ஒளிர்வு-(19) ஆனி த்திங்கள்-2012

தளத்தில்:சிந்தனை ஒளி,/ கனடாவிலிருந்து.....ஒரு கடிதம் / காக்க காக்க../ஆன்மீகம்/இளங்கண்ணனின்.....இதயராகம்/ஆண்களிடம் இல்லாதது..// கனடாவில்....,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/ உங்களுக்குதெரியுமா?/ அறிவியல்/சிரிக்க..!,/சினிமா/.தமிழில்நீங்களும்எழுதலாம். தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com சிந்தனை ஒளி: மனைவி, உனக்காக எதையும் இழப்பாள்!   எதற்காகவும் உன்னை இழக்க மாட்டாள்! இளமையும் அன்பும் வசந்தகாலப் பரிசு!   அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்! மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே!   ...

இளங்கண்ணனின்.............இதயராகம்

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்? மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சிஇம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்லஎம்பெருமானை வேண்டி நின்று வணங்கிஆரம்பிக்கிறேன். ஆண்டவன் இருப்பது ஆலயத்திலா?அல்லது காவி,கதர்,மற்றும் வேறுகலர் ஆடைகளுக்குள்ளா? சிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது.கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர்எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று.அதாவது தூணிலும் இருப்பார்துரும்பிலும் இருப்பார் என்றும்.ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர்புவனம் 14 ங்கிலும் பூத்தவளே என்று பாடியிருக்கிறார்.கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின்உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ்விரத்தத்தைப் பாலாக்கித்தரக்கூடிய இடம் மடிதான் ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான்பால்வரும்.அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோபிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான்வரும்.அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும்நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாகஎழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.இதேமாதிரிஎன்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில்இருந்துவரும் வெய்யில் எல்லாஇடத்திலும் சம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும்வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோஎரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும்அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும். சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடிஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான்ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான்அவனருள் குவிந்திருக்கிறது என்றார்.ஆகவே ஆண்டவன்கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது. ஆனால் நான்தான் கடவுள் என்றுசொல்லி வாயால்  லிங்கம் எடுத்தும்விரலிலிருந்து  விபூதி தீர்த்தம் கொடுத்தும், கைக்குள் இருந்து தங்கம்வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும்,வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான்கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள்.அதைநம்பி பலர்அவர்களை ஆண்டவன் ஸ்தா னத்தில் வைத்து வணங்குகிறார்கள்.ஏன் தமக்கிருக்கும் குறை...

கனடாவில்....

கனடாவுக்கு வருவதற்கு வருகையாளர் நுழைவுரிமை (விஸா) எனக்குத் தேவையா? அப்படியாயின் ஒன்றினைப் பெறுவதற்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்? ஒரு வருகையாளர் (visitor) எனப்படுபவர் தற்காலிக அல்லது குறுகியகால அடிப்படையில் கனடாவுக்கு வருகை தரும் யாராவது ஒருவர் ஆகும். ஒரு வருகையாளர் எனப்படுகிறவர் .கனேடிய பிரஜை, நிரந்தர வதிவாளர் அல்லது மந்திரியின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் ஒருவர் அல்ல. வருகையாளர் என்போரில் பின்வருவோர் அடங்குவர்: உல்லாசப் பயணிகள்...