ஒளிர்வு-(16) பங்குனி த்திங்கள்-2012

தளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி,/செய்-செய்யாதே!,/கனடாவில்........ /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/யாழ்ப்பாணத்தார்,/மறுத்துச் சொல்லாமல்மறுக்கும்கலை,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,/சினிமா. TO CONTACT-manuventhan@hotmail.com or theebam facebook  ...

சிந்தனை ஒளி:

நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். முன்போக்கி செல்லும்போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. ரொம்ப விளக்க வேண்டியதில்லை.நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை. யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?இரண்டாகத்தோண்டு.உனக்கும் சேர்த்து. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல....

ஆராய்ச்சியாளரின் செய்திகள்

நாய் வளர்ப்பவர்:. ஜப்பானில் டோக்கியோவின் கனகவா என்ற இடத்தில் உள்ள கிடாசோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்பட்ட 200 பேரிடம் ஆய்வு நடத்தினர்.அவர்களில் நாய் வளர்ப்பவர்களின் இதயம் நல்ல திடகாத்திரமாகவும், மனதில் வேதனைகள் இன்றி லேசாக இருப்பதையும் கண்டறிந்தனர். அதே நேரத்தில் நாய்களை வளர்க்காதவர்களின் இதயம் பல குழப்பங்கள் மற்றும் வேதனைகளுக்குட்பட்டு இருந்தது. நாய்களை வளர்ப்பவர்கள் இதய நோய் இன்றியும், நாய்களை வளர்க்காதவர்கள் இதயம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதன் மூலம் மன இறுக்கம்...