சினிமா…


பங்குனி மாதத்தில் வந்த திரைப்படங்கள்
2012-04-09 மீராவுடன் கிருஷ்ணா
நடிகர்கள்: கிருஷ்ணா, ஸ்வேதா, ராதா.
கதை:மனைவிகளின் தகாத உறவுகள், கணவர்களின் சந்தேக புத்தியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்
கருத்து: நிறைவிலும் சந்தேகம்தான்.
புள்ளிகள்:40
2012-03-30 தனுஷின் “3”
நடிகர்கள்:தனுஷ்,ஸ்ருதி ஹாசன்,பிரபு,பானுப்பிரியா,ரோஹிணி,சந்தானம்.
கதை: ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.
கருத்து: ஏன் இந்த கொலவெறி?
புள்ளிகள்:45
2012-03-29 சேவற்கொடி
நடிகர்கள்: அருண்பாலாஜி,பாமா,மகாதேவன்,பவன்.
கதை: தங்கையின் திருமணத்தின் மூலம் முதலாளியாக நினைத்த கதாநாயகன் அது நிறைவேறாது போகவே அந்நிலைக்குக் காரணமானவர்களை பழிவாங்கிய கதையே.  
கருத்து: "‌சேவற்கொடி"-"சக்ஸஸ்கொடி"-வேகம் கம்மி.
புள்ளிகள்:55
2012-03-25 கழுகு
நடிகர்கள்: கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ்.
கதை: மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை.
கருத்து: கழுகு - உயரப் பறக்காது...!
புள்ளிகள்:45
2012-03-08 அரவான்
நடிகர்கள்: ஆதி, தன்ஷிகா, பசுபதி, பரத், அஞ்சலி.
கதை: 18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.
கருத்து: அரவான், வித்தியாசமான தமிழ் சினிமாவில் ஒருவன்
புள்ளிகள்:60

திரையுள்....
அன்று ஆச்ச‌ரியம் இன்று அய்யோ பாவம்
ரிலீஸாவதற்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்டது போலரிலீஸுக்குப் பின்பும் செய்திகளில் அடிபடுகிறது ஐஸ்வர்யா தனுஷின் 3. முன்பு பரபரப்பாக இப்போது ரிதாபமாக.
சென்னையில் 3 படத்துக்கு ஜினி படம் அளவுக்கு ஓபனிங் இருந்தது. முதல் மூன்று தினங்களில் 1.3 கோடியை வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இதன் சென்ற வார இறுதி வசூல் 12.8 லட்சங்கள் மட்டுமே. சென்னையின் நிலைமை இப்படியென்றால் பிற இடங்களின் நிலையை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக தெலுங்கில் 3 படத்தை நட்டிகுமார் 4.5 கோடிக்கு வாங்கினார். ஆனால் படம் ஒரு கோடியை வசூலித்தால் பெரிய விஷயம் என்கிறார்கள். படம் பெரும் நஷ்டம் என்பதை நட்டிகுமாரே ஒப்புக் கொண்டிருக்கிறார். கேரளாவிலும் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் இந்தியில் படத்தை வெளியிடவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
விஜய்யின் ‘துப்பாக்கி
விஜய் நடிக்க ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸும் ஹீரோ விஜய்யும்.
விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பெப்சிதயாரிப்பாளர் பிரச்சினை திரையுலகை பெருமளவு பாதித்தது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டாலும், துப்பாக்கி மட்டும் எந்தத் தடங்களும் இல்லாமல் ஜோராக முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!
பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.
இந்நிலையில், பில்லா-2 படத்தின் ஆடியோ ரிலீஸை இம்மாதம் இறுதியில் நடந்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதேபோல் படத்தையும் அடுத்த மாதம், அதாவது மே மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
சம்பளத்தில் முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா
கொலிவுட் சினிமாவில் விஜய்க்கு கதாநாயகியாக தமிழன் படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா.
இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உள்ளார். புதிதாக நடிக்க உள்ள சஞ்சீர் இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
 இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கைப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ.2 1/2 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர்.
 பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தை தான் பெற்று வந்தார். ஐஸ்வர்யாராய் தமிழில் வெளியான எந்திரன் படத்தில் ரூ.5 1/2 கோடி வாங்கியதாக கூறப்பட்டது.
ஹீரோயின் படத்தில் நடிக்க கரீனா கபூர் அதிக சம்பளம் வாங்கினார். இவர்களையெல்லாம் பிரியங்கா சோப்ரா மிஞ்சிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளன.


0 comments:

Post a Comment