கணிணிஉலகம்:


ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி

ஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம் பல காலமாக நிலவி வந்த வதந்தி இப்போது நிஜமாகப் போகிறது என்று கூறுகிறார். இந்த டிவி பேஸ் டைம் மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் வர இறுக்கிறது. இந்த புதிய டிவி தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த டிவி இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை என்று சைனா நாளிதழ் கூறுகிறது.
பாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் சிறந்த வர்த்தக நண்பர்கள் என்ற முறையில் டெரி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த முக்கியத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் பாக்ஸ்கான் இந்த புதிய ஆப்பிள் டிவியைத் தயாரிக்க ஷார்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற சைனா டெய்லி கூறுகிறது. சைனா டெயிலியின் இந்த புதிய தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்கு தளத்தை மிக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபெரி நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு டேப்லெட்டான ஐபெரி பிடி07ஐக்கு ஐசிஎஸ் அப்டேட்டை வழங்கி வருகிறது. அதன் மூலம் இந்த ஐபெரி டேப்லெட் மேலும் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த அப்க்ரேட் மூலம் இந்த டேப்லெட்டின் கேமரா அப்ளிகேசன் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவை மேம்பாடு அடையும். அதோடு கேலரி அப்ளிகேசன் மற்றும் பன்முக செயல்பாடு போன்றவற்றில் இந்த டேப்லெட் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த டேப்லெட் 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 1 ஜிஹெர்ட்ஸ் எஎம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 4ஜிபி சேமிப்பு, சூப்பரான முகப்பு கேமரா, வைபை மற்றும் 3ஜி டோங்குள்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
இந்த அப்டேட் மூலம் இந்த மலிவு விலை டேப்லெட்டின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபெரி டேப்லெட்டை வைத்திருப்போது நேரடியாக அப்க்ரேட் செய்யலாம். அதாவது இந்த அப்க்ரேட் பைலை எஸ்டி கார்டு மூலம் இந்த டேப்லெட்டில் இணைக்க வேண்டு. பின் ஐபெரியின் வெப்சைட்டுக்குள் சென்று அப்டேட் லிங்கை க்ளிக் செய்தால் போதும். டேப்லெட் மிக எளிதாக இந்த அப்டேட்டைப் பெற்றுவிடும்.

வேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்!

லெனோவா ஒரு புதிய சிறிய மேசைக் கணினியைக் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்சென்டர் எம்92பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மேசைக் கணினியின் சிறப்பு என்னவென்றால் இந்த கணினி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கணினி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். மேலும் இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தக கணினியாகும். இந்த கணினி டைனி என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த லெனோவா மேசைக் கணினி இன்டல் கோர் சிப் கொண்டிருப்பதால் இதன் உறுதிக்கு உத்திரவாதம் வழங்க முடியும். மேலும் இந்த கணினி விப்ரோ வசதி கொண்டிருப்பதால் இது ஐடி கண்ட்ரோல் வசதிகளையும் வழங்குகிறது.
இந்த கணினியில் ஸ்பின்னிங் அல்லது சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணினி வைபை மற்றும் க்ராபிக்ஸ் வசதி ஆகியவை கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக அருமையாக செய்ய முடியும்.இந்த லெனோவா கணினி டிஸ்ப்ளேபோர் டோங்குள்களையும் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமான டிஸ்பளேயை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறிய கணினி வோல்பி மற்றும் வீடியோ உரையாடலையும் சப்போர்ட் செய்கிறது. இந்த சிறிய மேசைக் கணினி மற்ற பெரிய மேசைக் கணினிகளைவிட மிக உறுதியாக இயங்கக் கூடியது. மேலும் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும்.

