப்படத்தை எப்படியும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
சமந்தா, இந்த படத்தின் ஹீரோயின் என்று அறிவிக்கப்பட்டதும், இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறாரே! என்று ஒட்டு மொத்த திரையுலகமே சமந்தா, மீது ஆச்சரியப்பட்டது. ஆனால், இப்போது சமந்தா திடீரென்று கடல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருப்பதும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இப்போது சமந்தாவுக்கு பதிலாக 'கடல்' படத்தின் நாயகியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை மணிரத்னம் அறிமுகம் செய்கிறார்.
30 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கும் ராதாவும் ஜோடியாக பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமானார்கள். இப்போது கார்த்திக்கின் மகனும் ராதாவின் மகளும் ஜோடியாக மணிரத்னம் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
3 வேடங்களில்
நடிக்க சந்தானத்திற்கு ஆசை!
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனது திறமையான நடிப்பினால் உச்சத்திற்கு சென்றவர் காமெடி நடிகர் சந்தானம். இவரது வருகைக்கு பிறகு பல காமெடியன்கள் தமிழ் சினிமாவை விட்டு சென்று விட்டனர். இந்தாண்டில் மட்டும் தமிழில் வெளியான படங்களில் முக்கால்வாசி படங்களில் சந்தானம்தான் காமெடியில் கலக்கி வருகிறார். ஒவ்வொரு படங்களிலும் கதைக்கேற்ப ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களில் வந்து காமெடி செய்தாலும், அவருக்கென்று காமெடி செய்வதில் தனிப்பட்ட விருப்பம் உள்ளதாம்.
இதுபற்றி சந்தானம் அளித்துள்ள பேட்டியில், ஒரே படத்தில் 3 விதமான வேடங்களில் நடித்து காமெடி செய்ய வேண்டும். ஒன்று தியாகராஜ பாகவதர் காலத்து நடிகராகவும், நடுவில் கவுண்டமனி காலத்து நடிகராவும், மற்றொன்று தற்போதைய காலத்து இளைஞராகவும் இருக்க வேண்டும். அது இருந்தால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து செய்யும் காமெடி நிச்சயம் சிறப்பாக இருக்கும், என்று கூறியுள்ளார்.
சந்தானத்தின் ஆசை நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தனுஷை தாக்கி வசனம் எழுதவில்லை
:
வாலு படத்தில் யாரையும்(தனுஷ்) தாக்கி வசனம் எழுதவில்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். நடிகர் சிம்புவும், தனுஷ் ஒரு சேர சினிமாவில் அறிமுகமானவர்கள். சினிமாவிற்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கும் தனுஷ் - சிம்பு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது படங்களின் வசனம் மூலம் கடுமையாக தாக்கி பேசுவார். சமீபத்திய கொஞ்ச காலமாக இவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லாமல் போயக் கொண்டு இருந்த நிலையில், இப்போது மீண்டும் பிரச்னை வெடித்து இருக்கிறது.
புதுமுகம் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்து வரும் புதிய படம் வாலு. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஒன்று பட ஷூட்டிங் ஆரம்பமான அன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தனுஷை தாக்கி வசனம் பேசுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, படிக்காதவன் படத்தில் தமன்னாவை பார்த்து தனுஷ், என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனேயே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்று கூறுவார். அதே டயலாக்கை வாலு படத்தில் ஹன்சிகா, சிம்புவை பார்த்து, ஒரு சில பசங்கள பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுவதுபோல் காட்சி உள்ளது. இந்த வசனம் தனுஷூக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்கும் மீண்டும் மோதல் ஆரம்பமாகி உள்ளது.
இதனிடையே இந்த வசனம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. அவர் கூறியுள்ளதாவது, வாலு படத்தில் அந்த வசனத்தை எழுதியது படத்தின் டைரக்டர் விஜய் தான். எனக்கும், அந்த வசனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி, ஹீரோவை ஹீரோயினுக்கு ரொம்ப பிடிக்குது. அப்படி பிடிக்கும்போது அந்த ஹீரோயின் பேசுவது தான் அந்த வசனம். மற்றபடி இந்த வசனம் யாரையும் தாக்கி எழுதப்படவில்லை. மற்றவர்கள் கற்பனைக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. நான் என் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வாலு படம் ஒரு நல்ல ஜாலியான படம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment