பங்குனி மாதத்தில்………….
2012-03-08 அரவான்
நடிகர்கள்: ஆதி, தன்ஷிகா, பசுபதி, பரத், அஞ்சலி.
கதை: 18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.
கருத்து: அரவான் ஒரு அழகிய ஓவியம்.
புள்ளிகள்:60
2012-02-19 காதலில் சொதப்புவது எப்படி
நடிகர்கள்:சித்தார்த், அமலாபால்,சுரேஷ்,
கதை: சின்ன சின்ன விசயத்திற்காக சண்டைப் போட்டு பிரிந்து விடும் இன்றைய காதலை, நகைச்சுவை யோடு கலந்த கதை.
கருத்து:குத்து,வெட்டு,முட்டு இல்லாத படம்.
புள்ளிகள்:60
2012-02-19 முப்பொழுதும் உன் கற்பனைகள்
நடிகர்கள்: நடிகர்கள் : அத்ர்வா, அமலா பால், சந்தானம், நாசர்.
கதை: இன்னும் ஒரு காதல்
கருத்து: பொழுது போகலைன்னா ஒரு முறை சென்று பார்க்கலாம்.
புள்ளிகள்:45
திரையுள்…………………..
கமல் ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயரால், வெளிநாட்டு விமான நிலையங்களில் பல முறை அவர் அதீத சோதனைக்கு உள்ளாக்க பட்டிருக்கிறார். அந்த பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா ??? விக்கிபீடியா தகவலின்படி .....
சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன். சிறையில் இருந்த பிராமண எதிர்ப்பு தரப்பினரால் , அவருக்கு அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. அப்போது, ஸ்ரீநிவாசனை பாதுகாத்தது சிறையில் அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விடுதலை போராட்ட வீரர் யாகோப் ஹாசன். அவரின் நினைவாகத்தான் மகன்கள் அனைவருக்கும், சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் என்று பெயர் வைத்துள்ளார் ஸ்ரீநிவாசன் .
மீண்டும் புதுப்பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்...!
1960களில் நடிகர் திலகத்தின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படமான கர்ணன் படம், மீண்டும் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் முறையில் தயாராகியுள்ளது. பி.ஆர்.பந்தலு இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், அசோகன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா, நம்பியார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் நடிப்பில் வெளியான படம் கர்ணன். இதில் கர்ணனாக நடிகர் திலகம் நடித்திருந்தார் என்று சொல்லுவதை விட, அந்த மகாபாரத கர்ணன் எப்படி வாழ்ந்திருந்தான் என்பதை நம் கண்முன் நிறுத்தினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவருடைய நடிப்பு அளபரியது. பெற்ற தாய்கே வரம் அளித்த பெருமானாகவும், தர்மதேவனாகவும் அந்த படத்தில் தோன்றினார் நடிகர் திலகம்.
அப்படிப்பட்ட அந்த கர்ணன் படத்தின் சிறப்பை, இந்தக்கால தலைமுறையினரும் உணரும் விதமாகவும், அந்தப்படத்தை இயக்கி, தயாரித்து பி.ஆர்.பந்தலுக்கு இது 100வது ஆண்டும் என்பதாலும், அவரை கவுரவிக்கும் விதமாக இப்படத்தை, இந்தக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு டிஜிட்டல் முறையில் 5.1 சரவுண்ட் சிஸ்டத்தில் டி.டி.எஸ்., எபெக்குடன் மாற்றியுள்ளனர்.
புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ள படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
கோச்சடையானில் 'நாகேஷ்' நடிக்கிறார்
இன்னும் கொஞ்ச நாளைக்கு கோச்சடையான் கோஷம்தான் ஒலிக்கப் போகிறது நாடுமுழுக்க. ஏனென்றால் இது ரஜினி படம்.
படத்தை பற்றி வெளியான இன்னொரு செய்தி,மேலும் ஆச்சர்யத்தை து£ண்டியிருக்கிறது. கோச்சடையானில் ஏராளமான கிராபிக்ஸ் யுக்திகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதில் மிக முக்கியமானது இதுதான்.
தமிழ்சினிமாவில் யாராலும் அடைய முடியாத சாதனையை படைத்துவிட்டு மறைந்த நாகேஷை நடிக்க வைக்கப் போகிறார்களாம். இறந்தவர் எப்படி நடிக்க முடியும்? கிராபிக்ஸ் உதவியுடன்தான்.
படத்தில் வரப்போகும் இரண்டு ரஜினிகளுக்கும் இரண்டு நாகேஷ் நண்பர்களாக வரப்போகிறார்களாம். அதில் ஒருவர் காதலிக்க நேரமில்லை நாகேஷ். இன்னொருவர் பஞ்ச தந்திரம் நாகேஷ். இதற்கான வேலைகளை கர்மசிரத்தையோடு செய்து கொண்டிருக்கிறார்களாம் கிராபிக்ஸ் வல்லுனர்கள். ஒருவேளை இது சர்வ திருப்தியாக அமைந்தால், சிவாஜியும் எம்ஜிஆரும் கூட ரஜினியுடன் இணைந்து நடிக்கக் கூடும்.
வடிவேலுவே... அழைக்கிறது அமெரிக்கா
அமெரிக்க தமிழ் சங்கத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது வடிவேலுவுக்கு. அவர் பிஸியாக இருந்தபோதெல்லாம் கூட இதே அழைப்பு வந்ததாம் பலமுறை. ஆனால் இந்த முறைதான் அவரால் 'யெஸ்' சொல்ல முடிந்திருக்கிறது. காரணம் நாமெல்லாம் அறிந்ததுதான். இந்த விவகாரத்தை கிண்டி கிளறி மேலும் செப்டிக் ஆக்குவதை விட அடுத்தகட்ட செய்திக்கு போவதுதான் நல்லது.
இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதாக ஒப்புக் கொண்டாலும், விழா நடக்கும் இடம் வெள்ளை மாளிகைக்கு சற்று அருகில் என்பதால் ஏகப்பட்ட செக்யூரிடி பிராப்ளமாம். முன்னதாக வடிவேலு பற்றிய குறிப்புகளை கேட்டுவிட்டார்களாம் அதிகாரிகள்.
அதன்காரணமாக வடிவேலு நடித்த காட்சிகளை வீடியோ வடிவில் வழங்கினார்களாம் தமிழ் சங்கத்தினர். அவற்றையெல்லாம் பார்த்த அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்ததோடு முழு மனதோடு சம்மதமும் வழங்கிவிட்டார்கள்.
இதற்கிடையில் மலையாள நடிகர் முகேஷ் வடிவேலுவை சந்தித்தாராம். உங்கள் புதுப்படத்திற்காக எங்கள் நாடு வெயிட்டிங். எப்ப பிரச்சனையெல்லாம் சரி பண்ணிட்டு நடிக்கப் போறீங்க என்றாராம். அதற்கு பதில் தேடிதானே இப்போதும் அலைந்து கொண்டிருக்கிறது வைகைப்புயல்.
No comments:
Post a Comment