சாம்சங் அறிமுகம் செய்யும் புதிய நோட்புக்

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வரிசை 5 550பி நோட்புக்குளை இங்கிலாந்தில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த அல்ட்ராபுக்குகள் மற்ற லேப்டாப்புகளைப் போல தோன்றுகின்றன. இந்த 5 550பி வரிசையில் இரண்டு நோட்புக் மாடல்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது. அதாவது 15 இன்ச் மற்றும் 17 இன்ச் என இரண்டு மாடல்கள் வருகின்றன. 15 இன்ச் நோட்புக்கின் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 17 இன்ச் நோட்புக் 1600 X 900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளன. இந்த நோட்புக்குகள் க்வாட் கோர் ஐவி பிரிட்ஜ் கோர் ஐ7 சிப்களையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக 2ஜிபி ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் வசதியும் உள்ளது. அதுபோல் இந்த நோட்புக்குகளில் ப்ளூ ரே ஆப்டிக்கல் ட்ரைவ் ப்ளஸ் வசதியும் உண்டு. மேலும் இதன் சேமிப்பு வசதி 2டிபி ஆகும். எனவே ஏராளமான தகவல்களை இந்த நோட்புக்குகளில் சேமித்து வைக்க முடியும். ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக்குகள் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்களையும், மேக்ஸ் பாஸ் பூஸ்ட் துணை ஊபரையும் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி அமைப்பு மிக பக்காவாக இருக்கும்.

ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்!

மவுஸ் கம்யூட்டர் நிறுவனம் நோட்புக் ரசிகர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்க இருக்கிறது. இந்த மவுஸ் கம்யூட்டர் எல்பி-டி710பி என்ற ஒரு புதிய 17.3 இன்ச் நோட்புக்கை களமிறக்க இருக்கிறது. கருப்பு நிறத்தில் களையாக வரும் இந்த நோட்புக் அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. தொடு வசதி இல்லாத இதன் திரை 1920 × 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. விண்டோஸ் 64பிட் 7 ஹோம் இயங்கு தளத்தில் இயங்கு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ5-2450எம் ப்ராசஸர், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டது. அதுபோல் இந்த நோட்புக் மிக உறுதியாகவும் இருக்கும். முகப்பு வெப்காம் மட்டும் கொண்டுவரும் இந்த நோட்புக் வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளும் உண்டு. 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டிருக்கும் இந்த நோட்புக்கின் சேமிப்பை மல்டி கார்டு ரீடர் மூலம் விரிவுபடுத்தவும் முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவ்சர் வசதிகளை இந்த நோட்புக் கொண்டுள்ளதால் இதில் தடையின்றி தகவல்களை மிக விரைவாக பரிமாற்றம் செய்யலாம். இந்த நோட்புக் சூப்பாரன பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அதற்காக இந்த நோட்புக் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், அசத்தலான ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சூப்பரான லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த நோட்புக் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நோட்புக்கின் விலை ரூ.50000 ஆகும். இந்த நோட்புக் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது.

புதிய ஐஓஎஸ் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் ஆப்பிள்

நவீனம், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. அதனால் தான் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் மீது மோகம் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் இந்த ஐஒஎஸ் இயங்கு தளம் மேலும் மெருகு பெறும் என்று நம்பலாம். ஆப்பிளின் ஐஒஎஸ் 5.1.1. அப்டேட் பல வசதிகளுடன் வருகிறது. அதாவது ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான பக் பிக்சஸ் வசதி இந்த அப்டேட்டில் உள்ளது. அதனால் புதிய ஐபேடை 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 3ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அன் ஏபிள் டூ பர்சேஸ் என்ற தவறான செய்தியும் புதிய ஐபேடில் வராது.
இந்த ஐஒஎஸ் 5.1 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆப்பிளால் அறிமுகம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் இப்போது இந்த இயங்கு தளத்தில் 5.1.1 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் பேட்டரிக்கும் நீடித்த ஆயுளை வழங்கும். இந்த புதிய ஐஒஎஸ் 5.1.1.ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளம் வைத்திருக்கும் ஐபேட் வாடிக்கையாளர்கள் தமது ஜெனரல் சாப்ட்வேர் அப்டேட்டுக்குள் சென்று இந்த புதிய அப்டேட்டை செய்யலாம்.





0 comments:

Post a Comment