சிரிக்க...சிரிக்க...

         

01

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?

02

Ø  அவ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?

Ø  ப‌ல் ஆடுது‌ன்னு இ‌ந்த டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட சொ‌ன்னது‌க்கு, பரதநா‌ட்டியமா? கு‌ச்சு‌ப்புடியா‌ன்னு கே‌க்‌கிறா‌ரு.

03

மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுந்து இடம்  கொடுக்க சொன்னாரு!

அம்மா : நல்ல விசயம் தானே!

மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

04

Ø  உன் கணவரை எதுக்கு கண்,மண் பாராமல் அடித்தாய்?

Ø  நான் போன் பண்ணினா 'கொரோனாவே' என்ற  பாடலை  செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

05

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை, சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!

06

Ø  எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"

Ø  "ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி .எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்.

07

Ø  எங்கம்மாவுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. என் மனைவிக்கு தெரியாது..

Ø  ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?

Øஇல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா...

08

புலவர்01: நான் மன்னரை புகழ்ந்து பாடியதற்கு 100 பொற்காசுகள்  தானே வழங்கினார். உனக்கு எப்படி 200 பொற்காசுகள் கிடைத்தது?

புலவர் 02: நான் மகாராணியை திட்டிப் பாடினேனே?

09

மனைவி : ஏங்க , நான் போட்ட கோப்பியை குடிச்சிட்டு உங்க நண்பர் என்னங்க சொன்னார்?

கணவன்: இதெல்லாம் குடிச்சிட்டு ,எப்பிடிடா உயிர் வாழுறே? எண்டு ஆச்சரியப்பட்டான்!

10

ஆசிரியர்:''தட்டுங்கள் திறக்கப்படும்'' என்று யேசு ஏன் கூறினார்?

மாணவன்: அந்தக்காலத்தில எல்லாம் காலிங் பெல் கிடையாது சேர் ,அதுதான்

ஆசிரியர்: ???

11

நோயாளி: காதில றெயின் ஓடுற சத்தமாக இருக்கு சேர்

டொக்ரர் : [பரிசோதித்துவிட்டு] அப்படி ஒன்றும் கேக்கலையே!

நோயாளி : அப்போ! ஏதாவது சிக்னலிலை றெயின் நிண்டிருக்குமோ சேர்?

டொக்ரர் : ????

12

டொக்ரர் : [மனைவியிடம்]ஏங்க ,உங்க கணவருக்கு நாய் பலமாய் கடிச்சிருக்கே, முதலுதவி என்ன செய்தீங்க?

மனைவி:அந்த நாய்க்கு ஒரு பிரியாணி பார்சல் வாங்கிப் போட் டேன்  டொக்ரர்.

டொக்ரர் : ???

13

மாப்பிளவீட்டுக்காரர்:மணப்பெண்ணை எப்படித் தலை குனிந்து இருக்க வைச்சீங்க?

பெண் வீட்டுக்காரர்:பெண் கையில செல் போனைக் குடுத்திட்டோம்ல!

14

நோயாளி: ராத்திரி ஆனா பேசமுடியலை  டொக்ரர்.

டொக்ரர்: ஆனா பேசமுடியலை என்றாலென்ன!, ஆவன்னா, இனா, ஈயன்னா எண்டு பேசுங்களேன்?

நோயாளி: ???

15

தலைவர் உரை : ஊர்ல இருக்கிற நதி களுக்கெல்லாம் பொண்ணுங்க பெயரை வச்சிட்டு ''இணை,இணை'' என்றால் இப்படி இணையும்!

16

ஒருவர்:[வீதியில்] ஹலோ சார்,உங்களை எங்கோ கண்டமாதிரி இருக்கே, பேஸ்புக்ல இருக்கீங்களா?

மற்றவர்: இல்லையே!

ஒருவர்: டுவிட்டர் , இன்ஸடகிரம் இலை?

மற்றவர்: இல்லையே!

ஒருவர்:என்ன சார்? உங்களை அடிக்கடி பார்த்த முகமா இருக்கே, எங்க சார் இருக்கீங்க?

மற்றவர்: உங்க வீட்டு மேல் மாடியிலதான் 10 வருஷமாய் றென்ருக்கு இருக்கேன் சார்.

ஒருவர்: !!!!

17

வேலு:காதல் ,உன்ர ராசிக்கு வெகு சீக்கிரம் கை கூடும் என்று சாஸ்திரி சொன்னதிலையிருந்து உன்ரை தாத்தா படு குஷியாய் இருக்காரே ,ஏனடா?

பாலு: அவரும் என்ர ராசிதானே!

18

சோமர்: சுகாதார விஷயத்தில என் மனைவியை யாரும் மிஞ்ச முடியாது!

ராமர்: எப்பிடி?

சோமர்: பலகைக் கட் டையை என்மேல வீசும் போது கூட  'சானிடைசர்' பூசிவிட்டு தான் வீசுவாள்.

19

போலீஸ்: ஏன்யா, அந்த புடவைக் கடையில வெடிகுண்டு என்று புரளியைக் கிளப்பி விட்டாய்?

மற்றவர்: கடைக்குள்ள போன என் மனைவியை வெளியில கொண்டுவர வேறு வழி தெரியலையே சார்.

21

மாலதி: டாக்ரரிட்டை போனாயே என்ன சொன்னாரு?

கோமதி: கொரோனா டெஸ்ட் எடுக்கணுமாம், எடுத்தாத் தான் தெரியுமாம், டெஸ்ட் க்கு 5000.00  கட்ட வேணுமாம்.

மாலதி: ஐயையோ! அப்புறம்!

கோமதி: ''அச்சு'' என்று டொக்டர் முஞ்சைக்கு நேர தும்மியிற்று வந்திட்டன். இப்ப அவரு டெஸ்டுக்கு போயிருக்காரு. அவருக்கு றிசல்ற் பாஸிட்டிவ் எண்டா எனக்கும்  பாஸிட்டிவ் , அவருக்கு நேகரிவ் எண்டா எனக்கும் நேகரிவ்

22

கருத்தம்மா: என்னடி, பக்கத்து வீட்டில புதினமாயிருக்கு ,மாமியாரைத் தேடி இன்னைக்கு மருமகள் வந்திருக்கா?

செல்லம்மா:ஒண்ணுமில்லைடி, மருமகள் கொரோனா டெஸ்ட் க்குப் போய் பாஸிட்டிவ் வாம்.

தொகுப்பு:செமனுவேந்தன் 

No comments:

Post a Comment