உங்களுக்கு
தெரியுமா?
1. வெறும் வயிற்றில்
காபி, டீ அல்லது
பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை
சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலரிடம் உள்ளது. இப்படிச்
செய்வது தவறு. மீறி
செய்தால், தேவையில்லாத நோய்களை
“இன்கமிங்” கொடுத்து வரவழைத்ததாகிவிடும்.
“ஆண்டி பயாடிக்”
மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால்
ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது.
இதனால் உடலில் உள்ள
`பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது.
அதைத்தொடர்ந்து வாய் நாற்றம்,
தொண்டையில் அல்சர், நாக்கு
வறண்டு இருத்தல் போன்ற
பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும்,
காய்ச்சலிலும் பல வகைகள்
இருக்கின்றன. இதில் ஏதேனும்
ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது
எந்த வகை என்று
தெரியாமல் ஒரே மாத்திரையை
தொடர்ந்து சாப்பிடுவது தவறு.
இந்த பழக்கம் அதிகமானால்
சில நேரங்களில் உயிருக்கே
ஆபத்தாகிவிடலாம்.
2.
நம்ம ஒவ்வொருத்தரோட குடலுக்குள்ளேயும்
சுமார் 1000 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள்
குடியும் குடித்தனமுமா இருக்குதாமாம்.
என்ன, “ஐயய்யோ, என்
குடலுக்குள்ளே இவ்வளவு பாக்டீரியாக்களா?”
அப்படீன்னு அரண்டு துள்ளிக்குதிக்கிறீங்களா?
ஒன்னும் கவலைப்படாதீங்க, எல்லாம்
நம்ம கூட்டாளிங்கதான்னு சொல்ல முடியாதுன்னாலும்,
அதுல முக்கால்வாசி பாக்டீரியாக்கள்
நமக்கு நல்லதுதாங்க செஞ்சிக்கிட்டு
இருக்குங்க…..
உதாரணமா,
-நாம
உண்ணும் உணவிலிருக்கும் சக்தியை
பிரித்தெடுப்பது
-நம்ம
உடலை தொற்றுக்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது
-குடல்
உயிரணுக்களுக்கு போஷாக்குகளை அனுப்புவது
இப்படி
நம்ம உடல் ஆரோக்கியத்துக்கு
அவசியமான பல வினைகளைத்தான்
செய்கின்றன பெரும்பான்மையான குடல்வாழ்
பாக்டீரியாக்கள். இப்படி நல்லது
செஞ்சுக்கிட்டிருக்கிற
பாக்டீரியாக்கள, தெரிஞ்சோ தெரியாமலோ
நாம தொந்தரவு செஞ்சுட்டா,
உதாரணமா நுண்ணுயிர்கொல்லிகளான ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
சாப்பிட்டால், இம்மருந்துகள் குடல்
பாக்டீரியாக்களைக்
கொன்று, குடலுக்குள் ஒரு
கலவரமான நிலையை உருவாக்கிவிடுகின்றன.
அதுமட்டுமில்லாம, சூப்பர் கிருமி
என்றழைக்கப்படும் Clostridium
difficile எனும் பாக்டீரியாவினால் உருவாகும்,
உயிருக்கே ஆபத்தான காலிட்டிஸ்
நோய்கூட தோன்றிவிடக்கூடுமாம். யப்பாடி…..!
3. இனிய உளவாக இன்னாத
கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய
சொற்களைப் பயன்படுத்த வேண்டிய
அவசியத்தை வலியுறுத்துவதற்காக வள்ளுவர் எழுதிய
அழகான குறள் இது.
ஆனால் இதன் பொருளில்
பிழை இருப்பதாகத் தோன்றுகிறது.
திருவள்ளுவரை
நம்மில் யாரும் பார்க்காவிட்டாலும்
அவர் எவ்வளவு புலமை
மிக்கவர்; சான்றாண்மை நிறைந்தவர்
என்று அறிவோம். அவர்
பொருட்பிழையுடன் கூடிய ஒரு
குறளை இயற்றுவாரா? என்பதே
கேள்வி. அப்படி என்ன
பொருட்பிழை இருக்கிறது இந்த
குறளில்?. அதை முதலில்
பார்ப்போம்.
இந்தக்
குறளுக்கு கூறப்படும் பொருள்
விளக்கமானது "இனிய சொற்கள்
இருக்கும்போது கொடிய சொற்களைக்
கூறுவது பழம் இருக்க
காயைத் தின்பதிற்கு ஒப்பாகும்."
என்பதே ஆகும்.
இதில்
இருந்து என்ன தெரிகிறது?
பழம் இருக்க காயை
உண்பது தவறு என்று
தானே?. ஆனால் இது
தவறான கருத்து ஆகும்.
