ஆராய்ச்சியாளரின் செய்திகள்


நாய் வளர்ப்பவர்:. ஜப்பானில் டோக்கியோவின் கனகவா என்ற இடத்தில் உள்ள கிடாசோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்பட்ட 200 பேரிடம் ஆய்வு நடத்தினர்.
அவர்களில் நாய் வளர்ப்பவர்களின் இதயம் நல்ல திடகாத்திரமாகவும், மனதில் வேதனைகள் இன்றி லேசாக இருப்பதையும் கண்டறிந்தனர்.
அதே நேரத்தில் நாய்களை வளர்க்காதவர்களின் இதயம் பல குழப்பங்கள் மற்றும் வேதனைகளுக்குட்பட்டு இருந்தது.
நாய்களை வளர்ப்பவர்கள் இதய நோய் இன்றியும், நாய்களை வளர்க்காதவர்கள் இதயம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
 நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதன் மூலம் மன இறுக்கம் குறைவதே இதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இதயம் லேசாக, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? நாய்களை வளர்ப்பது சிறந்த வழி என்றும் அறிவித்துள்ளனர். பார்த்தீர்களா நாய்களின் மகத்துவத்தை?
பொன்னர் அம்மான்::அப்ப "சீ நாயே" எண்டும் ஒரு அவசரத்திற்கு எனிப்பேசிப் பயனில்லையாக்கும்!!!
தோப்புக்கரணம்:தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரீட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
பொன்னர் அம்மான்::பிள்ளையாருக்கு முன்னாலை தோப்புக்கரணம் போடு எண்டு சும்மாவா சொல்லி வைச்சாங்கள்   
குழந்தைகள் உணவு உண்ண:உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
பொன்னர் அம்மான்:: எப்பிடியோ!!பெற்றவளின்ரை  மனநலம் கெடாமலிருந்தா சரி.  
இரண்டு புதிய வகை இரத்தம்! :இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத்தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர்,
 இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த நிலையில் ABCB6,ABCG2 உள்ளடக்கிய 32 புரத மூலகங்களை பால்லிஃப் கண்டறிந்தார்
பொன்னர் அம்மான்:: பூ!இதென்ன கண்டுபிடிப்பு.இதைப் போல எத்தினை பிரிவுகளை நாங்கள் கண்டுபிடிச்சிருப்போம்.
மீன் உணவுகள்: நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.
தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
             இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.
              தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.
                  மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
பொன்னர் அம்மான்:: அப்ப மீன் சாப்பிடிறது புத்திசாலித்தனம் எண்டு சொல்லுறியள்
மனிதர்களை மரணிக்கமால் வாழவைக்க : இறக்காமல் தொடர்ந்து வாழ பலருக்கு பிடித்திருக்கும், பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியில் இருந்து இதுவரை யாராலும் தப்ப முடியவில்லலை. ஆனால் முடியும் என்று சொல்கிறார் 31 வயதாகும் இட்ஸ்கொஃப் என்ற இளைஞன்.இதற்காக அவதார் ஸ்டைலில் ஓர் திட்டத்தை தீட்டியிருக்கிறார். என்னவென்றால், செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலினுள் குறித்த மனிதனின் எண்ணங்களை மாற்றிவிடுவதுதான். இதற்கான ஆராட்சியில் சுமார் 100 விஞ்ஞானிகளை ஈடுபடுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 இவ் ஆராட்சிக்காக அமெரிக்க ராணுவத்தின் Defense Advance Research Projects Agency உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணிப்பின்படி இத்திட்டத்துக்கு 10 ஆண்டுகள் போதுமெனவும் தெரிவிக்கிறார். இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா, இல்லை கதைக்கு மட்டும் தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பொன்னர் அம்மான்::இந்தஉலகத்திலையா?வாழவா?ஐயோ!வேணாம்!

0 comments:

Post a Comment