ஏனென்றால் மாங்காயின் அருகே
மாம்பழம் வைக்கப்பட்டு இருந்தால்
ஒருவர் மாங்கனியையும் ருசிக்கலாம்.
விரும்பினால் மாங்காயையும் கடிக்கலாம்.
இதில் தவறு என்ன
இருக்கிறது?. அதே போல
கொய்யாக்காய், கொய்யாக்கனி. இவற்றையும்
ருசிக்கலாம். எனவே பழம்
இருக்க காயை உண்பது
ஒருபோதும் தவறாகாது.
இது
தவறில்லை என்றால் வள்ளுவர்
ஏன் அவ்வாறு கூற
வேண்டும்?. ஆராய்ந்து பார்த்தால்
வள்ளுவர் இக்கருத்தை கூறவில்லை
என்று புரியும். நாம்
தான் எழுத்துப் பிழையால்
பொருளைத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறோம். காழ் என்ற
சொல்லை தவறாக காய்
என்று எழுதியதின் விளைவு
தான் இது. 'காழ்'
என்ற தமிழ்ச் சொல்லுக்கு
"கொட்டை" என்பது பொருள்
ஆகும். பழத்திற்குள் இருக்கும்
கொட்டை உண்பதற்குக் கசப்பாக
இருப்பதுடன் கடினமாகவும் எளிதில்
செரியாமலும் இருக்கும். பழத்தை
விட்டுவிட்டு கொட்டையை சாப்பிடுவது
எவ்வளவு மடத்தனமான செயல்
என்று நம் அனைவருக்கும்
தெரியும். வள்ளுவர் கூற
வந்த கருத்தும் அதுவே
ஆகும்.
"இனிய சொற்கள்
இருக்க கொடிய சொற்களை
ஒருவன் பயன்படுத்துவது, பழத்தை
விட்டுவிட்டு கொட்டையை சாப்பிடுவது
போல மடத்தனமான செயலாகும்."
- இதுவே வள்ளுவர் கூற
வரும் கருத்து ஆகும்.
4. தமிழ்நாட்டில் புழங்கிவரும்
பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல இந்தப் "பாத்திரம் அறிந்து பிச்சை
இடு..." என்கிற பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு
வருகிறது. இப்போது நாம்
பயன்படுத்தும் "பிச்சை" என்னும்
சொல்லுக்கு அக்காலத்தில் "பரிசு"
என்று பொருள். ஏன்
தெரியுமா? மன்னன் பிச்சையாகப்
போடும் பொருள் தான்
புலவனுக்குக் கிடைக்கும் பரிசு
ஆகும். அதைப் பெறுவதற்கு
அந்தப் புலவன் மன்னனைப்
புகழ்ந்து பாடவேண்டும். எவ்வளவு
உயர்வாக புகழ்ந்து பாடுகிறானோ
அதற்கேற்ப அவனுக்குப் பரிசுகள்
கிடைக்கும். இப்படிப் புகழ்ந்து
பாடுவது தான் புலவர்களின்
"திறமை" யாகக் கருதப்பட்டது.
புலவனின் பாடும் திறம்
அதாவது திறமையை அறிந்தே
அக்காலத்தில் அவனுக்கு பிச்சை
அதாவது பரிசுகளைக் கொடுத்தனர்
மன்னர்களும் சிற்றரசர்களும். இதன்
அடிப்படையில் தான் இந்தப்
பழமொழியும் உண்டானது. காலப்போக்கில்
ஒரே ஒரு எழுத்து
மாற்றத்தால் அதாவது "ற"
கரத்திற்குப் பதிலாக "ர"
கரத்தைப் போட்டதால் பொருளே
மாறிப்போய் ஒரு வரலாற்றுச்
செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு
விட்டது. உண்மையான பழமொழி
இது தான்:
பாத்திறம் அறிந்து பிச்சை
இடு.
(பாத்திறம்
= பா+திறம் = பாடும்
திறமை)
super iyaa
ReplyDeleteவசதிப்படி திருக்குறளை யாரோ மாற்றப் பார்க்கிறார்கள். திருவள்ளுவர் காலத்துப் பிராமித் தமிழ் எழுத்துக்கள் 'ய்' 'ழ் என்பன குழப்பம் அடையும் அளவுக்கு ஒரே மாதிரியானவையாக இல்லை. கனியிலும் காய் இனிமையானது என்பது வெளிச்சம். அதனால் தான் அப்படி சொன்னார். ஏன் பழுத்த சதையை விலத்தி கொட்டையை மட்டும் உண்ணும் கனிகளும் உண்டு!
ReplyDelete